அன்று எண்பதுகளில்
என் உள்ளம் தொட்டாய்...!
இன்று உன் எண்பதில்
உலகின் உள்ளங்கள் தொட்டாய்...!
இல்லத்தின் கதவுகள்
திறந்தாலே உன் பாடல்...!
உள்ளத்தின் உணர்வினை
சொல்லும் ஒரு நொடியில்...!
காலைத் தென்றலில்
தவழ்ந்து வரும் பூபாளம்...!
செந்தாழம் பூவினில்
வந்தாடும் தென்றலாய்..!
துவங்கிய நாளொன்றும்
தொய்யாமல் போவதற்கு
பிலஹரி,தன்யாசி,ஆரபியில்
ஓயாது ஒலிக்கும் உன் பாடல்...!
மதியம் மத்யமாவதி, மனிரங்கு
ராகத்தில் மனம் இறங்கும்...!
மீண்டு வருதற்கு மாண்டு,
பைரவி,கல்யாணியில் உன் பாடல்..!
மாலைவேளை மோகனத்தில்
மலையமாருதம், காம்போதி,
ஆனந்தபைரவியின் மயக்கத்தில்
அழைத்துச் செல்லுமே உன் பாடல்...!
இரவின் மடியில் தாலாட்டி
உறங்கிப் போக வைப்பதற்கு
நீலாம்பரி,சஹானா என்று
ராகத்தில் வருமே உன் பாடல்...!
வேளைக் கேற்ற பாடல்கள்
விதவிதமாய் தந்துவிட்டாய்...!
மனதின் எந்நிலைக்கும்
மருந்தே உன் பாடல் தான்...!
இன்னும் வேண்டும் யெனக்
கேட்கும் என்போன்ற ரசிகனுக்கு,
இல்லை என்று சொல்லாமல்
அள்ளிக் கொடுக்க நீர் மேலும்,
நலமோடும் நல்வாழ்வோடும்
நூறாண்டு வாழ்ந்திருக்க,
கலைவாணி அன்னையவள்
காத்து அருள் புரியட்டும்...!
இப்படிக்கு
இசைஞானி
இசைப்பிரியன்
Leave a comment
Upload