Heading : சிரிப்பு எழுத்தின் பிதாமகனுக்கு பிளாட்டினம் விழா !! - வேங்கடகிருஷ்ணன்
Comment : As a tribute, vikatakavi can publish his writings on weekly basis to enhance comedy in its online magazine. We miss his imaginative humor. please consider..CA SURESH, PONDICHERRY.
Heading : காதல் போயின் சாதல் - ராம்
Comment : கட்டுரையாளரின் கொந்தளிப்பு ஞியாயமானதே. இன்றைய சினிமா இதற்கு காரணம் என்பது சரியானதே. ரயில் நிலையத்தில் ரயிலுக்காக நின்றிருக்கும் பயணிகளும் கண்ணுக்கெதிரே நடந்துகொண்டிருக்கும் அவலங்களை "நமக்கென்ன" என்று இனியும் மரமென நின்றிருப்பதும் கொடூரச் செயலே.
Heading : காதல் போயின் சாதல் - ராம்
Comment : Arrest also the movie producer, director, script writer and main actor acted like this and sown the seeds spoiling the young minds that ‘they can do anything immoral and get away with it - stalk girls even though they dont like, do murders, traffic drugs but worshipped as Hero - only movies these things can happen - larger than life portrayal- without any punishment for wrong doings - from Swathi to now this girl Sathya what has improved? Even 1 incident is NOT acceptable. Zero-violence against women should be Police dept and Education dept’s target. Railway department also need to improve safety in platforms with barricades and educating passengers to follow safety. Personally in our family St Thoms Mount and Meenambakkam lost two young lives while crossing (not due to violence but ignorance). But this case is unforgivable act. #zeroviolenceagainstwomen கடமையும் இல்லை கண்ணியமும் இல்லை கட்டுப்பாடும் இல்லை #வேண்டாம்பெண்களின்மீதானவன்முறை
Srirajan, HK
Heading : வாடகைத் தாய்-தில்லைக்கரசி சம்பத்
Comment : Very informative !!! The writer has made the common readers to enhance the knowledge on this !!! Excellent narration 👍🙏 Thanks 🌹🙏
Heading : வாழ்க்கை இவ்வளவு தான்
Comment : நாம் வாழ்க்கையில் முன்னேற, பிறரை நேசிக்க உதவும் வகையில் 6 முக்கிய வழிகாட்டி கட்டளைகளை வழங்கிய விதம் மிக அருமை.
Heading : குருவே சரணம் - 001 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி
Comment : மகாபெரியவா சகோதரர் சிவன் சார் குறித்து பல்வேறு பிரபலங்கள் மற்றும் சாமான்யர்களின் வித்தியாச அனுபவங்கள் குறித்து கேட்டறிந்து மிக்க மகிழ்ச்சி.
Heading : ஆன்மிகம் தெரிந்து தெளிவோம் - 13 — சுந்தரமைந்தன்.
Comment : மக்களிடையே தேங்காய் உடைப்பது எதற்காக? அதற்கான தாத்பரியம் என்ன என்று கேட்டால், யாருக்கும் தெரியாது - எங்களையும் சேர்த்து. பார்மாலிட்டி என்பர். எதேச்சையாக சுந்தரை நண்பனின் ஆன்மீகம் அறிவோம் தொடரில் தேங்காய் உடைப்பதன் தாத்பரியம் குறித்து படித்தறிந்து கொண்டோம். இதை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.
Heading : பாபியா - முதலையாழ்வார் பரம பதம் எய்தினார்-பால்கி
Comment : கோயில் குளத்தில் 77 வருடங்களாக கடவுளின் அன்ன பிரசாதங்கள் உண்டு வாழ்ந்த பபிதா முதலை இறந்த தகவல் மிகுந்த அதிர்ச்சி. அதை பால்கி விகடகவி வாசகர்களுக்கு லைவ் டெலிகேஸ்ட் செய்தது மிக சிறப்பு.
கௌஷிக், தீக்ஷிதா, சாய்கிருஷ்ணா, சென்னை
Heading : ஒன்பது நாள் உலகம் - ராமபிரசாத் தேசிகன்
Comment : நவராத்திரி கொலுவுக்கு அடுக்கி வைக்கப்படும் பொம்மைகளின் மன ஓட்டங்களை, யார் யாரின் பாட்டு நல்லாயிருக்கும் என ஒன்பது நாள் உலகம் கதை மூலம் ரா.தேசிகன் அலசி ஆராய்ந்து, பிஎச்.டி டாக்டர் ஆகிவிட்டார்.
பங்கஜம் பார்த்தசாரதி, திருவல்லிக்கேணி
Heading : சேனா vs சேனா - மும்பையிலிருந்து பால்கி
Comment : மகாராஷ்ராவில் முதல்வர் ஷிண்டே - உத்தவ் தாக்கரேவுக்கு இடையே நடைபெறும் ஈகோ மோதலில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் என்பதை பால்கி விவரித்த விதம் மிக அழகு. ஒருவேளை மும்பைவாலாவா?!
சஹானா முகுல்சந்த், அந்தேரி, மும்பை
Heading : ஆகாஷ் - கண்டெடுத்த இன்னொரு முத்து - நரசிம்மன்.
Comment : ஆகாஷ் மற்றும் ஹெல்ப் தி பிளைண்ட் பவுண்டேஷன் குறித்த தகவல்கள் மிக அருமை. தங்களின் முயற்சி முன்னுதாரணமாக திகழ வாழ்த்துக்கள்.
ரேணுகா ஹரி, சாலிகிராமம்
Heading : வில்லுப் பாட்டு நிறைவு பெற்றது - சுப்பு ஆறுமுகம் ! மாலா ஶ்ரீ
Comment : வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகத்தின் மறைவு குறித்து தகவல் மிகுந்த அதிர்ச்சி. அவரின் சிறப்புகளை தொகுத்து, விகடகவி வாசகர்கள் சார்பில் நீங்கள் அஞ்சலி செலுத்தியது மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மாயா குப்புசாமி, வடபழனி
Heading : தீபாவளி பரிசு - சத்யபாமா ஒப்பிலி
Comment : தீபாவளி வரவாக மோரிஸ் மைனர் கார் கிடைக்குமா என்ற பலரின் ஏக்கப் பெருமூச்சை கதையாக சத்தியபாமா ஒப்பிலியின் வர்ணனை கலக்கல்! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தடங்கல் இருக்கத்தானே செய்யும்!
ராதா வெங்கட், ஆலப்பாக்கம்
Heading : நியூஸ் நியூஸ் நியூஸ் பொடியன்
Comment : எந்தெந்த அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளின் உடனடியா முடிஞ்சிருக்கு? இதெல்லாம் அவங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி!
நந்தகுமார், சௌபாக்யா, திருவொற்றியூர்
Heading : ஐஸ்வரங்களை அள்ளி தரும் ஐப்பசியே வருக..வருக…!!- ஆரூர் சுந்தரசேகர்.
Comment : ஐஸ்வர்யம் அருளும் ஐப்பசி பற்றியும் அம்மாதத்தில் ரங்கநாதர் கோவிலில் தங்கக் கவசம் அணிந்து காட்சியளிக்கும் தகவலை படித்து மகிழ்ந்தோம். வெல்டன் சுந்தரசேகர்!
ஹெவன் ராஜேஷ், கார்த்திகேயன், திருவண்ணாமலை
Heading : உயிரைக் கொடுத்து தீவிரவாதியை பிடித்த.. இராணுவ நாயின் சாகசம் -ஸ்வேதா அப்புதாஸ்.
Comment : தெற்கு காஷ்மீரில் 2 தீவிரவாதிகளை பிடித்தபோது, இந்திய ராணுவ நாய் சூம் சிகிச்சை பலனின்றி இறந்த தகவலை படித்து அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த வீரருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்.
தன்சிகா ராமச்சந்திரன், பெங்களூரு
Heading : காது குத்த வாங்க -மரியா சிவானந்தம்
Comment : காது குத்த வாங்கனு தலைப்பை பார்த்ததும் மிரண்டு போயிட்டேன். அப்புறம் தனது மகன் வயிற்று பேரனுக்கு திருத்தணியில் காது குத்தியதையும், அதை குத்திய பெண் ஆசாரி குறித்த தகவலையும் மரியா சிவானந்தம் மிக அழகாக விவரித்துள்ளார். மிகச் சிறப்பு.
ஜெயலட்சுமி சங்கரன், நாமக்கல்
Leave a comment
Upload