இன்று மார்ச் 22, 2025
சுப யோகம் கூடிய சுபதினமான இன்று ஐபிஎல்லின் 18 ஆம் வருஷ கொண்டாட்டங்கள் துவங்குகின்றன. வரும் மே 25, 2025 முடிகின்றன. மொத்தம் 74 மேட்ச்கள். வார இறுதி நாட்களில் நாளொன்றுக்கு இரண்டு மேட்சுகளும் மற்ற நாட்களில் நாளொன்றுக்கு ஒரு மேட்ச் வீதம் நடைபெறும். மதியம் முதற்கொண்டே கிரிக்கெட் டீவீ சானல்கள் நள்ளிரவு வரை அலற ஆரம்பித்துவிடும்.
ஐபிஎல் பராக் பராக்.
இன்று முதல் மேட்ச் ஆட்டத் துவக்கத்திற்கு முன்னால் பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டானி குழுவினரின் டான்ஸ். ஷ்ரேயா கோஷால் பாடுகிறார்.
இது மாதிரியே ஒவ்வொரு கிரௌண்ட்டில் முதல் மேட்ச் ஆட்டத் துவக்கத்திலும் இது மாதிரி ஆடலும் பாடலும் கேளிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதனால் தான் இது கிரிக்கெட் போட்டிகள் இல்லை. திருவிழா !!
இந்தியாவில் கிரிக்கெட் இன்னொரு மதம். இங்கு மட்டுமே பாகுபாடுகள் இல்லை.ஏற்றத் தாழ்வுகள் இல்லை.
ஹார்திக் பண்ட்யா - மும்பை இண்டியன்ஸ், ருதுராஜ் கைக்வாட் - சென்னை சூப்பர் கிங்க்ஸ், அஜிங்க்ய ரஹானே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ், அக்ஸர் படேல் - டெல்லி கேப்பிடல்ஸ், பேட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ரஜத் பட்டிதார் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சஞ்சு சாம்சன் – ராஜஸ்தான் ராயல்ஸ், ரிஷப் பந்த் - லக்னௌ சூப்பர் ஜையண்ட்ஸ், ஷுப்மான் கில் – குஜராத் டைட்டன்ஸ், ஷ்ரேயாஸ் அய்யர் - பஞ்சாப் கிங்க்ஸ் என கேப்டன் - டீம் வரிசையில் 10 டீம்கள் ஆடுகின்றன. ஹைதராபாத் டீம்ம்முக்கு மட்டும் தான் வெளிநாட்டவர் கேப்டனாக இருக்கிறார்.
ரூ25 கோடிக்கும் மேல் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் லக்னௌவின் கேப்டன் ரிஷப் பந்த் ($3.2மில்லியன்), கொல்கத்தாவின் வெங்கடேஷ் ஐய்யர் ($3.17மில்லியன்). குஜராத் டைட்டன்ஸ் டீமின் $1.8 மில்லியன்க்கு ஏலத்தில் வாங்கப்பட்ட இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் தான் காஸ்ட்லி வெளிநாட்டு இறக்குமதி.
ரவுண்ட் ராபின் அல்லது லீக் முறை போட்டிகளில் ஒவ்வோரு டீமும் மற்ற ஒன்பது டீம்களோடு இரண்டு முறை மோதிக்கொள்ளும். ஜெயிச்சால் இரண்டு பாயிண்ட், முழுவதுமாக ஆட முடியவில்லை எனில் சம்பந்தப்பட்ட டீம்களுக்கு தலா ஒரு பாயிண்ட் என்பது பாயிண்ட் மார்க் போடும் விதி.
இந்த பத்து டீம்களும் தன்னுடைய சொந்த பிட்ச் என்று உள்ள கிரௌண்டிலும் எதிர் டீமின் சொந்த பிட்ச்சிலும் ஆடுவார்கள். இப்படியாக 10 கிரௌண்டுகளும் கூட விசாகப்பட்டினம், கௌஹாத்தி, தர்மசாலா என்ற கிரௌண்டுகளும் சேர்க்கப்பட்டு அதற்கேற்றார்போல் மேட்சுகளும் அமைக்கப்பட்டுவிட்டன.
இதில் உருவாகும் முதல் நான்கு அதிக பாயிண்டுகள் எடுத்த டீம்கள் அடுத்த க்வாலிஃபையர், எலிமினேடர் முறை ஆட்டங்களின் மூலம் ஃபைனலுக்கு இரண்டு டீம்கள் உருவாகும்.
இதில் பாதுகாப்பு வசதிகளுக்காக அந்தந்த மாநில அரசுகளும் இதில் அனுமதி வழங்கியுள்ளன. ஏப்ரல் 6 ஆம் தேதி கொல்கத்தா நடக்க இருந்த மேட்ச் கௌஹாத்திக்கு மாற்றப்பட்டுள்ளது.
கொல்கத்தா Vs பெங்களூரு மேட்ச் வருண பகவான் கையில் தான் உள்ளது. நேற்று செம மழை பெய்திருக்கிறது. போகப் போகத் தான் நிலைமை தெரியும்.
சென்னையும் மும்பையும் தலா ஐந்து முறைகள் இந்த கப்பை பெற்றுள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜெர்ஸ் (இன்று அதன் பெயர் சன்ரைசர்ஸ்), குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா ஒரு முறை இந்த கப்பை முகர்ந்துள்ளன.
இடையில் குரூப்புகளாக பிரித்தும் ஆடப்பட்டது இந்த தொடர் என்பது வரலாறு.
மே 25 அன்று கொல்கத்தாவில் அந்த ஃபைனல் டீம்கள் மோதிக்கொண்டு ஜெய்த்தவர் பெறும் வெகுமதி $2.32மில்லியன், ரன்னர்அப்புக்கு $1.5 மில்லியன், மூன்றாவது இடத்திற்கு $8,10, 800, நான்காம் இடத்தைப் பிடிப்பவர்க்கு $7,52,894.
இந்த தொடரில் முக்கிய பேசு பொருள்கள்:
ஜஸ்ப்ரீட் பும்ராவின் ஃபிட்னஸ்,
கடந்த 17 வருடங்களாக ஒன்பது முறை ஃபைனலுக்கு வந்தும் கப்பைத் தூக்காத பெங்களூரு டீம், தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஏலத்திற்கு தன்னை விற்றுக்கொண்டு போன வருடம் ஆட வராமலிருந்த, இந்த வருடம் “நா மாட்டேன்” என்ற இங்கிலாந்தின் ஹேரி ப்ரூக் இனி அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஐபிஎல்லில் ஆட முடியாத தடை. இத்தனைகும் அவருக்கு இந்த 8 வார சம்பளம் ₹ 6.28 கோடி. வெளிநாட்டு பிளேயர்களும் இது சரி தான் என்றும் கூறி வருகின்றனர். இந்த சம்பளம் என்ன குறைச்சலா என்பது அவர்களின் வாதம்.
2023ஆம் வருடத்திலிருந்து இம்பேக்ட் பிளேயர் ரூல் வந்ததிலிருந்து இந்த ஐபிஎல்லில் டீமில் 12 பிளேயர்கள் ஆடுகிறார்கள். அதாவது இரண்டு இன்னிங்க்ஸில் மொத்தமாக பார்க்கையில் எந்த தேர்ந்தெடுக்கப்பட்ட இன்னிங்க்ஸில் ஒரு பிளேயர் மாற்றப்பட்டிருப்பார்.
மும்பை இண்டியன்ஸ் Vs சென்னை சூப்பர் கிங்க்ஸின் முதல் மேட்ச்சில் ஹார்திக் பண்ட்யா ஆட முடியாது, அவருக்கு பதிலாக இந்தியாவின் T20 டீமின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கப் போகிறார். காரணம் போன வருட தொடரில் கடைசி மேட்ச்சில் ஸ்லோ போலிங்க் செய்ததால் ஒரு மேட்ச் சஸ்பென்ஷன் கேப்டனுக்கு தண்டனை” என்ற விதி தன். விதி வலியது என்று அன்றே சிவாஜி பாடிவிட்டார் அல்லவா.
ராஜஸ்தான் ராயல்ஸின் 13 வயது வைபவ் சூர்யவான்ஷி தான் இந்த ஐபிஎல்லின் வரலாற்றிலேயே குறைந்த வயதுடையவர்.
லக்னௌ கேப்டன் ரிஷப் பந்த்தும் அந்த டீமின் அத்பர் சஞ்சிவ் கோயங்காவும் உத்திர பிரதேசத்தின் முதல்வர் யோகி அதித்யனாத்தின் ஆசீர்வாதம் பெற்று வந்திருக்கிறார்கள்.
ஷம்மியின் யோசனையை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வருடம் பந்தில் எச்சிலைத் தடவி மெருகேற்ற ஓகே சொல்லிவிட்டது. நல்லா துப்பி துடைச்சு விளையாடுங்கப்பா !! என்ன அனுமதியோ.
விகடகவியின் இந்த இதழ் திருவிழாவின் முதல் நாளில் வலையேற்றப்படுகிறது...
மே மாதம் வரை ஐ.பி.எல்லின் சுவாரஸ்யங்கள் விகடகவியில்...... தொடர்ந்து படியுங்கள் !!
Leave a comment
Upload