தொடர்கள்
தொடர்கள்
மக்கள் பார்வையில் கம்பர் - 10 -ரமேஷ்எத்திராஜன்

20221025222007445.jpg

மக்கள் பார்வையில் கம்பர்

குலோத்துங்கச் சோழனுக்கும்
கம்பருக்கும் மனக்கசப்பு உண்டானது
தன்னை மதிக்காத சோழன் மீது
மனம் வெறுத்து கம்பர்

மன்னவனும் நீயோ வளநாடும்
உன்னதோ உன்னை அறிந்தோ
தமிழை ஓதினேன் என்னை
விரைந்தேற்றுக்கொள்ளாத வேந்துண்டோ
உண்டோ குரங்கெற்றுக்கொள்ளாத கொம்பு
என்று பாடி சோழநாட்டை விட்டு
வெளியேறினார்

இதன் உட் பொருள்

இந்த உலகில் நீ ஒருவன் தான் மன்னனோ
உன் நாடு மட்டும் தான் வளமையான
நாடா
உன்னை நம்பியா நான் தமிழைத் தந்தேன்
என்னை ஏற்றுக்கொள்ளாத நாடுண்டோ
குரங்கை ஏற்றுக்கொள்ளாத
மரக்கிளை உண்டா
என்கிறார் கம்பர்

இச் சமயத்தில் தோள் பாரம்
தாங்கும் தோழனாய்
நலம் காக்கும் நாயகனாய்த்
தவமாய் வந்த வரமாய் அனைத்து
உதவிகளையும் செய்தவர்

திருவெண்ணெய் நல்லூர்
சடையப்ப வள்ளல்

நன்றி மறப்பது நன்றன்று
குறள் நெறியாய்
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்க
நன்றியாய்

கம்பராமாயணத்தில் ஆயிரம்
பாடல்களில் ஒரு பாடல் வீதம்
புகழ்ந்து பாடியுள்ளார்

பாலகாண்டத்தின் அவையடக்க
பாடலில் உரைக்கின்றார்

நடையின் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராமாவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர்வயின் தத்ததே

நல்லொழுக்கத்தில் நின்று
உயர்ந்த இராமாவதாரத்தைக்
குறித்துப் புகழ் மிக்கதுமான
செய்யுள்கள் நிறைந்த
குற்றமற்ற சிறந்த இக்காப்பியம்
திருவெண்ணெய் நல்லூரில்
இயற்றப்பட்டது
என்பதே பாடலின் பொருள்

தம்மை ஆதரித்த வள்ளலாகிய
சடையப்பரைப் புகழ்ந்த
கவி கம்பரை போற்றுவோம்
மன மகிழ்ந்து பாராட்டுவோம்.

மீண்டும் சிந்திப்போம்...