தொடர்கள்
கதை
கமல் அரசியலுக்கு முழுக்கு ! ம.நீ.மய்யத்தில் சுப்புசாமி. - புதுவை ரா.ரஜினி

20221102130312156.jpeg

ஓவியம் : மணி ஶ்ரீகாந்தன் இலங்கை


த்மஸ்ரீ கமல்ஹாசனுக்கு அன்றைய பொழுது இப்படி விடியும் என்று நினைத்துப் பார்க்கவே இல்லை.

'கடந்த சட்டமன்றத் தேர்தலில் தைரியமாக நின்று தோற்றுப் போனாலும் மன தைரியத்தோடு இருக்கிறேன். ஆனால், ஆனால்...'என்றவாறு அவர்மனதை குழப்பிக் கொண்டிருந்தது அந்தப் படபடக்கும் காகிதம்.

வேலைக்காரர் கொடுத்திருந்த கிரீன் டீயில் மெல்லிய இசையாகத் தெரியும் பச்சையத்தை அடிக்கடி ரசிப்பது அவர் வழக்கம். இப்பொழுதுகொதிக்க கொதிக்க வந்த டீ, இமயமலையில் பெய்த திடீர் சாரல் மழை போல் சில்லென்று டேபிள் மேலேயே காத்திருந்தது. மறுபடியும் 27 ஆவதுமுறையாக அந்தக் கடிதத்தை வாசித்தார்.


'... கமல காசா...
இது மாதிரி செய்வது உனக்கு லேசா?
மூடிக்கிடக்க மக்கள் மனது லூசா...
நீ ஒரு மர்ம தேசா...
பேச உனக்கு பேசா (பேஷா...?)
அள்ளித் தருவேன் சு.சா...!
போற்றிப் பாடடா என்னை கம்சா
தந்திடுவேன் உனக்கு வெற்றி சம்சா...!'

பின் குறிப்பு: அடுத்த தேர்தலை அட்டகாசமாய்ச் சந்திக்கவும், வெற்றிக் கனிகளைப் பறித்துக் கொள்ளவும் எங்களிடம் பிரத்தியேக வகுப்புகள்உண்டு.

அணுகவும்:

அட்டகாச ஐடியா மன்னர் திருமிகு. சுப்புசாமி!
தொடர்பு எண்: xxxxxxxxxx.

பல கபிலன்களை, சில சினேகன்களைக் கரைத்துக் குடித்த இந்த மனம் தொட்ட, மமதையான, மா மதயானை மனிதன் யாரோ?

கமலின் செல்போன் சிணுங்கியது. ஆண்ட்ரியா ஜெரோமியா!

நடிகையோடு அவருக்கு முக்கிய வேலை இருந்தது - சிட்டி சென்டரில் இசை ஆல்பம் வெளியீட்டு விழா!

'ஹோப் யூ டோன்ட் மிஸ்டேக் மீ. அர்ஜென்ட் மீட்டிங். ஹாஃப் அன் அவர் வில் பீ தேர்' குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, யாருக்கோ அவசரமாகத்தொலைபேசினார்.

"ல்லோ… நான் சுப்புசாமி பேசுகிறேன்...!" எண்ணெய்க் குளியல் ஜோடனைகளுடன் வழிய வழிய காய்ச்சிய நல்லெண்ணெய்... முழங்கால்வரை துண்டு, முக்காலி அமர்வு என்று படுகிழக் குறும்புக் கண்ணனாக சுப்பு அலட்சியமாக ரிசீவரைக் காதில் வைத்தார்.


"வணக்கம். நான் நடிகர்... நோ நோ... மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பேசுகிறேன்...!"


சுப்புசாமிக்கு தன் எண்ணெய் வழியும் காதுகளை நம்ப முடியவில்லை. ஆனால் அந்த இனிய இஞ்சி முரபாக் குரல்? உலகநாயகனேதான்!


"ஷூட் ஹேவ் அட்லீஸ்ட் மினிமம் சென்ஸ். ஆயில் காதில் இப்படியா ரிசீவரைத் திணிப்பது? சின்ன ஹேன்கி யூஸ் படுத்தக்கூடாது?" பொழிந்தகோமுப்பாட்டியை அப்பொழுதுதான் முளைவிட்ட அற்பப் பதரைப் பார்ப்பதுபோல் பார்த்தார்.

"உஷ்...கமலஹாசன் லைன்ல... லைன்ல..." என்றார்.

"முற்றிப்போனதை ரெட்யூஸ் பண்ணத்தான் இந்த எண்ணெய்க் குளியல்...!" என்று கர்சீப்பை தூக்கிப் போட்டாள். ஆனால், உரையாடல்களைக்கேட்ட சில வினாடிகளில் கோமு அசந்து விட்டாள்!

"ஆழ்வார்பேட்டைக்கா? சரிங்க தம்பி. எனக்கு காலை 11 மணி ஓகே. எதுவும் ப்ரோகிராம்… அப்பாயின்மென்ட் இல்லை. சரி... சரி...உங்களோட காரை அனுப்புறீங்களா? இருக்கட்டும். சுப்புசாமியை நம்பினோர் கைவிடப்படார். போனை வைக்கிறீங்களா... அது உங்க இஷ்டம். ஆனால், ஒரு விஷயம் பாருங்கோ... நமக்கு தினமும் பல அழைப்புகள், பல அமைப்புத் தலைவர்களிடமிருந்து வரும். ஆனாலும் என் மனைவி ஒருசாதாரணக் குடும்பத் தலைவி அல்லவா? இதோ என் சம்சாரத்துக்கிட்டே ஓரிரு வார்த்தைகள் நீங்க பேசினா, ஒரு நடிகரின் ரசிகை என்றவிதத்தில் சந்தோஷப்படுவாள்..."

மறுமுனை சம்மதம் தெரிவிக்க, கோமுவிடம் ரிசீவரைக் கொடுத்தார். சாதாரண சமயமாக இருந்தால் கண்களாலேயே அலட்சியப்படுத்தியிருப்பாள். ஆனால், ஏதோ ஒரு கியூரியாசிடியில் சட்டென்று புடைவைத் தலைப்பால் ரிசீவரை மூடியபடி காதில் வைத்து, "ஹலோ...!" என்றாள்.

மயக்கம் வராமலிருக்க முக்காலியில் அமர்ந்திருந்த சுப்புசாமியின் தோள்களில் கையை வைக்க, அவர் சைக்கிள் தகர ரிம்மைப்போல்தடதடவென ஆட்டம் கண்டார்.

'உண்மைதான்! ஓ... தட் லெஜெண்ட் ஆக்டர் பத்மஸ்ரீ கமல்ஹாசன்தான் லைனில்...!'

"பார்த்தாயா அய்யாவோட மகிமையை!" என்றார் சுப்பு பெருமையாக.

"பார்த்து பார்த்து. தேவையில்லாம செலிபிரிட்டிகளோட நேரத்தை வீணாக்காதீங்க. விளைவுகள் பயங்கரமாய் இருக்கும்...!"


கடுப்பில் சொன்னாளா, அக்கரையில் சொன்னாளா என்று பகுத்தறியும் பக்குவத்தில் இல்லாத சுப்பு, குண்டு ராஜாவிடம் சங்கதியைச் சொல்லவிரைவாகக் கிளம்பினார்.

"கா வந்துடுச்சு... ஆசையில் ஓடி வந்தேன்...!" என்ற சுப்புசாமியிடம்,
"டாய்லெட் அங்கே இருக்கு தாத்தா. போயிட்டு சரியா தண்ணிய ஊத்திட்டு வாங்க...!" என்றான்.

அவனை அலேக்காய் தூக்க முயன்று தோற்றுப்போய், அட்டையாய் கட்டிக் கொண்டார்.


"பட்டுக் கன்னம்... தொட்டுக்கொள்ள…

ஒட்டிக் கொள்ளும்...!” என்று பாடினார்.

அவன் குழப்பமாகப் பார்த்தபோது…


"நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி...
நமை சேர்த்த கமலுக்கு ஒரு நன்றி..." என்று பாட, குண்டு ராஜா சிரித்தான்.

"என்ன தாத்தா, கமல் பட பாட்டா பாடிட்ருக்கீங்க?"

" நீ கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சுடா. கொஞ்ச நேரத்துக்கு முந்தி கமலஹாசன் பேசினார்...!" என்று குதூகலத்தோடு கூறி...


"வானிலே தேனிலா ஆடுதே...பாடுதே…
வானம்பாடி ஆகலாமா...?" என்று ரசத்தோடு ஒரு அவசர பாலே டான்ஸ் ஆடினார்!

ந்தச் சரித்திரப் புகழ் பெற்ற உரையாடல் எதேச்சையாய் உருவானது.

ன்று காலை பதினோரு மணிவாக்கில் குண்டு ராஜா தன் மொகஞ்சதாரோ-ஹரப்பா ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தான். மனைவி ருக்குமணிஏதோ வாங்க வெளியே கடைக்கு போயிருந்தாள். அவள் கணவனுக்கு கடைக்குப் போகும் வேலையை வைப்பது இல்லை என்பதால் 'கணவனேகண்கண்ட தெய்வம்' என்று நினைத்துவிட வேண்டாம். கடுகிலிருந்து தர்பூசணிவரை அவன் கமிஷன் அடித்து விடுவதே காரணம்! வழக்கமானபீரோ புடைவை இடுக்கு, விளக்கேற்றும் மாடம், அஞ்சறைப் பெட்டி, அரிசிப் பானை என்று சம்பிரதாயத்துக்குத் தேடிவிட்டு, வீட்டின் மூலையில்புதிதாகக் குடியேறியிருந்த சின்ன எலிவளைவரை தேடிப் பார்த்து விட்டான். ஒரு நயா பைசாகூடக் கண்டுபிடிக்க முடியவில்லை.


'பெண்கள் உலகம் முன்னேறி, இதை விட பாதுகாப்பான இடங்களைக் கண்டுபிடித்து விட்டார்கள் போலும்' என்று நொந்தபடி வாசலில்அமர்ந்தான். கை நம நம வென்று அரித்தது. சமீப காலமாய் புதிய சகாக்களோடு சீட்டுக்கட்டு விளையாடி வருவதே காரணம். 'கையில் 20 இருந்தால் 200 ரூபாய் ஆக்கி விடலாம்' என்ற நப்பாசை. கொக்கைப் போல் காத்திருந்த அவனுக்கு மக்கைப்போல் காட்சியளித்த சுப்புசாமியைக்கண்டதும் மதிமுக (மறுமலர்ச்சி திடீர்னு (கடனளித்து) முன்னேற்றுவோர் கழகம்) உண்டாகியது.

தொளதொள பேண்ட் ஜிப்பா சகிதமாய் எழுந்து," வாங்கோ வாங்கோ. கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோலனு சொல்லுவாங்களே..."என்றதும் மனக்கிலேசத்தில் வந்த சுப்புசாமிக்கு தன்னை அவன் தெய்வம் என்றதும் ஆறுதலாய் இருந்தது.

"அர்ஜெண்டா இருபது ரூபா வெட்டுங்க, தாத்தா. அரைமணி நேரத்துல உங்களுக்கு 100 ரூபாயா திருப்பித் தரேன்...!" என்று உடனடியாகமுன்னேறிய வேற்று நாட்டுத் தூதரிடம் கோரிக்கை வைத்த, பஞ்சத்தில் அடிப்பட்ட நாட்டுத் தூதுவர்போல கோரிக்கை வைத்தான்.

மோடி அடித்த புத்தம் புதிய, நிறங்களுக்கு அப்பாற்பட்ட புதிய நீல நிறம் கொண்ட (ஆண்டவரே இது இன்ன நிறம்தான் என்று எமக்குப் புரியவையும்!) 50 ரூபாய் தாளை அவன் கையில் வைத்தார். குண்டு மலர்ந்தான். அதே சமயம் சுப்புசாமியின் முகவாட்டம் அவனை திடுக்கிடச் செய்தது.

"என்ன தாத்தா, உங்க அழகான ராட்சசி வெளியே துரத்திப்பிடுத்தா?"என்றான்.

"நான் ஓராயிரம் பல்டி அடித்து செய்யும் சாகசங்கள் கடைசியாய் வீணாப் பூடுதுடா. ஆனா கிழவி புதுசு புதுசா ஏதாவது செய்து பேர் தட்டிட்டுபோயிடுது. மாலை என்ன... மரியாதை என்ன... அன்பளிப்புகள் என்ன... போட்டோக்கள் என்ன... பத்திரிக்கைச் செய்திகள் என்ன…” போன்ற பலஎன்ன சமாச்சாரங்களை விவரித்ததும் குண்டு ராஜாவுக்குப் புரிந்து விட்டது.

"நம்ப பீமாராவ் அடிக்கடி சொல்வான்: 'கவலை பேடா' ன்னு. தாத்தா அதனால, கவலைய விடுங்க. படபடக்கின்ற இந்த ஐம்பது ரூபாயை இந்தாடாகண்ணுன்னு கொடுத்தீங்களே... நமக்குள்ள என்ன உறவு இருக்கு? பிரெண்ட்ஷிப் தாத்தா. ஒரு நாள் நீங்க நியூஸ் மீடியாவில் ஃபிளாஷ் ஆகநான் ஒரு ஐடியா சொல்றேன். காதைக் கொடுங்க..."

சுப்புசாமிக்கு காது சற்று மந்தமாகிவிட்டபடியால் மூக்கை கொடுத்தார்.

"நம்ம வை.கோ. பலரை, பல கட்சிகளை, காட்சிகளை இணைத்து பரபரப்பா இருந்து டயர்டாகி, ரிடையர் ஆகிட்டார். தாத்தா இன்னிக்குஅரசியல்லே சரியான கைடு இல்லாம பலர் தவிக்கிறாங்க. அதில ஒருத்தர் நம்ம கமல்ஹாசன். அவருக்கு உங்க அனுபவம் மூலம் அரசியல் ஐடியாகொடுங்க. அதுக்கு அப்புறம் பாருங்க. பின்னாடி நான் உங்களைப் பார்க்க, எனக்கே தாத்தாயின்மெண்ட் கொடுக்க வேண்டிவரும்...!"

ஒற்றை சலவைத் தாள் ஒன்றுக்கே ஒபாமா அளவுக்கு ஐடியா தந்த தன் நண்பனை மும்தாஜைவிட ஒருபடி அதிகமாகவே கட்டிப்பிடித்துக்கொண்டார்.

விட்டார் ஒரு கவிதை மடலை காரசாரமாக...கமலுக்கு!

காத்திருந்த கமல்ஹாசனே கார் கதவைத் திறந்துவிட, சுப்புசாமி மிடுக்கோடு, குண்டு ராஜா சகிதமாக இறங்கினார்.

முதலில் வணக்கம் சொன்ன உலகநாயகன், பிறகு கையை நீட்டி, மேல்நாட்டு பாணியில் சுப்புசாமியையே குலுக்கினார்.


சுப்பு நடக்க, பவ்யமாய்ப் பக்கத்தில் வந்து கொண்டிருந்தான் குண்டு. இருவரையும் கமல் தனது பிரத்தியேகப் பாசறைக்குப் பாசத்தோடுஅழைத்துப் போனார்.

"ஐ 'ம் ரியலி ஹேப்பி டூ வெல்கம் யூ... இல்லை இல்லை... நான் ரொம்ப திக்குமுக்காடி போய் விட்டேன். உங்கள் வரவு, நல் வரவாகுக...!" என்றுகமலஹாசன் அறைக்கதவை திறந்து மரியாதை செய்தார்.

கும்கும் குளுகுளு அறை. ரம்மியமான வாசம். கலாபூர்வமான இடமாக அது திகழ்ந்தது.

சுப்புசாமியை யாருக்கும் தெரியாமல் நிமிண்டினான் குண்டு. "இவர் எனது காரியதரிசி குண்டு ராஜா...!"என்று கமலிடம் அறிமுகப்படுத்தினார் சுப்பு. முகம் வழியச் சிரித்தார் உச்ச நடிகர்.

ஆளே உள்ளே போய் விட்டது மாதிரி வழுவழு சோபாவில் இருவரையும் அமர வைத்து விட்டு, தான் எதிரில் ஒற்றை நாற்காலியில் அமர்ந்த கமல், "உங்களை அடிக்கடி நான் சந்தித்ததுபோலவே இருக்கு...!" என்றார்.

"ஆமாம், ஐயா குமுதத்தில், ஆனந்த விகடனில் அடிக்கடி வருவார்கள்...!" என்ற குண்டுவை, கமலுக்கு சுப்புசாமியைவிட ரொம்பப் பிடித்தது.


"என்ன சாப்பிடுறீங்க? ஹாட் ஆர் கோல்ட்? முந்திரி பக்கோடா அல்லது பனீர் டிக்கா?"

இடைப்பட்ட நேரத்தில் உள்ளே புகுந்த சிறு மீடியா கும்பல் ஒன்று தடால் தடால் என்று காமிராக்களை வைத்தனர். பளிச் பளிச் என்றுமின்னல்கள். உலகத்திலிருந்த அத்தனை மைக்குகளையும் வைக்க, கமல், சுப்புசாமியை அறிமுகப்படுத்தி, நோக்கம் குறித்துக் கூறினார்.

சம்பிரதாயங்கள் முடிந்தவுடன், அறையில் மூவர் கூட்டணி மட்டுமே இருந்த
அறையில் பிக் பாஸ் அழகிகளாய்ப் பரவிய வகைவகையான தின்பண்டங்களைச்

சாப்பிட்டுக் கொண்டேயிருந்த சுப்புசாமி, எப்போது திருவாய் மலர்ந்து அருள்வாக்கு சொல்வார் என்பதுபோல காத்திருந்த கமலஹாசனுக்குப்போரடித்தது.


'தொண்டுள்ளம் கொண்ட

'தொண்டு கிழவா'...
எல்லாம் நின் வசமாகும்

கொண்டாடும் கிழப்பருவம்…

கொண்டாட்டம் இனிமேதான்...' - என்று மனதுக்குள் கவிதை இயற்றத் தொடங்கியிருந்தார்.

சுப்புசாமி சமிக்ஞை காட்ட, குண்டு, "நான் கொஞ்சம் வெளியே இருக்கேன்..." என்று எழுந்து போனான்.

இரு நாட்டு பிரதமர்கள் அமர்வதுபோல இப்போது சுப்புசாமியும் கமலும் ஒரே சோபாவில்.

கைகளை நெஞ்சோடு நெஞ்சாக கட்டியிருக்கும் கமலிடம் சுப்பு சொன்னார்:

"முதலிலே நீங்க விட வேண்டியது 2 களை. துண்டுகள் இரண்டுதான். ஆனால், வெட்டு ஒன்றுதான்...!" என்ற சுப்புசாமியின் ஆரம்ப வரிகள் கேட்டுகமல்ஹாசனுக்குப் புல்லரித்தது!

"நாம் முதலில் போனில் பேசினப்போ, நீங்க 'நான் நடிகர்... இல்லை இல்லை... ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பேசுகிறேன்' என்றீர்கள். என்னைவரவேற்றபோது, 'ரியலி ஹேப்பி' என்று முதலில் கூறிய நீங்க, 'ரொம்ப திக்குமுக்காடறேன்' என்று பிறகு தமிழில் வரவேற்றீர். 'சாப்பிட ஹாட்டாஅல்லது கூலா?' 'முந்திரி பக்கோடாவா இல்லை பனீர் டிக்காவா' என்றீர்கள்…!” அவர் சொல்ல வரும் அட்சர சுத்தமான சங்கதிகள் கமலுக்குப்புரிந்துவிட்டது. பவ்யமாய் தலையைக் குனிந்து கொண்டார்.

"உங்க பர்சனல் லைப்ல பல சாய்ஸ்கள் இருக்கலாம். ஆனா, பப்ளிக்னு வர்றப்போ ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுதான்! இதை முடிவுசெய்திட்டா, உங்களுக்கு அரசியலிலே உயர்ந்த இடம் கிடைக்கும். நடிப்பா... அண்டார்டிகாவில் பனிக்கரடிகூட உங்க படத்தை பார்க்கும். அரசியலை முழுமூச்சா முயற்சி செஞ்சா எந்த தேசத்துக்கும் நீங்க அதிபதி ஆகலாம்...!" பத்து நாட்கள் மனப்பாடம் செய்த வரிகளை சுப்புசாமிகக்கினார்.

'என்ன மனிதர் இவர்?' என்று கமல்ஹாசன் நினைக்கவில்லை. 'என்னே

மனிதர் இவர்!' என்று ஆச்சரியப்பட்டார்.

ராஜ மரியாதையோடு ஹாரிங்டன் சாலை வீட்டில் சுப்புசாமியைக் கமலின் கார் இறக்கி விட்டது. அதைக்கண்ட கோமுப்பாட்டிக்கு பெரும்பொறாமை!


'திஸ் டைம் பூனை விட்டத்துக்கு ஜஸ்ட் க்ளைம்டு பிராபர்லி' என்று எண்ணிக்கொண்டு இருந்தவளுக்கு மத்தியில், தோழனோடு பந்தாவாகஅமர்ந்தார் சுப்பு.


"பொட்டியிலே எவ்வளவுடா என் செல்லக்குண்டு...?" என்றார்.


"முதல்கட்ட ஆலோசனைக்கே ஒரு லட்சத்து ஒரு ரூபா தாத்தா...!" என்று திறந்து காட்டினான்.

"சரி சாயந்திரம் ஒரு ரூம் புக் பண்ணு. அங்கே நான், நீ, அப்பாராவ்,
ஹால்ப் பிளேடு எல்லோரும் மீட் பண்ணி பல விஷயங்களை முடிவு செய்கிறோம்...!" என்றார்.

"ஐ 'ம் ஹேவிங் லிட்டில் மைக்ரான் தலைவலி...!" என்றாள் கோமு.

"வரும் வரும் தலைவலி. இனி வாந்தி, மயக்கம்தான்...!" என்று கிண்டலடித்த சுப்புசாமி, "ராஜ்ஜா கைய வச்சா..." என்று விசில் அடித்தார்.

அன்று மாலை, இரவு, நள்ளிரவு, நட்டநடு ராத்திரி செய்திகளில் கமல்ஹாசன், ‘தன் அரசியல் ஆலோசகர் சுப்புசாமி’ என்று பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார். உலகநாயகனோடு கை குலுக்கல்கள், மௌனப் பேச்சுகள் (ஆடியோ இல்லாத உரையாடல்), சால்வை அணிவிப்பு, பூச்செண்டுவழங்கல் இவை அனைத்தும் உலகம் பூரா செய்திகளாக 'கன்னாபின்னாவென்று' பரவியது.

நான்கு நாட்கள் கழிந்தன. பிரிய மனசில்லாத உறக்கத்திலிருந்த சுப்புசாமியை எழுப்பி, அன்று தினசரியில் வந்திருந்த ஒரு செய்தியையும்விளம்பரத்தையும் காட்டினாள் கோமு, புன்முறுவலோடு.

அரசியலுக்கு முழுக்கு...? கமல் பரபரப்பு பேட்டி!

அதோடு புதிய சினிமாவிற்கான விளம்பரம்.
உலகநாயகன் பத்மஶ்ரீ கமல் ஹாசன் இருவேடங்களில் கலக்கும்...
'குட் பை...!'
அட்டகாச நகைச்சுவை திரைப்படம் இனிதாய் தொடங்குகிறது.
ஸ்டில்களும் இருந்தன.

அதில்...

சுப்புசாமி தோற்றத்தில் ஒரு கமலும், குண்டு ராஜா தோற்றத்தில் இன்னொரு கமலும் காட்சியளித்தனர்!

*********