சசிகலா பாரதிய ஜனதாவுக்கு வந்தால் வரவேற்கத் தயார் நைனார் நாகேந்திரன்.
அண்ணனுக்கு சின்னம்மா மேல இன்னும் பழைய விசுவாசமா அப்படியே இருக்கு.
பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலைக்கு பக்குவம் கிடையாது அமைச்சர் செந்தில்பாலாஜி
ஆமாமா உண்மையை புட்டுப்புட்டு வைத்து விடுகிறார் அது தப்புதான்
அயோத்தி ராமர் கோயில் தேசிய கோயிலாக இருக்கும் யோகி ஆதித்யநாத்
அப்ப தேசிய கடவுள் ராமர் என்ற அறிவிப்பு சீக்கிரம் எதிர்பார்க்கலாம்
சோதனை என்பது எனக்கு புதியது இல்லை இதுவரை யாரையும் ஆறுமுறை சோதனை செய்தது இல்லை கார்த்திக் சிதம்பரம்
இதை வச்சி அடுத்த தேர்தல்ல சாதனை நாயகன் என்று சொல்லி ஓட்டு அள்ளி விடுவார் போல
அரசை நாடி வருபவரை மனநிறைவோடு அனுப்பி வைக்கவேண்டும் தமிழக முதல்வர்
அதற்கெல்லாம் நிறைய செலவாகும் முதல்வரே என்கிறார் தாலுகா அலுவலக ஊழியர் ஒருவர்
பாரதிய ஜனதா ஆதரவு பிரச்சாரம் செய்தார் என்று காவலர் சஸ்பெண்ட்
அப்ப பிஜேபி உள்ளே வந்துட்டு இருக்கு ன்னு சொன்னது உண்மைதானா
திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே எந்த ஒரு உரசலும் விரிசலும் இல்லை திருநாவுக்கரசர்
நல்லவேளை இதையாவது வாயை மூடி துணியை கட்டாம வாயை திறந்து சொன்னீங்களே
பாரம்பரியத்தை மீட்கவே தேசிய கல்விக் கொள்கை தமிழக ஆளுநர்
மத்திய அரசின் ஏஜெண்ட்என்று உங்களை சொல்வதில் தப்பே இல்லை
2000 ரூபாய் நோட்டு புழக்கம் குறைந்துள்ளது ரிசர்வ் வங்கி
பணப்புழக்கம் இல்லை என்று லண்டனிலிருந்து பேட்டி தருகிறார் ராகுல் காந்தி
பதினெட்டு வருடமாக நான் கட்சியில் இருக்கிறேன் எனக்கு எம்பி ஆகும் தகுதி இல்லையா நக்மா கேள்வி
உங்க கோஸ்டி டெல்லியில் ரொம்ப வீக்கு போல இருக்கு உடனே கோஷ்டி மாறுங்கள்
பாட்டாளி மக்கள் கட்சி ஜாதி கட்சி இல்லை அன்புமணி ராமதாஸ்
அப்ப வன்னியர் இட ஒதுக்கீடு உள் ஒதுக்கீடு கேட்டு நச்சு பண்ண மாட்டீங்களா
Leave a comment
Upload