தொடர்கள்
சோகம்
"நீலகிரி நினைவில் என்றும் நடிகர் விவேக்... - ஸ்வேதா அப்புதாஸ்..

20210317092923736.jpeg

நடிகர் விவேக்கின் மறைவு செய்தி என்னையும் நீலகிரி மக்களையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இயற்கையை நேசித்து, அப்துல் காலம் சுற்றுசூழல் இயக்கத்துடன் இணைந்து, ஒரு செலிபிரிட்டி என்ற முறையில்.. மரங்கள் நடுவதில் அதிக ஆவலை கொண்டு, ஏராளமான மர கன்றுகளை நட்டு சுற்றுசூழல் பாதுகாப்பதில் அதிக அக்கறை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் நடிகர் விவேக். அவரின் இந்த அற்புத முயற்சியால், நம் நீலகிரி மாவட்டத்தில் 4 லட்சம் மர கன்றுகளை அவருடன் இணைந்து நட்டுள்ளோம். இந்த மரக் கன்றுகள் அவரின் நினைவை தாங்கி வளரும். எங்களின் நீலகிரி மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்து விட்டவர் நடிகர் விவேக். அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் மாவட்டத்தின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்... என்றார் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்வியா.