தீபாவளி அதிகாலை 3 மணியளவில் நீலகிரி குன்னூரில் அட்டடி அருகில் புரூக் லேண்ட்ஸ் பகுதியில் உள்ள பங்காளவினுள் சிறுத்தை புகுந்து மிக பெரிய பயங்கர தாக்குதலை நடத்தியது என்ற அதிர்ச்சி தகவல் நீலகிரியை உலுக்கியது .
விமலா என்பவரின் பங்களாவினுள் அதிகாலை நுழைந்த சிறுத்தை விமலாவை தாக்கி மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், வருவாய் அலுவலர், ஒரு பத்திரிகையாளர் என்று ஆறு பேரை தாக்கி பயமுறுத்தியது .
அந்த பங்காளவினுள் எப்படி சிறுத்தை அதுவும் அதிகாலை நுழைந்தது என்ற கேள்வி அனைவரையும் குழப்பியது .
வீட்டின் உரிமையாளர் விமலா தன் வளர்ப்பு நாயை வெளியே கூட்டி செல்ல கதவை திறக்க எதிர்பாராத விதமாக சிறுத்தை வீட்டினுள் புகுந்து பதுங்கியது .
ஒரு அறையில் சென்ற சிறுத்தையை அடைத்து விட்டு, காவல் துறை தீயணைப்பு துறைக்கு தகவல் பறக்க அவசரமாக பங்களாவுக்கு வந்து ஆய்வு செய்தனர் .
வீட்டில் இருந்த நான்கு பேரும் ஒரு அறையில் தஞ்சம் புகுந்தவுடன் வீட்டினுள் பதுங்கியிருந்த சிறுத்தையை தேடி செல்ல மீட்பு குழுவினரை எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமாக தாக்கியது அந்த சிறுத்தை .
மீட்பு குழுவினர் எந்த பாதுகாப்பு யுக்திகள் இல்லாமல் சென்றது தான் புரியவில்லை .
குட்டி என்ற ஒரு தீயணைப்பு வீரரின் மேல் தாவி முகத்தை தாக்கிய சிறுத்தை ஆறு பேரை தாக்கி ஒரு பத்திரிகையாளருக்கு கால் முறிவு ஏற்பட்டது .
பின்னர் ஒரு வழியாக வீட்டின் உரிமையாளர் நான்கு பேரை மீட்டு வெளியே கொண்டுவந்த பின் கண்காணிப்பு கேமெரா மற்றும் வீட்டின் மேல் கூரையை அகற்றி பதுங்கிய சிறுத்தையை பிடிக்கும் முயற்ச்சி தோல்வியில் முடிய .
அன்று இரவு ஒரு மணி அளவில் ஸ்லோ மோஷனில் பங்களாவை விட்டு வெளியேறியது அந்த ஆக்ரோஷ சிறுத்தை .
என்ற நிம்மதி பெருமூச்சி இருந்தாலும் மீண்டும் சிறுத்தை வரலாம் என்று கூறுகிறார்கள் .
புரூக் லேண்ட் பகுதி அடர்ந்த வன பகுதி அதிகமான தெரு நாய்கள் சுற்றி திரியும் பகுதி நாய்களை கவ்வி செல்ல தான் சிறுத்தைகள் வருவது வழக்கம் நாய்கள் மாயமாக செல்வதும் வாடிக்கை .
இந்த பங்காளவினுள் தெரு நாய்களும் அடைக்கலம் .அவர்கள் வீட்டினுள் வளர்க்கும் நாய்களும் உண்டு .
நாய்களை மோப்பம் விட்டு தான் சிறுத்தையின் அத்துமீறிய விசிட் என்று கூறப்படுகிறது .
எப்படியோ வீட்டு உரிமையாளரும் மீட்பு குழுவும் சிறுத்தையிடமிருந்து தப்பித்தார்கள்.
நீலகிரியின் தீபாவளி மூடை கலைத்து விட்டு எஸ்கேப் ஆனது அந்த ஆக்ரோஷ சிறுத்தை .
நாம் பாதிக்கப்பட்ட பங்களா உரிமையாளர் விமலாவை தொடர்பு கொண்டு பேசினோம் .
நாங்க இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை .இது தான் எங்க வீட்டில் ஏற்பட்ட முதல் பயங்கர நிகழ்வு இறைவன் காப்பாற்றிவிட்டார் என்று நடந்த பயங்கரத்தை கூறினார் .
ஞாயிற்று கிழமை அதிகாலை எங்க வீட்டில் இருக்கும் நாய்கள் குலைத்துக்கொண்டே இருந்தன .என் வீட்டில் என்னுடன் இருந்த என் டோலி இரவு ஒரு மணிமுதல் வெளியே போக வேண்டும் என்று தொந்தரவு செய்தான் நான் எதற்கு இந்த இரவில் வெளியே போகவேண்டும் என்று படுத்துஇருந்தேன் இவன் போய்தான் ஆக வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் பின் பக்கம் கதவை திறக்க யாரோ கதவை தள்ளுவதை உணர்ந்தேன் டோலிக்கு தெரிந்து விட்டு சற்று பயத்தில் என் பின் ஒதுங்க கதவை தள்ளிக்கொண்டு பாய்ந்து உள்ளே நுழைந்தது ஒரு சிறுத்தை என்று உணர்ந்து
பார்ப்பதற்குள் வீட்டின் மாடிக்கு சென்று பதுங்கியது .அதை பார்த்தவுடன் நான் கத்திவிட்டேன் என் சப்தத்தை கேட்டவுடன் என் மகன் ட்ரெவேர் தன் நண்பனுடன் அவன் பெட் ரூமில் உறங்கிக்கொண்டிருந்தான் அவன் வெளியே வந்து லைட்டுகளை போட நான் கிச்சன் அருகில் நிற்க மீண்டும் மேலிருந்து பாய்ந்து என்னைநோக்கி வர நான் ஓட அதன் பின் கால் என் மேல் உராச அதன் நகம் பட்டு கீரி விட்டது .பின் கிச்சனில் ரௌண்டடித்து மீண்டும் மேலே சென்று பெட் ரூமில் நுழைந்த சிறுத்தையை என் மகன் கதவை சாத்தி பிடித்து கொண்டான் .அதற்குள் என் மகள் கிறிஸ்டினா அவளின் பெட் ரூமில் இருந்து வந்து நிலமையை புரிந்து பிரண்ட் டோரை திறந்து விட்டாள் உடனே போலீஸ் மற்றும் பிரண்டுகளுக்கு போன் செய்துவிட 4.30 மணிக்கு போலீஸ் பயர் சர்வீஸ் வந்தனர் .
வந்தவர்களில் ஒருவர் சிறுத்தை இருந்த கதவு அருகில் சென்று ' 'என்னடா சிறுத்தை வாடா வெளியே ' என்று கூலாக கூப்பிட எதோ கிண்டல் அடிக்கிறார் எங்களின் பயம் போக என்று நினைத்து கொண்டோம் .
என் மகனிடம் நீ கதவை விட்டுவிட்டு நீங்க நாலு பேரும் மற்ற ரூமில் போய் சாத்தி கொண்டு உட்காருங்கள் என்று கூறி விட்டு அந்த கதவை தன் கையால் பிடித்து கொண்டார் .
வந்தவர்கள் ஒரு பேக் மாட்டி கொண்டு வந்தனர் அதில் வலை இருக்குமோ என்று நினைத்தேன் .பின் தான் எந்த பாதுகாப்பு பொருள்கள் எடுத்து வரவில்லை என்று .
காலை ஒரு டீம் உள்ளே வந்து கூலாக ஆராய்ச்சி செய்ய சிறுத்தை அவர்கள் மேல் பாய்ந்து ஆறு பேருக்கு பலத்த காயம் .ஒருவரின் முகத்தில் தாக்கி விட்டு மீண்டும் பதுங்கியது .
எங்களை பத்திரமாக ஜன்னலை உடைத்து வெளியேற்றினார்கள் .
ஏதேதோ யுக்திகளை கையாண்டார்கள் சிறுத்தை வெளியே வந்த பாடில்லை
காயப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர் .
வனத்துறை அதிகாரிகள் என்று யார்யாரோ வந்தனர் சிறுத்தை இவர்கள் கையில் சிக்கவில்லை .
அன்று முழுவதும் பட்டாசு சப்தம் வேறு வெளியே வரவில்லை .எல்லோரும் காத்திருக்க இரவு பதினோரு மணிக்கு மேல் எல்லா சப்தமும் அடங்கிய பின் மெதுவாக வெளியெ வந்து கிரேட் எஸ்கேப் ஆனது சிறுத்தை .
பெரிய உயிர் ஆபத்தில் இருந்து இறைவன் காப்பாற்றியுள்ளார் .
நாங்கள் எங்க உறவினர் வீட்டில் இருக்கிறோம் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை .
எங்க வீட்டில் உடைக்கப்பட்ட கூரை ஜன்னல் கதவு என்று அனைத்தையும் சரி செய்யவேண்டும் இன்னும் பயம் தான் .மீண்டும் அது வருமா என்று .அந்த சிறுத்தை சிறியது என்கின்றனர் .என்னை பொறுத்த மட்டில் பெரியது தான் .
இதுவரை நான் பார்க்காத ஒன்று அது .
அந்த நேரத்தில் என் மகன் மகளுக்கு எப்படி தைரியம் வந்தது என்பது புரியாத புதிர் .
என்று ஒரு வித அதிர்ச்சி நடுக்கத்தில் பேசினார் விமலா .
இயற்கை ஆர்வலர் ஷோபனா சந்திரசேகர் கூறுகிறார் குன்னூரில் அதிகமாக தெரு நாய்கள் உள்ளன அதனால் தான் லெப்பர்ட் நகர் பக்கம் வருகிறது .
ஊட்டி ரோஸ்மவுண்ட் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வருவது சகஜமாகிவிட்டது இதுவும் பெரிய ஆபத்து தான் என்கின்றனர் .
அண்மையில் நமக்கு கிடைத்த ஒரு வீடியோ ஒரு வன பகுதியில் சாராய உரலில் சரக்கை சுவைத்த ஒரு சிறுத்தை கிக்கில் தள்ளாடி செல்ல அந்த பகுதி இளம் வட்டம் சிறுத்தையை தடவி கொடுத்து செல்ஃபீ எடுத்து நடப்பது ஒரு அதிர்ச்சி மற்றும் ஆச்சிரியமான ஒன்று .
அதே சமயம் குன்னூர் பங்களாவுக்குள் நுழைந்த சிறுத்தை பயங்கரமான ஒன்று .
மீட்பு குழுவினர் சிறுத்தையை கவர் செய்ய செல்லும்போது எந்த பாதுகாப்பு யுக்தியும் இல்லாமல் சென்றது ஏனோ .
அவர்களுக்கு சிறுத்தையால் தீபாவளி கொண்டாட்டம் பறிபோனது வருத்தமான ஒன்று .
அதே சமயம் எவர் உயிருக்கும் ஆபத்து இல்லை என்பது ஆறுதலான தகவல் .
Leave a comment
Upload