தொடர்கள்
ஜோக்ஸ்
இதென்ன ஙொப்பன் ஊட்டு ரோடா ??? பால்கி

போட்டோ போட்டு துணுக்கு அடிங்க !!

இடம்: மும்பை. பல வருடங்களுக்கு முன்னர் நடந்தது.

2022062918052279.jpg

இதோ இந்த தெருப் பெயர் பலகை தாங்கி நிற்கும் தூணருகே ஒரு பார்ஸிக்காரர் தனது காரை நிறுத்தி விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் அவ்விடத்திற்கு வர அங்கு ஒரு ட்ராஃபிக் கான்ஸ்டபிள் அந்த காருக்கு அருகே சற்று தள்ளி நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

வந்தவர் டிரைவர் ஸீட் கதவை திறந்து உள்ளே நுழைந்தமர்ந்தார்.

ஓடி வந்த கான்ஸ்டபிள், ‘என்ன! இங்க இப்பிடியா வண்டிய நிறுத்திட்டுப்போறது...

அவர்: சாரி..

கான்ஸ்டபிளுக்கு அந்த கார் டிரைவரிடம் இன்னும் தான் சரி வர தன் அதிகாரத்தைக் காட்டவில்லை என்ற உணர்வு உந்திக்கொண்டிருந்தது. அவரே தொடர்ந்து,

என்ன! இந்த ரோடு உன் அப்பன் ரோடா? உம் பாட்டுக்கு வண்டிய இப்டி நிறுத்திட்டுப்போறதுக்கு.

20220629180626892.jpg

அவர்: ஆமாம். இந்த ரோடு எங்க அப்பா வோடதுதான்.

கான்ஸ்டபிள் சூடாயிட்டார்.

“என்ன பெர்ஸு...கிண்டலா..”

அவர்: ரோட் பேரு என்ன போட்டிருக்கு கான்ஸ்டபிள் சார்?

“ரோடு பேரு,ஹோமி மோடி ரோடு”, ஆமா, அதுக்கு என்ன இப்போ? என்றார் கான்ஸ்டபிள் காரில் இருந்தவரைப் பார்த்து முறைத்தபடி. அவர் தான் ஙொப்பான்னு சொல்லப் போறீங்களா ???

அவர்: “ஆமா. ஹோமி மோடி. அவர் தான் என் அப்பா. எங்கப்பா பேரு தான்”.

“நான் அவரோட பையன், ருஸி மோடி,” என்றார் கூலா...

20220629180708639.jpgஹோமி மோடி ரோட்டிலிருந்து கான்ஸ்டபிள் ஆடிட்டார், ஓடிட்டார்.