தொடர்கள்
கவிதை
காலச்சக்கரம் - லாவண்யா மணிமுத்து

20220625221546467.jpg

# காலச்சக்கரம் #

ஓ காலமே!

உனது சக்கரம்
சுழல்வது எதற்காக?

வாழ்க்கையும் சுழலும்

சக்கரம் தானே?
அதை கொஞ்சம்

சுற்றி விடுவோம் என்றா?

குப்பையில் உள்ளவனை

கோடீஸ்வரனாக்குகிறாய்

உயர்ந்த இடத்தில் இருப்பவனை

பாதாளத்தில் தள்ளி விடுகிறாய்

இதுதான் காலத்தின் கோலமா?

சிலரின் வாழ்வை

வண்ணமயமாக்குகிறாய்

சிலரோ கருப்பு வெள்ளையிலேயே

எப்போதும் காட்சியளிக்கிறார்கள்

ஓ காலமே!
ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது

உன்னோடு சேர்ந்து முயன்று

சுழன்று ஓடினால் மட்டுமே
இங்கு நம் பெயரை

பொன் எழுத்துக்களால்

பொறிக்க முடியும்!!