அரசு நிறுவனமான டாஸ்மாக் அலுவலகங்கள் அது தொடர்புடைய பல்வேறு நிறுவனங்கள் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை ஆறாம் தேதி சோதனை நடத்தியது.
சோதனை நிறைவடைந்ததும் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் கணக்கில் வராத பணம் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது
. டாஸ்மாக் பணியாளர்களை பணி அமர்த்துதல், டெண்டர் ஒதுக்கீடு, பார் வழங்கும் உரிமம் டெண்டர் ஒதுக்கீடு, கடைகளில் விற்பனையாகும் ஒவ்வொரு மதுபாட்டிலுக்கும் பெறப்பட்ட ரூபாய் 10 முதல் 30 வரையிலான கூடுதல் தொகை, டிஸ்டிலரீஸ் மற்றும் பாட்டில் கம்பெனிகளில் நடந்த முறைகேடுகள் பற்றி பெரிய பட்டியலே அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுவதற்கு சில தினங்களுக்கு முன்பு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாக முறைகேடுகள் நடந்திருப்பதை அமலாக்கத்தை கண்டுபிடித்திருக்கிறது என்ற செய்தியை நிருபர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டதும் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே ஒருவர் ஆயிரம் கோடி முறைகேடு என்று சொல்கிறார்.
இப்போது அதே மாதிரி அறிக்கை வெளியாகி இருக்கிறது.
இதிலிருந்து அமலாக்க துறையை வேறு யாரோ இயக்குகிறார்கள் போல் தெரிகிறது.
எந்த முறைகேடும் நடைபெறவில்லை எல்லாவற்றையும் நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
அமலாக்கத்துறை சோதனை நிறைவு அடைந்ததும் அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான அதிகாரிகள் நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆகியோரை ஒரு நட்சத்திர ஓட்டலில் அழைத்து ஆலோசனை நடத்தினார்
செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறை என்னென்ன கேட்டார்கள் நீங்கள் என்னென்ன பதில் சொன்னீர்கள் எந்தெந்த ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்று இருக்கிறார்கள் போன்ற விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்ப அமலாக்கத்துறை தயாராகி இருக்கிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும்போது மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்ட பிறகும் சென்ற ஆட்சியில் செய்த அதே முறைகேடுகள் புதிதாக தற்சமயம் டாஸ்மாக்கில் செய்திருக்கிறார் என்று ஆதாரங்களை தாக்கல் செய்து அவர்கள் ஜாமீன் ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேட்க இருக்கிறது.
அடுத்து அமலாக்கத்துறை மின்சாரத் துறையிலும் செந்தில் பாலாஜி முறைகேடுகள் பற்றிய விவரங்களை சேகரிக்க தொடங்கி இருக்கிறது விரைவில் மின்சார வாரிய அலுவலகத்திலும் அமலாக்கத்துறை சோதனை நடக்க இருக்கும்.
அமலாக்கத்துறை சோதனையைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், எடப்பாடி ,அண்ணாமலை என்று எல்லோரும் ரவுண்டு கட்டி இந்த பிரச்சினையை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
Leave a comment
Upload