தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

20220518103841570.jpeg

Heading : நிமிடத்தில் இருக்கு வாழ்க்கை - பா. அய்யாசாமி

Comment : Very nice story

Seethalakshmi , Trichy

Heading : வலையங்கம்

Comment : அரசு நடத்தும் பள்ளிக்கூடங்களில், தமிழ் கற்பிக்கும் தமிழாசிரியர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை.

Heading : வெற்றி - உழைப்பின் மறுபக்கம் -மரியா சிவானந்தம்

Comment : மற்ற மாணாக்கர்கள் இதனால உற்சாகமாக உணர வேண்டும். பார்க்கவன்

Heading : மீண்ட சொர்க்கம் கி. ரமணி

Comment : ஏதோபழைய காலத்துகதை எனப்படித்தால்…. இது 2122ல் நடக்கிறது!!!! உண்மைதான், உலகில் அறிவியல் இல்லையென்றால் அமைதியும் அன்பும் நிறைந்திருக்கும்!!!! அருமையான கதை!!!!

Varathanarayanan S, Bangalore

Heading : அக்னிபத் ! சக்ரவியூகம் ! ராம் / வெங்கடகிருஷ்ணன்

Comment : Brilliant interview clarifying so many questions. Thanks Vikatakavi.

Rajesh Jayaraman, Hong Kong

Heading : மீண்ட சொர்க்கம் கி. ரமணி

Comment : கலியுகத்திலிருந்து த்ரேதா யுகம் மிக அருகில் என்று சொல்கிறது இந்த கதை! சபாஷ்.

Heading : வலையங்கம்

Comment : 'தமிழ் வாழ்க' கோஷம் மட்டும் போதாது. அது பள்ளி மாணவர்கள் உள்பட மக்களிடையே வாழ, பழக, உயிர்ப்புடன் வளர நாம் என்ன செய்தோம், செய்கிறோம், செய்யப்போகிறோம் என்ற விகடகவி யின் வலையங்க சரியான 'நெத்தியடி' கேள்வி. இதற்கு தமிழ் ஆர்வலர்களால் திராவிட கட்சிகளின் பதில் என்ன?

ரித்திகா கோபால், நெற்குன்றம்

Heading : அக்னிபத் ! சக்ரவியூகம் ! ராம் / வெங்கடகிருஷ்ணன்

Comment : விகடகவி யின் அக்னிபத் குறித்து சக்கர வியூக - சரமாரி கேள்விக் கணைகளை, தனது தெளிவான தமிழ் நடையில் அழகாக பதிலளித்துள்ளார் மேஜர் மதன் குமார். அவருக்கும் விகடகவி குழுவினருக்கும் எங்களின் ராயல் சல்யூட்!

ராதா வெங்கட், மாயா, ஆலப்பாக்கம்

Heading : ஆன்மீக ஆசான் - 95 - ஸ்ரீநிவாஸ் பார்த்தசாரதி

Comment : மகாபெரியவர் தொடர்பான அனுபவங்கள் குறித்து ராமேஸ்வரம் பாச்சா சாஸ்திரிகள் விவரித்த விதம் மிக அருமை!

ராஜேஷ், ராஜலட்சுமி, கடலூர்

Heading : “நெஞ்சில் தைத்த முள்…”. வெ.சுப்பிரமணியன்

Comment : தனது ‘காதலனும், காதலும்’ போலியானவை என்பதைப் புரிந்துகொண்டாள் ஹேமா. போலியான காதலாக, தனது ‘நெஞ்சில் தைத்த முள்’, வாழ்வில் ‘புரையோடி ரணமாக்கும்’ முன்னரே, அதைச் சரியான நேரத்தில் பிடுங்கி எறிந்த தன் பெற்றோருக்கு நன்றி சொல்லி, மன்னிப்பு கேட்கும் விதமாக, அவர்களின் காலில் ‘கண்ணீரோடு விழுந்தாள் என்ற வார்த்தைகள் 'போலி' காதலர்களுக்கு சரியான நெத்தியடி பதில். சபாஷ்!

ரேணுகா ஹரி, சிவகங்கை

Heading : நிமிடத்தில் இருக்கு வாழ்க்கை - பா. அய்யாசாமி

Comment : நிமிடத்தில் இருக்கு வாழ்க்கை கதை மூலம் தாம்பத்தியம் அன்னியோன்யம், வீடே மற்றும் உறவுகளின் கடந்தகால வாழ்வியல் நினைவுகளை அய்யாசாமி அனாயசமாக கையாண்டு அசத்திவிட்டார்!

ஜமுனா பிரபாகரன், ஊத்துக்கோட்டை

Heading : மீண்ட சொர்க்கம் கி. ரமணி

Comment : கி.ரமணியின் மீண்ட சொர்க்கம் கதையில், 'உலகின் வெவ்வேறு இடங்களில் அகப்பட்டு இருக்கும் சில மனிதர்களால், அறிவியலை மறுபடியும் உயிர்த்தெழச் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் ஓன்று. அறிவியலின் அழிவு அன்பை, உலகம் எங்கும் நிரப்பி இருக்கிறதோ என தோன்றுகிறது' என்ற வரிகள் நெஞ்சை கலங்க வைத்தது.

சம்யுக்தா, பிருத்விராஜ், பாளையங்கோட்டை