தொடர்கள்
ஆசிரியர் பக்கம்
ஹாய் டியர் மதன்

20220710172104176.jpg

1. உண்மையை சொல்லுங்கள் உங்களுக்கு இந்தி தெரியுமா… தெரியாதா ?

இதில் உண்மையைச் சொல்ல என்ன இருக்கிறது? எனக்கு இந்தி தெரியாது.நான் பள்ளியில் படித்த போது இந்தி ஒரு பாடமாக இருந்தது.ரொம்ப சுலபமான மொழி. நான் கற்று தேர்ந்திருக்க வேண்டும். ஆனால் முட்டாள்கள் இந்தியைத் திணிக்க முயல, போராட்டம் வெடித்து ஹிந்தியை துரத்தி அடித்து விட்டார்கள். இன்னொரு மொழியை கற்றுக் கொள்வதில் என்ன தப்பு ?ஹிந்தி தெரியாததால் எத்தனை விஷயங்களை இழக்கிறோம்? எனக்கு சான்ஸ் போச்சு!

2.இலக்கியத்திற்கும் வெகுஜன பத்திரிகைக்குமான ஒரு சின்ன வித்தியாசம்? பெரிய வித்தியாசம் ?

20220710173342479.jpg

வெகுஜனப் பத்திரிகை உங்களுக்காக எழுதுவது. இலக்கியம் அவர்களுக்காக எழுதுவது.

3.இன்றைய சூழலில் எலெட்டிரிக் கார்கள் இந்தியாவில் ஜெயிக்குமா ? பெட்ரோல் தீர்ந்து போன நிலையில் உலகம் எப்படியிருக்கும் ?

20220710173201849.jpg

எலக்ட்ரிக் கார்கள் வருவதை தவிர்க்க முடியாது.பெட்ரோல் பற்றாக்குறை நிச்சயம் ஏற்படும். அப்போது எல்லோரும் எலக்ட்ரிக் கார்களை நோக்கி ஓடுவார்கள் . எலெக்ட்ரிக் கார்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்.

4.மார்ஸ்(செவ்வாய்) கிரகத்திற்கு செல்லலாம். ஆனால் திரும்ப வரவே முடியாது என்று நாசா அழைப்பு விடுத்தால்.... ?

20220710172836503.jpg

ஒரு கிரகத்திற்கு போக முடியும் என்றால் திரும்பி வரவும் முடியும் என்று அர்த்தம்! வருவதற்கு சில மாதங்கள் பிடிக்கும். அதுதான் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் வித்தியாசம்.

5.அன்றைய காதலர்களுக்கு வாட்சப்போ, வீடியோ காலோ கிடையாது. இன்றைய காதலர்களுக்கு தொலை தொடர்பு சாதனம் தான் காதல் தூது என்கிறேன் ! நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?

20220710172815941.jpg

அது சரி !அந்தக் காலத்திலேயும் காதலுக்கு எதுவும் தடையாக இருந்ததில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும்.

தொகுப்பு: வேங்கடகிருஷ்ணன்

வாசகர்கள் தங்கள் கேள்விகளை ஹாய் டியர் மதனுக்கு அனுப்ப வேண்டிய முகவரி: info@vikatakavi.in

20220713064802132.jpeg