தொடர்கள்
ஹாய் மதன்
ஹாய் டியர் மதன்

20230005173625230.jpg

1.ஜாலியன் வாலாபாகில் சுட்டது எல்லாம் நம் இந்தியர்கள் தானே? அவர்கள் நினைத்திருந்தால் துப்பாக்கியை இந்தப் பக்கம் கொஞ்சம் திருப்பிச் சுட்டிருக்க முடியாதா என்ன??

2023000518190747.jpg

மேலிடத்து ஆர்டர்! கடைப்பிடித்தே தீர வேண்டும். அப்படி சுட்ட ஒருவரை யாரும் பேட்டி கூட காணவில்லையே! அந்த அளவுக்கு மரண அமைதி நாட்டில் அப்போது ஏற்பட்டு விட்டது!

2. வந்தே பாரத் ரயிலில் போக ஆசை இல்லையா?? உயரம் பயம்...வேகம்???

20230005181643135.jpg

எனக்கு பயணம் போக ரயில் தான் ரொம்ப பிடிக்கும்.கார், விமானம் எல்லாமே அடுத்தபடி தான்.ரயிலில் போகும்போது ஒரு வாழ்க்கையே வாழலாம். மற்றபடி எனக்கு வந்தே பாரத் சான்ஸ் கிடைக்கவில்லை!

3. கடவுளை அதிகமாக நம்புபவனுக்கோ அல்லது கும்பிடுபவனுக்கோ தான் அதிக சோதனைகள் வருமாமே??அப்ப அங்கிருந்து ஜகா வாங்கறது தான் நல்லதோ??

20230005182135574.jpg

கடவுளை கும்பிடுபவனுக்கும், சோதனைகள் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது என் கருத்து. நீங்கள் எவ்வளவு பக்த சிகாமணியாக இருந்தாலும் சோதனைகள் வந்தே தீரும். "இதுவும் கடந்து போகும் "என்கிற எண்ணத்தை கடவுள் நம்பிக்கை தருகிறது. அது போதாதா?!

4. விடுதலைப்புலிகள் இயக்கம் இன்றும் உயிருடன் இருப்பதாக நம்புகிறீர்களா??

20230005180459408.jpg

சிலருடைய (அல்லது பலர் !)மனசுக்குள் உயிரோடு இருக்கலாம் இல்லையா? அது வெளிப்பட காலம் ,நேரம், சூழ்நிலை எல்லாம் முக்கியம். அது மீண்டும் ஏற்படுமா?... யாருக்குத் தெரியும்?!

5. தமிழைத் தவறின்றி எழுத முடியாத தலைமுறை இப்போது உருவாகி இருக்கிறது. இந்நிலை நீடித்தால் நாளை என்ன ஆகும்?

20230005182421335.jpg

பேச்சுத் தமிழ் மட்டும் நிலைத்து நிற்கும்! அந்த நிலை வராமல் இருக்க நாம் என்ன செய்கிறோம்? ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம் தான் கற்பிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு தமிழ், ஓரளவு பேச தெரிகிறதே தவிர எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை. பாடத்திட்டத்தையே மாற்றி அமைத்தால்தான் உண்டு. செய்வார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை மதன் சாருக்கு அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: info@vikatakavi.in