தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220622192049576.jpeg

Heading : வலையங்கம்

Comment : 'கொரோனா தொற்று பாதிப்புக்கு அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சிகிச்சை பெற்று, அங்கு தமிழக மக்கள் பயமின்றி சிகிச்சை பெறுவதற்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா?' எனும் விகடகவியின் வலையங்க கேள்விக்கு, சம்பந்தப்பட்டவர்களின் விடை கிடைப்பது கஷ்டம் எனத் தோன்றுகிறது. இருப்பவனுக்கு தனியார், இல்லாதவனுக்கு அரசு ஆஸ்பத்திரி!

ராதா வெங்கட், ஆலப்பாக்கம்

Heading : ஹாய் டியர் மதன்

Comment : அடடே... ஹாய் டியர் மதன் கேள்வி-பதில் ஆரம்பிச்சாச்சு! இனிமே நம்ம சந்தேகங்களை கேள்வி கேட்டா, அவரு எல்லா கேள்விகளுக்கும் ஜாலியா, டேக் இட் ஈஸியா பதில் சொல்வாரு. நாம் கேள்விக் கணைகளை தொடுப்போமா?

மாயா குப்புசாமி, ராதா வெங்கடேசன், ஊத்துக்கோட்டை

Heading : ஆன்மீக ஆசான் - 97 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : மகாபெரியவா முன் வேதவல்லி சந்தானத்தின் பாடல் பாடிய அனுபவங்கள் கேட்க கேட்க 'ஒன்ஸ்மோர்' சொல்ல வைத்தது!

ரேணுகா ஹரி, சாலிகிராமம்

Heading : முதலையை திருமணம் செய்த மெக்சிகன் மேயர் - மாலா ஶ்ரீ

Comment : அடப்பாவிகளா... ஆடு, மாடு, நாய், கழுதை போய்... இப்போ முதலைகூட கல்யாணமா?! இது 21-ம் நூற்றாண்டின் அதிசயமா அல்லது கற்காலம் துவங்கிவிட்டதா?

ஜமுனா பிரபாகரன், சேலம்

Heading : வலையங்கம்

Comment : 1950-1960 களில் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தான் பல தலைவர்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் அரசு பொது மருத்துவ மனையில் சேவையின் தரம் குறைந்தது என்று அரசு தலைமை கருதுகிறது!!!!

Heading : ஆசிரியர்கள் படும் பாடு -ஜாசன்

Comment : வரும் நாட்களில், அரசியல் தலைவர்கள், மற்ற தேவையான அடியாட்கள், இப்போது இருந்தே இந்த பள்ளியில் தயாராகிறார்கள் போல!

Heading : சிங்கம் படும் பாடு - பால்கி

Comment : இப்போதைக்கு வேற எதுவும் இல்லை. எனவே இந்த சிங்கங்கள் கதை பொருள் ஆனது!!

Heading : பற்றி எரியும் இலங்கை - மூத்த பத்திரிகையாளர் ஜாசன்

Comment : கந்து வட்டிக்காரனிடம் சிக்கிய, கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கிய இலங்கை அரசின் தலைமை!!!!

Heading : விகடகவி யார் டைரி குறிப்பு

Comment : இப்படி ஒரு அரசியல் கட்சி!

Heading : கருத்து கதிர்வேலன்

Comment : இப்படியும் அரசியல்!!!!@

Heading : நீலகிரியை உருக்குலைய வைத்த தென் மேற்கு பருவமழை -ஸ்வேதா அப்புதாஸ் .

Comment : இந்த காட்சிகள் நீலகிரி மாவட்டத்தில் வருடா வருடம் நடக்கும்..அதிகாரிகள், மக்கள் ஏற்றுக் கொண்டு எதுவும் செய்ய இயலாது, கடந்து செல்வதும் ..தொடர்கதையே

Heading : கனிமொழியின் சைக்கிள் - மாலா ஶ்ரீ

Comment : இந்த விஷயம் பாராட்டுக்குரியது

Heading : தேன்தமிழ் துளிகள்-1-மரியா சிவானந்தம்

Comment : இந்த பணி தொடர வாழ்த்துக்கள்

Heading : தேன்தமிழ் துளிகள்-1-மரியா சிவானந்தம்

Comment : ஆரம்பமே அட்டஹாசம் இலக்கிய சுவைக்கு காத்திருக்கிறோம் வாழ்க வளர்க

venkat, சென்னை