தொடர்கள்
நொறுக்ஸ்
ஜெர்மன் டயரி - இந்த வாரம் ப்ரெட்ஸ்பெல்டு கார்த்திக் ராம்

20220630085301958.jpeg

வணக்கம் !

இந்த வாரம் ப்ரெட்ஸ்பெல்டு (Pretzfeld) அப்படிங்கிற ஊருக்கு போயிருந்தேன். இந்த ஊர் ஜெர்மனியின் பிராங்கோனியன் சுவிற்சர்லாந்து அப்படிங்கிற ஒரு பகுதியில இருக்கு. அதென்ன பிராங்கோனியன் சுவிற்சர்லாந்துனு ஒரு கேள்வி வரும். பவாரியா மாநிலத்துக்குள்ள இருக்கிறதுதான் பிராங்கோனியா அப்படிங்கிற ஒரு பகுதி. இப்ப நம்ம ஊர்ல தமிழ்நாட்டுக்குள்ளயே சில பல ஏரியா இருக்குல்ல, அந்த மாதிரிதான். சரி அது புரிஞ்சது, அதென்ன பிராங்கோனியன் சுவிற்சர்லாந்து?

19வது நூற்றாண்டுல இந்த பகுதியை உலா வந்த முதல் கலை வல்லுநர்களும் கவிஞர்களும் இந்த பகுதியோட அழகுல மயங்கி, பாக்கறதுக்கு சுவிற்சர்லாந்து மாதிரி இருக்குன்னு இந்த எடத்துக்கு, பிராங்கோனியன் சுவிற்சர்லாந்துனு பேர் வச்சாங்க. ஜெர்மனியில் இருக்கிற மிக பழமை வாய்ந்த சுற்றுலா தலம் இது. இந்த ஊரை சுத்தி ஒரு 25 கிமீ அப்படியே காடு மலை வயல்ன்னு வலம் வந்தேன். சும்மா சொல்ல கூடாது, அந்த காத்து, வெயில், அந்த அமைதி கூடவே ஓடையோட தண்ணி சத்தம், இதை சொல்லி புரிய வைக்க முடியாது, அனுபவிச்சாதான் புரியும்.

20220630085327903.jpeg

அது இருக்கட்டும், எல்லா ஊற போல, இங்க ஏதாவது விசேஷம் இருக்கணுமேன்னு நீங்க கேக்கற மயிண்டு வாய்ஸ் கேள்வி எனக்கு கேக்குது. ஒன்னு இல்ல, ரெண்டு விஷயம் சொல்ரேன். முதல் விஷயம்- உலகத்துலயே ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகமா பீர் தயாரிக்கற இடம் இங்க தான் இருக்கு. என்னடா இது நல்லாதானே போய்ட்டு இருந்திச்சு டக்குனு சாராயத்தை பத்தி பேசறான்னு நெனைக்கறீங்களா? அந்த காலத்துல கிருத்தவ மடத்துல இருக்கிற சீடர்களும் பாதிரியாரும்தான் இந்த பீர் தயாரிச்சாங்க. அவங்களோட பாஷையிலே பீரை ஒரு திரவ கோதுமைனு சொல்வாங்க.

2022063008535097.jpeg

எப்படி கட்டுப்பாட்டோடு தயாரிக்கிறாங்களோ அதே கட்டுப்பாட்டோடு அருந்தவும் செய்யறாங்க. நம்ம ஊரு மாரி, மூடிய திறக்ககுள்ள அலப்பறை பண்ற வேலையெல்லாம் கிடையாது. ரெண்டாவது விஷயம்- இந்த பகுதியில மிக அதிகமா குகைகள் நிறைஞ்சிருக்கு. ஒரு காலத்துல இந்த பகுதி கடலுக்குள்ள இருந்திச்சி, தண்ணி இறங்குன போது சுண்ணாம்பு படுக்கைகள் உரு மாறி சிறு மலைகளாகும் குகைகளாகும் ஆயிடுச்சு. சரி ரயில் வண்டி வந்திருச்சு நான் கிளம்பறேன். மீண்டும் அடுத்த வாரம் இன்னொரு சுவாரசிய செய்தியோடு. அது வரை, சியர்ஸ்!

20220630085418184.jpeg