தொடர்கள்
பொது
மரத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு - மாலா ஶ்ரீ

20230301070132429.jpg

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரெய்சன் நகரில் புகழ்பெற்ற சாஞ்சி ஸ்தூபா பகுதி உள்ளது. இங்கே இங்குள்ள ஒரு மரத்துக்குத்தான் 24 மணி நேரமும் 3 ஷிப்ட்டுகளில் போலீசார் ஏ.கே-47 ரக துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

கௌதம புத்தர், ஒரு போதி மரத்தின்கீழ் ஞானம் பெற்றதாக வரலாறுகள் கூறுகின்றன. பின்னர், அந்த மரம் இருந்ததாக நம்பப்படும் பகுதியில், கி.மு.250-ல் ஒரு கோவில் எழுப்பி, அந்த போதிமரத்தை அசோக சக்ரவர்த்தி பாதுகாத்து வந்ததாக நம்பப்படுகிறது.

அதன்பிறகு, இலங்கையில் புத்த மதத்தை பரப்புவதற்காக, அசோக சக்ரவர்த்தியிடம் இலங்கை மன்னன் தீசன் என்பவர் போதி மரத்தின் கிளையை பெற்று சென்றுள்ளார். இலங்கை அனுராதபுரம் அங்கிளை நடப்பட்டு வளர்ந்து, இன்று கிளைகள் பரப்பிய போதிமரமாக விளங்கி வருவதாகக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் இருந்த போதிமரம் விழுந்துவிட்ட நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு இலங்கையில் உள்ள போதிமரத்தின் கிளையை அன்றைய அதிபர் மகிந்த ராஜபக்ச கொண்டு வந்து வழங்கினார். இந்நிகழ்வை ம.பி முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெரிய விழாவாக நடத்தி, போதி மரக்கிளை நடப்பட்டு, மாநில அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், புத்தர் ஞானம் பெற்ற போதிமரத்தின் வழித்தோன்றலாக கருதப்படுகிறது.

இங்கு தான் இந்த இடத்தில், உள்ள போதி மரத்துக்கு அன்று முதல் மாநில அரசின் சார்பில் 24 மணி நேரமும் 3 ஷிப்ட்டுகளில் ஏ.கே-47 ரக துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மரத்தை பாதுகாக்க ஆண்டுதோறும் மாநில அரசு சார்பில் ₹12 லட்சம் செலவிடப்பட்டு வருகிறது.

அம்மரத்துக்கு தண்ணீர், பூச்சிமருந்து, இரவில் பாதுகாப்பு, சுத்தம் செய்யப்பட்ட இடம், கரையானுக்கு எதிரான மருந்து என்று மாநில அரசு சார்பில் கூடுதலாக பல்வேறு பராமரிப்பு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.

மரந்தான் மனிதன் மறந்தான் என்று விட்டு விடாமால் ஒவ்வொரு மரத்தையுமே இப்படி பாதுகாக்க வேண்டும்.