1. "என் வாழ்க்கையில் சந்தேகத்துக்கு இடம் அளித்தால் ஒருவரின் நடைமுறை வாழ்க்கை என்னாகும்?"
சந்தேகமா? அத்தோடு எல்லாம் குளோஸ்!
2. மதனின் மற்றொரு புதிய சுவாரசிய தொடர் விரைவில் வெளிவருமா?
ஸாரி! நான் ரொம்ப சோம்பேறி!
3.நீங்கள், ரஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர், பிரதமர் மோடி மற்றும் வடகொரிய அதிபர் சந்திப்பு நடந்தால் என்ன பேசுவீர்கள்?
பேசமாட்டேன். அவர்கள் பேசுவதை கேட்பேன். அடிப்படையில் நான் ஒரு பத்திரிக்கையாளன்!
4. நீங்கள் எந்தெந்த வெளிநாடுகளுக்கு சென்று வந்தீர்கள்? ஏதேனும் சுவாரசிய சம்பவங்கள் இருக்கா?
ரொம்ப கிடையாது யூ.எஸ்.ஏ, மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா! எல்லாமே கொஞ்ச நாள் ட்ரிப் தான். யுஎஸ்ஏ மட்டும் ஒரு மாதத்திற்கு மேல் இருந்தேன். மணிலாவுக்கு நான் பயணித்த விமானம் நடுவழியில் கடலுக்கு மேலே என்ஜின் கோளாறாகி தட்டு தடுமாறி சென்னைக்கு திரும்பி வந்தது. சென்னையில் தீயணைப்பு வண்டிகள் எல்லாம் ரெடி! சஸ்பென்ஸ் ஆன பயணம்! இது என்னுடைய இரண்டாவது வாழ்க்கை!
5. "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்ற கூற்றுக்கு ஏற்ப தற்போது இங்கு அனைத்து பணிகளையும் வட மாநில மக்கள் செய்கின்றனரே உங்கள் கருத்து?
இந்திய மக்கள் என்று சொல்லுங்கள்!
தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்
வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: vikatakavi.weekly@gmail.com
Leave a comment
Upload