தொடர்கள்
சினிமா
சினிமா சினிமா சினிமா - லைட் பாய்

குய்க்கோ

20231017173226323.jpeg

குய்கோ யதார்தனமான சமூக நையாண்டி படத்தின் கதையில் யோகிபாபு வளைகுடா நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் பணி செய்பவர். மலைக்கிராமத்தில் வசிக்கும் தனது தாயின் இறந்த செய்தி கேட்டு தாய்நாடு வருகிறார்.யோகி பாபு ஊருக்கு திரும்பும் வரை அவரது தாயார் உடல் “பிரீஸர் பாக்ஸ்” வைத்திருக்கிறார்கள் அந்த பிரீஸர் பாக்சை கொண்டு வந்த விதார்ததுக்கும் ஊர்க்காரர்களுக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.ஊருக்கு யோகி பாபு வரும் வரை வதார்த் காத்து இருக்கிறார் …அதன்பின் கதை எப்படி போகிறது என்பது தான் படத்தின் சுருக்கமான கதை . குய்கோ திரைப்படம் ப்ரீஸர் பாக்ஸ் பின்னணியில் தான் திரைக்கதை பின்னப்பட்டிருப்பது திரையுலகத்திற்கு இது புதியது என்கின்றனர் சினிமா துறையினர். விதார்த் யோகி பாபு இளவரசு ஸ்ரீ பிரியங்கா துர்கா, வினோதினி, வைத்தியநாதன் ஆகியோர் நடிக்கும் படத்துக்கு பெயர் குய்க்கோ.

2023101717330689.jpeg

குடியிருந்த கோயில் என்பதைத்தான் சுருக்கி குய்க்கோ என்று வைத்திருக்கிறோம் என்கிறார் பத்திரிக்கையாளர் இயக்குனர் டி.அருள்செழியன்.

கங்கனா ரனாவத்

20231017182634630.jpeg

​வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரியங்கா காந்தி தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து பாரதிய ஜனதா நடிகை கங்கனா ரனாவத்தை நிற்க வைக்க திட்டமிட்டு இருக்கிறது.

கீர்த்தி சுரேஷ்

20231017182704562.jpeg

​கீர்த்தி சுரேஷ் ஆரம்பத்தில் முன்னணி நடிகர்களுடன் நட்பில் இருந்தார். அதனால் பட வாய்ப்புகள் கிடைத்தது. இப்போது அந்த திட்டம் சரியாக ஒர்க் அவுட் ஆகாதால் இயக்குனர்களுடன் நட்பில் இருக்கிறார். அவர்கள் மூலம் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

இ -மெயில்

20231017182738196.jpeg

​கன்னட நடிகை ராகினி திவேதி நடிக்கும் படம் பெயர் இ-மெயில் .ஹீரோயினிக்கு வரும் இ-மெயிலில் குறிப்பிட்ட லிங்கை கிளிக் செய்து விளையாடினால் மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது என்று சொல்லியதை தொடர்ந்து விளையாடிய போது ஒரு மாஃபியா கூட்டத்தில் சிக்குகிறார் இதுதான் கதை.

நயன்தாரா

20231017182806462.jpeg

​நயன்தாரா நடிக்கும் 75-வது படத்துக்கு அன்னபூரணி - தி காட் டெஸ் ஆஃப் ஃபுட் என்று பெயர் வைத்துள்ளார்கள். ஜெய் சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், குமாரி சச்சு ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் நீிலேஷ் கிருஷ்ணா

வித்தைக்காரன்

20231017184649130.jpg

​நாய் சேகர் படத்துக்கு பிறகு காமெடி நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் படத்துக்கு பெயர் வித்தைகாரன். இவருக்கு ஜோடி சிம்ரன் குப்தா. இது ஒரு பிளாக் காமெடி கதையாம்.

மாளவிகா மோகனன்

20231017183138953.jpeg

​விக்ரம் மாளவிகா மோகனன் நடித்த தங்கலான் டீசர் வெளியிட்ட அதே வேளையில் வெள்ளை சேலையில் தண்ணீரில் நனைந்தபடி போஸ் கொடுத்த படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் மாளவிகா. கூடவே எனக்கு கவர்ச்சியின் எல்லை தெரியும். 20 வயதில் தான் இது போல் காட்சியளிக்க முடியும் 40 வயதில் முடியாது என்று விளக்கம் சொல்லியிருக்கிறார் மாளவிகா.

வாமிகா கப்பி

​சமீபத்தில் ஒரு படத்தில் ஹீரோ உடன் லிப் டு லிப் முத்தக்காட்சியில் நடித்தேன். அப்போதும் சரிஇப்போதும் சரி ஹீரோவுக்கு முத்தம் கொடுக்கும் போது நான் சிலிர்த்துப் போகிறேன். அதை நடிப்பாகப் பார்க்கிறேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது என்கிறார். மாலை நேரத்து மயக்கம் படம் நாயகி வாமிகா கப்பி.

தனுஷ் ஜோடி

2023101718342973.jpg

​தனுஷின் 51-வது படத்தில் அவருக்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா இயக்குனர் சேகர் கம்முலா இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

விஜய்

2023101718321740.jpeg

​வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடக்கிறது அதிரடி சண்டைக் காட்சிகள் தாய்லாந்தில் படமாக்கப்பட்டது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்ததால் விஜய் சென்னை திரும்பினார்.