#எது சுதந்திரம்?#
கட்டவிழ்த்து விட்ட காளை போல்
துள்ளிக் குதித்து ஓடுவதா?
அல்லது களத்தில் நின்று
சிறப்பாக விளையாடுவதா?
எது சுதந்திரம்??
பல நேரங்களில்
இங்கு
எல்லைகள் வகுக்கப்பட்டது
அடக்குமுறைக்கு அல்ல
எதிலும் அளவோடு இருப்பதற்கு
அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் நஞ்சு
என்ற புரிதல் வேண்டும்
கொடுக்கப்பட்ட சுதந்திரம்
பயன்படுத்தபடும் விதத்தில் தான்
அதன் பூரணத்துவம் உள்ளது.
நீண்ட நாட்களாக பெருந்தொற்றின்
பிடியில் சிக்கி
வீட்டுச் சிறையில் தவித்தோம்
வானமே எல்லை
என்ற போதிலும்
சுதந்திரக் காற்றை சுவாசிக்க
நாம் எடுக்கும்
முயற்சிகள் வரம்பு மீறாமல்
இருப்பது நன்று
நம் சுதந்திரம் முடிவது
அடுத்தவரின்
சுதந்திரம் துவங்கும்
இடத்திலே
என்பதை மறவாதிருத்தல் ..
அதுவே சுதந்திரம்!
அதைப் போற்றி
பேணிக் காப்போம்!!
Leave a comment
Upload