தொடர்கள்
சோகம்
மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் குரல் ஓய்ந்துவிட்டது . -ஸ்வேதா அப்புதாஸ் .

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒட்டு மொத்த பாதுகாப்பை அவ்வப்பொழுது உறுதி படுத்தி

20230828144840419.jpg

அதிகாரிகளை எச்சரிக்கையுடன் இருக்க தன் குரலை கொடுத்து வந்தவர் தான் தமிழக பசுமை இயக்க செயலாளர் ஜெயச்சந்திரன் .

இயற்கை சுற்றுசூழல் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு காட் பாதர் என்றும் கூட சொல்லலாம்.

இயற்கையை பாதுகாக்க பல போராட்டங்கள் சட்ட போராட்டங்களை முன்னின்று நடத்திய ஒரு போராளி தான் ஜெயச்சந்திரன் .

20230828144911973.jpg

கடந்த வெள்ளி கிழமை காலை மார்னிங் வாக்கிங் சென்று வந்து தன் ஊட்டி பெர்ன்ஹில் வீட்டின் சேரில் அமர்ந்த ஜெயச்சந்திரன் இயற்கையுடன் கலந்து விட்டார் என்ற தகவல் தமிழக இயற்கை ஆர்வலர்கள் பத்திரிகையாளர்கள் மத்தியில் மிக பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

வன உயிரின ஆர்வலர் சாதிக் கூறும் போது ,

20230828151451618.jpg

" இயற்கையை காப்பாற்ற பல போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் ஜெயச்சந்திரன் .தெங்கு மராடா ரி லொகேஷன் முன்னின்று எடுத்து குரல் கொடுத்தவர் இந்த மகான் .

கேரளா வன விலங்கு கொடூர வேட்டைக்காரர்களை சந்தித்து பேசி மனம்மாற்றி வன விலங்கு பாதுகாவலர்களாக மாற்றி தகவல் கொடுப்பவர்களாக மாற்றினார் .சுற்றுச் சூழல் பாதுகாப்பாளராக அமைதியாக வலம் வந்தவர் .

இருபது வருடமாக நீலகிரி வன உயிரின சங்கத்தின் தலைவராக பணிபுரிந்தவர் .

20230828151403876.jpg

புலி பாதுகாப்பு குறித்து மிக பெரிய பணியை மேற்கொண்டார் .தமிழக பசுமை இயக்கத்தை முன்னின்று நடத்தியவர் இன்று மறைந்துவிட்டார் என்பதை ஜீரணிக்க முடியவில்லை .

மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும் குரல் ஓய்ந்துவிட்டது என்று கூறுகிறார் ஓசை இயற்கை இயக்க தலைவர் காளிதாஸ் .

20230829063523470.jpg

மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாவலன் ஏராளமான சட்ட பாதுகாப்பை முன்னின்று எடுத்து நடத்தியவர் .

1987 ஆம் ஆண்டு இயற்கை பாதுகாப்பு குறித்து குரலை உயர்த்தியவர் ஜெயச்சந்திரன் .

என்னை போன்ற இயற்கை ஆர்வலர்களை உருவாக்கியது எங்கள் ஜெயச்சந்திரன் தான் .

காடுகளுக்காக சட்ட போராட்டங்களை எடுத்து நடத்தியவர் பொது வழக்குகள் தொடுத்தவர் .

20230828150858743.jpg

ஊட்டியில் இயற்கை புல் வெளியில் இந்தி படப்பிடிப்பை எடுத்த போது அதை சட்டத்தின் துணையுடன் தடுத்து நிறுத்தியவர். சத்திய மங்கலம் சாம்ராஜ்நகர் ரயில்வே பாதையை வனத்தினுள் அமைப்பதை தடுத்து நிறுத்தியவர் .

பல அதிகாரிகள் இவரிடம் எச்சரிக்கையுடன் செயல் பட்டு வந்தனர் .

எங்களின் உற்ற நண்பரை இழந்து தவிக்கிறோம் .என்று கூறினார் .

2023082814532127.jpg

இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறுகிறார்

ஜெயச்சந்திரனுடன் 25 வருடமாக பயணித்து கொண்டு வந்துள்ளேன் .மிக பெரிய சுற்றுச் சூழியலாளர் .

நீலகிரி மலை முழுவதையும் பாதுகாத்து வந்த இயற்கை பசுமை போராளி.

நீலகிரி கேரளா வனங்களை பாதுகாப்பதில் இவரின் பங்கு மிக பெரியது .

பவானி ஆறு மாசுக்கேட்டு போகிறது அதை காப்பாற்ற விஸ் கோஸ் நிறுவனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் .

இயற்கையை பாதுகாக்க நீதி மன்றத்தில் போராடிய போராளி .

இயற்கையை பாதுகாக்க ஒரு பெரிய நெட்வொர்க்கை வைத்திருந்தவர் .

மசினகுடியில் வரவிருந்த நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் நம் ஜெயச்சந்திரன் .

ஏகப்பட்ட இயற்கை பாதுகாப்பிற்கு விதை விதைத்தவர் .

20230828145900893.jpg

ஜெயச்சந்திரன் கடந்த மே7 ஆம் தேதி ஊட்டி ஓம் பிரகாஷ் துளசிங் மடத்தில் திராவிட இயக்க முன்னோடி அயோத்தி தாசர் பற்றிய கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார் .இன்று அந்த குரல் இயற்கையோடு கலந்துவிட்டது .

நீலகிரி மனித உரிமை இயக்கத்தின் தலைவர் ஜனார்த்தனன்.

20230828150041526.jpg

"இயற்கை போராளி ஜெயச்சந்திரனின் மறைவு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைக்கு ஒரு பேரிழப்பு சாய கழிவுகள் பவானி ஆற்றில் கலப்பதை தடுத்து நிறுத்த விஸ்கோஸ் ஆலையை மூடியதற்கு இவர் தான் முக்கிய காரணம் .

20230828150251446.jpg

யானை வளை (corridor ) பாதையை பாதுகாக்க போராடினார் .

ஈரோடு முண்டந்துறை வன உயிரின காப்பகத்திற்கு பெரியார் பெயர் சூட்ட முன்னெடுத்தவர் .

ஊட்டியில் ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தை விடுமுறை நாளில் அவசர வழக்காக பதிவு செய்து தடுத்து நிறுத்தினார் .

நியூட்ரினோ திட்டத்தை நிறுத்தின போராளி .

வன விலங்குகள் அதிக பாதிப்புக்கு தள்ளப்படும் என்பதால் சத்திய மங்கலம் சாம்ராஜ்நகர் ரயில் பாதை திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் .

ஊட்டி குன்னூர் சாலையில் தலையாட்டி மந்தில் இருந்த பரன் புட் ஏரியை மீட்டு எடுக்க முயற்ச்சியை எடுத்து வந்தார் .

பெரியார் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டவர் தி க போராளி சாந்தனுக்கு நினைவு தினம் நடத்தவேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க அவரின் நினைவு நாளை ஏற்படுத்திவிட்டார் .

தந்தையை இழந்து சோகத்தில் இருக்கும் ஜெயச்சந்திரனின் மகள் செல்வியை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20230828150514127.jpg

அப்பா தான் என் இயற்கை ஆர்வத்திற்கு இன்ஸ்பிரஷன்.

சத்தியமங்கலம் ரயில் பாதை , நியூட்ரினோ திட்டம் , முக்குர்தி வன பகுதியில் சினிமா படப்பிடிப்பு ரத்துசெய்தது , யானை பாதைக்காக போராட்டம் , கல்லட்டி மலை பாதையில் கனரக வாகனம் மற்றும் சுற்றுலா பயணிகள் அந்த பாதையை உபயோகிக்க கூடாது என்று தமிழ்நாடு க்ரீன் மூவ்மெண்டை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சி அப்படியே நிற்கிறது .

அப்பாவின் திடீர் இறப்பு அதிர்ச்சி மற்றும் மிக பெரிய இழப்பு.