சமீபத்தில் கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி இந்தியா முன்னேற வேண்டுமென்றால் இலவசங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். சில இலவசங்களை கொடுத்து மக்களை முட்டாளாக்க சில அரசியல் கட்சிகள் கருதலாம். இலவசங்களால் தான் மாநிலங்கள் கடனில் சிக்கித் தவிக்கின்றன என்று குறிப்பிட்டார். பிரதமரை பொறுத்தவரை தொடர்ந்து இலவசங்களை கடுமையாக எதிர்த்து பேசி வருகிறார் என்பது உண்மை.
ஆனால் கர்நாடக பாரதிய ஜனதா தனது தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு தினமும் அரை லிட்டர் பால் மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர் இலவசம் ஐந்து கிலோ சிறுதானியங்கள் இலவசம் என்று குறிப்பிட்டிருக்கிறது. பாரதிய ஜனதா ஆளும் குஜராத் உத்திரபிரதேசத்திலும் இலவசங்கள் வாரி வழங்கப்படுகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் இலவசங்களை வாரி வழங்கி இருக்கிறது. அரசு பேருந்தில் மகளிர்க்கு இலவசம் குடும்பத் தலைவிக்கு மாதம் 2000 ரூபாய் வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் 3000 ரூபாய் டிப்ளமோ பட்டம் பெற்றவருக்கு 1500 உதவித்தொகை மாதம் 10 கிலோ அரிசி இலவசம் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று வாரி வழங்கி இருக்கிறது.
பிரதமர் சொல்வது உண்மைதான் இலவச திட்டங்களால் உண்மையில் மாநிலங்கள் கடனில் சிக்கித் தவிக்கிறது என்பதும் இதை சமாளிக்க அவர்கள் திணறுகிறார்கள். சில சமயம் பஸ் கட்டண உயர்வு பால் விலை உயர்வு தொழில்வரி உயர்வு என்று ஒரு பக்கம் இலவசங்களை வாரி வழங்கி விட்டு இன்னொரு பக்கம் கடன் சுமையை மறைமுகமாக மக்கள் தலையில் கட்டி விடுகிறார்கள் மாநில அரசுகள்.இலவசங்களை வாரி வழங்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரத்தை பற்றி என்றுமே பேசுவதில்லை பிரதமர் இலவசங்களை எதிர்த்து கருத்து சொன்னாலும்அவரது கட்சியும்இலவசங்கள் பற்றிவாக்குறுதிகளைவாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனஇது தேர்தல் அரசியல் என்று சொன்னாலும் மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அரசியல் தலைவர்கள் உணர வேண்டும்.
Leave a comment
Upload