தொடர்கள்
வாசகர் மெயில்
வாசகர் மெயில்

2020102010570098.jpeg

தமிழக ஆளுநர் ஆகிறார் டிரம்ப்....??!!! - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

ஆரம்ப கவர் ஸ்டோரியான 'தமிழக கவர்னராகிறார் டிரம்ப்' - 10 ஆயிரம் வாலா சரவெடியாக கலகலப்பை ஏற்படுத்தியது. மிஸ்டர் ரீலுக்கு செம தில்லுதான்! இக்கட்டுரையின் 4 நாயகர்கள் - பிடென், டிரம்ப், ஜாசன் மற்றும் ஓவியர் பிரபு ஹாட்ஸ் ஆப்!

பத்மினி சுகுமார், மேற்கு மாம்பலம்



Heading : திகைப்பூட்டா தீபாவளி.... - மாலா ரமேஷ்

Comment : மாலா ரமேஷ் கூறியது போல் இது திகைப்பூட்டாத தீபாவளிதான். ஏன்னா, கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், அன்றைய தினம் மழை பெய்யாமல் ரிலாக்ஸாக மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட முடிந்ததே!

கண்ணகி பாலசந்தர், கோவிலம்பாக்கம்



Heading : தீபாவளி பட்டாசுகளும் ...குடும்பமும்! - வேங்கடகிருஷ்ணன்

Comment : தீபாவளி பட்டாசு ரகங்களை வைத்து மனிதர்களை எடை போட வைக்கிறீர்கள். ஆனால், சொன்ன விதம் மிக அருமை. அனைவரையும் கலகலக்க வைத்தது.

ராமச்சந்திரன், பெங்களூர்


Heading : வாசி யோசி.. - 13 - வேங்கடகிருஷ்ணன்

Comment : ஐ... இந்த ஐடியா நல்லாயிருக்கு! ஆனா, ஒரே இடத்தில் நாய், குதிரை, பெங்குவின், சிங்கம் இருந்தா என்ன செய்வது? ராங் மாஸ்டர் போல் சமாளிக்க வேண்டும் போலிருக்கு!

ரகோத்தமன், குரோம்பேட்டை


உலகம் சுற்றும் விகடகவி - அழகு சாதனங்களுக்கு பின்.... ! ராம்.

உங்களோடு சேர்த்து நாங்களும் உலகத்தை சுத்தி பாத்தாச்சு. Also very interesting to read how in Brazil, the candidates add the current president's name to their name to bring so much confusion to the voters.

வரா, நேபர்வில்லே


மலரும் (மாமியார் ) நினைவுகள்... - மரியா சிவானந்தம்

Very nice memories. Brings tears in the eyes.

சிவா


தீபா(வின்)வலி… – பா. அய்யாசாமி

தீபா(வின்)வலி என்ற தலைப்பை பார்த்து, ஏதோ ஒரு பெண்ணின் மனவலியாக்கும்னு நினைத்து ஏமாந்தேன். உண்மையில், குட்டிகள் ஈனும் நாய்க்காக தனது தீபாவளி கொண்டாட்த்தை துறந்த பள்ளி மாணவனின் வலி என்பதை படித்து நெகிழ்ந்தேன். சூப்பர்ப்!

கலா கார்த்திக், அயனம்பாக்கம்


வைரலாகும் வள்ளுவர்... - மமதி ஸ்டைல்! - மரியா சிவானந்தம்

நம்ம ஊரு மமதி சாரியும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸும் முகச்சாயல் மற்றும் ஹேர் ஸ்டைலில் ஒரே மாதிரி இருக்காங்களே... ஒருவேளை, இவங்க அவங்களுக்கு ரொம்ப தூரத்து சொந்தமா அல்லது குளோனிங்கா என சந்தேகம் எழுகிறது.

அட்சயா, அனுஷ்கா, ரோகிணி, சென்னை


விண்வெளிக்கு கிளம்பிய ஸ்பேஸ் எக்ஸ்... - சவுந்தர்யா சுந்தர்

அமெரிக்காவின் நாசா ஆய்வு மையத்துடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விரைவில் விண்வெளிக்கு டிரான்ஸ்போர்ட் ஆரம்பிச்சா... பூமியில் ஜனத்தொகை குறையலாம்!

லாவண்யா மோகன், திருநின்றவூர்


மாண்புமிகு மனிதர்கள்...!. - ஜாசன் (மூத்த பத்திரிகையாளர்)

'ஸாரி' என்பதன் புதுவிதமான விளக்கங்களை பேரன் முதல் முன்னாள் அமைச்சர் வரை கற்றறிந்தீர்கள். இதுதான் மாண்புமிகு மனிதர்கள் மூலம் மற்றவர்கள் கற்றுணரும் பாடமாகும்.

பிரபாகரன், அம்பத்தூர்


தீபாவளி அன்றும், இன்றும்.. - ராம்

very true!! i completely agree!! these days festivals have lost the true sesne!! it is monotonous!!! sweets are brought from shops clothes every time you shop no thrill in Diwali shopping

ஜெயஸ்ரீ டிஎஸ்


மலரும் (மாமியார் ) நினைவுகள்... - மரியா சிவானந்தம்

மரியா சிவானந்தத்தின் 'மலரும் (மாமியார்) நினைவுகள்' செம அசத்தல். இப்பவாவது பூ கட்ட, அம்மி மற்றும் உரல்ல அரைக்க கத்துக்கிட்டீங்களா அல்லது அதுவும் மலரும் நினைவுகள்தானா? ஆனா ஒண்ணு... கடைசிவரை மாமியார் மெச்சிய மருமகளாதான் இருந்திருப்பீங்க! மிக அழகான கட்டுரை.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


‘வாழ்க்கைச் சூழல்’ - வெ. சுப்பிரமணியன்

என்னாபா... இப்டி சொல்லிட்டே! அல்லாருமே கிராமத்துலருந்து சிட்டிக்கு ஓடி வந்தவுகதான். இப்ப சிட்டி கலீஜ் ஆயிடுச்சு. எல்லாம் வெல ஜாஸ்திதான். இப்ப இருக்கற பசங்க அட்ஜஸ் பண்றாங்க. உன்னால அட்ஜஸ் பண்ண முடியலனா இடத்தை காலி பண்ணு, காத்து வரட்டும்! அப்பால நீயா எங்க சோதில கலந்துடுவே...

பார்த்திபன், சிவராமன், திருச்சானூர்


காதலுக்கு கண்ணில்லை. தீபாவளி குறும் (பு) படம்... - ராம்.

வரவர ராமின் கு(சு)றும்பு அதிகமாயிடுச்சு... விகடகவியின் முதல் தீபாவளி பட ரிலீஸான 'காதலுக்கு கண்ணில்லை' (குறும்)படம், அவரது நிரந்தர 'கனவு' நாயகியை வெளிப்படுத்தி விட்டது. மனுஷனுக்கு ரொம்ப 'தில்லு'தான்!

கௌஷிக், தீட்சிதா, சூர்யா, சென்னை


“விலைவாசியை சமாளிப்பது எப்படி?” - மக்கள் கருத்து... - தில்லைக்கரசி சம்பத்

விலைவாசி பத்தி மக்களே கவலைப்படலை... நீங்க மட்டும் கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்? தாம்பரத்தை சேர்ந்தவர் சொன்னது போல, கடனோ உடனோ வாங்கி, வருஷத்துக்கு ஒரு தடவை வர்ற பண்டிகைகளை கொண்டாடுறாங்க. பின்னர் சட்டமன்றத் தேர்தல்ல எல்லா கட்சிக்காரர்களிடமும் அறுவடை பண்ணிடலாம்கிற நப்பாசைதான்!

அம்சவள்ளி ஆறுமுகம், பெரவள்ளூர்


முடிச்சுப்போடாதே... - ஆர்னிகா நாசர்

ஆர்னிகா நாசரின் முடிச்சு போடாதே சிறுகதை நல்ல படிப்பினையாக உள்ளது. ஏன்னா, சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் பலர் ஆடிட்டு இருக்காங்க. பின்னர் மொத்தமா இழந்து பரிதவிக்கும்போது பரிதாபம் கூட ஏற்படுவதில்லை.

முகமது அஷ்ரப், வாணியம்பாடி


"எங்க தலைவர் சொல்வதை தான் இந்த அரசு செய்கிறது....” - ராசா பேட்டி!

ஆ.ராசாவின் பேட்டியில், ஒரேயடியாக அவங்க தலைவர் சொல்படிதான் நடக்குதுனு அடிக்கடி சொல்றார். அப்படியே 'அடுத்து எங்க ஆட்சிதான். எங்க ஆட்சியில் இதெல்லாம் தடுப்போம்'னு சொல்றதை நிறுத்திட்டு, சட்டமன்றத் தேர்தல்ல திமுக ஜெயிக்கறதுக்கான வழியை பார்க்க சொல்லுங்க. இவரு டயலாக்கை கேட்டு மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட மறந்துடப் போறாங்க!

சுப்பிரமணிய சிவா, பொன்பரப்பி


ஜோக்ஸ்.. - கோவி.கோவன்

அடடே... கோவி.கோவனின் ஜோக்ஸ்களை இதுவரை விகடன், குமுதம், பேஸ்புக் பக்கத்தில் படித்து ரசித்தேன். தற்போது விகடகவியின் தீபாவளி ஸ்பெஷலில் பார்த்ததில் பிரமித்தேன். ஏன்னா, அவர் எங்க வீட்டுக்கு வந்து சிறப்பித்தது போலிருக்கு!

ரேணுகா ஹரிஹரன், சாலிகிராமம்


மு.முத்தண்ணா & ரெ.ரெங்குடுவுக்கு ஒரு நியூ நார்மல் காணிக்கை!- தில்லை & வெங்கட்

ஜாம்பவான் மதனின் முன்ஜாக்கிரதை முத்தண்ணா, ரெட்டைவால் ரெங்குடு கார்ட்டூன் ஜோக்ஸ் படித்து சிறுவயதில் பிரமித்திருக்கிறேன். தற்போது அப்படங்களை வைத்து புது ஜோக்ஸ் முயற்சித்த தில்லை, வெங்கட்டின் பாராட்டுக்கு உரியது.

ஜமுனா பிரபாகரன், திருவள்ளூர்


வைரலாகும் வள்ளுவர்... - மமதி ஸ்டைல்! - மரியா சிவானந்தம்

குறள் முதல்: மமதி ஸ்டைல் கட்டுரை படிக்கும்போது செம த்ரில்லிங். வள்ளுவரின் இரண்டு அடி குறளை ஷேக்ஸ்பியர் உள்பட பல்வேறு ஆங்கில அறிஞர்கள் எழுதியதை படிக்கும்போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. வெல்டன் மரியா சிவானந்தம்!

லாவண்யா கார்த்திக், நாக்பூர்


மீண்டும் சேனல் டாக்!

சேனல் டாக் மீண்டும் வருகையை கட்டியம் கூறி வரவேற்பு அளித்தது மிக சிறப்பு. அதை தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக நாயகி தொடர் வெளிவராததற்கு பின்னணி காரணங்கள் கூறியதை தீபாவளி பலகாரங்களை வரிந்து கட்டி சாப்பிட்டது போலிருக்கு!

மாயா குப்புசாமி, ஊத்துக்கோட்டை


பட்டாசு வாங்கலையோ பட்டாசு..! - தில்லைக்கரசி சம்பத்

கவுண்டமணி-செந்தில் காம்பினேஷன் காமெடியே 10 ஆயிரம் வாலா சரவெடி வெடிச்ச மாதிரி இருக்கும். இதுல அவங்க பட்டாசு விக்கப்போற அரசியல் தலைவர்களை கலாய்க்காமல் ஓடுவது, பட்டாசின் ஒலி அளவை குறைச்ச மாதிரி இருந்தது.

செந்தில், சரவணன், ராஜேந்திரன், வடபழனி


கமலா ஹாரிஸ் ஒரு பெண் ஒபாமா...?! - ஸ்வேதா அப்புதாஸ்

அமெரிக்க துணை அதிபரும் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்த கமலா ஹாரீஸின் வாழ்க்கை வரலாற்றை ஒரு டாக்குமென்டரி ஃபிலிம் போல் காட்டி அசத்திவிட்டார் ஸ்வேதா அப்புதாஸ். கங்கிராட்ஸ்!

சிவகுமார், ராகவேந்திரா, சிவகங்கை


வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

கிருபானந்த வாரியரின் ஆன்மீக சொற்பொழிவு முதல் நகைச்சுவை உணர்வு வரை முதன்முறையாக அழகாக விளக்கிய சுந்தரசேகருக்கு மனமார்ந்த நன்றி.

ஜெகதீசன், ஜெயராமன், மாதவரம்


தீபாவளி. காசியிலிருந்து நேரடியாக ஒரு ரிப்போர்ட் ! அருணாசலம்.

தீபாவளி தினத்தன்று காசியில் கங்கா ஸ்நானம் செய்வது விசேஷம் என்பர். விகடகவி வாசகர்கள் சார்பில் அருணாசலம் காசிக்கு சென்று, அதன் மகத்துவத்தை விளக்கியது மிக்க மகிழ்ச்சி.

அசோகவர்ஷினி, திருவண்ணாமலை


தமிழகத்தில் பெருகும் துப்பாக்கி கலாச்சாரம்..! - பெருமாள்சாமி

தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் பெருகி வருவது மிக ஆபத்தானது. சென்னையில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தின் ஈரம் காய்வதற்குள், அடுத்தடுத்து பழனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் துப்பாக்கி தாக்குதல் நடைபெறுகிறது. தீபாவளிக்கு துப்பாக்கியில் ரோல் கேப் வெடிப்பதை போல் சுடுகிறார்களே... இதை போலீசார் ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க வேண்டும்.

கீர்த்தனா அமரேந்திரன், நாகர்கோவில்


சேனல் டாக்! - மெகா மாலினி

சன் டிவியில் விகடனின் 'நாயகி' தொடர் வெளிவராததற்கு இத்தனை பின்னணி காரணங்களா? படிக்கவே மிரட்சியாக உள்ளது. எனிவே, இனி விகடன் சீரியல்களை வலைதளப் பக்கங்களில்தான் பார்க்கணும் போலிருக்கு! விகடகவியில் மீண்டும் 'சேனல் டாக்' வந்திருப்பது மிக்க மகிழ்ச்சி!

ராதிகா பாலாஜி, விருகம்பாக்கம்


வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

அருமையான கட்டுரை.

திவ்யா, க்ரோம்பெட்


உணவே மருந்து... - 05 - மீனாசேகர்

Super. Useful article

ராஜலக்‌ஷ்மி, க்ரோம்பெட்


வாசகர் மெயில்

மிஸ்டர் ரீல்ஸ் அருமையாக, சிரிப்பாக ரீல் எழுதிகிறார்.

மரு.வெங்கட் கோபி


தீபாவளி அன்றும், இன்றும்.. - ராம்

நீங்கள் சொல்வது லோல, 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டாடிய தீபாவளி பண்டிகையை போல் கொண்டாட்டம், ஆரவாரம், கலகலப்பெல்லாம் தற்போது பெரும்பாலான வீடுகளில் ரொம்ப மிஸ்ஸிங்! ஏன்னா... தனிக்குடித்தனம் உள்பட ரெடிமேடா மாறி, தீபாவளியும் கடந்து செல்லும் மேகம் போலாகிவிட்டது.

சியாமளா விஸ்வம், ராயப்பேட்டை


வந்தார்கள்... வென்றார்கள்... - 13 - மதன்

மதனின் வந்தார்கள், வென்றார்கள் தொடரில் வரும் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி, போர் நடவடிக்கைகளை படித்து, ச்சும்மா ஜிவ்வுனு சூடேறுது. அவர்களில் ஒருசிலர் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் அதோகதிதான்... காணாமல் போயிருப்பர்!

அபுபக்கர் சலாவுதீன், ராணிப்பேட்டை


ராக தேவதைகள்... - 13 - மாயவரத்தான் சந்திரசேகரன்

சஹானா, சஹானானு அந்த ராகத்தில் வந்த பழைய மற்றும் லேட்டஸ்ட் பாடல்கள், அதன் பாலாசிரியர், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடியவர்களை பற்றி கூறி, எங்களை பழைய நினைவுகளுக்கு அழைத்து சென்று விட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி!

வைஷ்ணவி பாலசந்தர், ஆழ்வார் திருநகரி


வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

கந்த சஷ்டி சமயத்தில் தீவிர முருக பக்தரான கிருபானந்த வாரியாரின் வாழ்க்கை வரலாற்றையும் நகைச்சுவை சொற்பொழிவுகளையும் தந்து பக்தர்களின் மனதில் வாரியார் சுவாமிகளை இடம் பெறச்செய்யும் விதமாக கட்டுரை எழுதிய ஆசிரியர் ஆரூர் சுந்தரசேகர் அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். கட்டுரையை தக்க சமயத்தில் கொடுத்துள்ள விகடகவிக்கு ஒரு சபாஷ்.

விஜி


‘வாழ்க்கைச் சூழல்’ - வெ. சுப்பிரமணியன்

பிடித்த வாழ்க்கையை வாழ விரும்பும் பழைய தலைமுறைக்கும்; கிடைத்த வாழ்க்கையை வாழும் இளைய தலைமுறைக்கும், எக்காலத்திலும் நடக்கும் போராட்டத்தை, நகைச்சுவையோடு எழுதிய கதாசிரியர் கற்பனை சூப்பர்.

மதுராம்


உணவே மருந்து... - 05 - மீனாசேகர்

பெயரிலேயே மணம் வீசும் கீரையாச்சே... அதன் ஒவ்வொரு பாகத்தின் மருத்துவ குணங்கள் பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இத்தனை நாள் இதன் அருமை தெரியாமல் சாப்பிட்டு இருந்தோமே என வெட்கப்பட வைத்தது. மிக அருமையான தொடரை வழங்கும் சுந்தரசேகரை பாராட்டுகிறோம்.

அங்கயற்கண்ணி, கோவிலம்பாக்கம்



‘வாழ்க்கைச் சூழல்’ - வெ. சுப்பிரமணியன்

தலைமுறை இடைவெளியால் அட்ஜஸ்ட் ஆகமுடியாமல் தவிக்கும், என் போன்ற, அக்கால பெரிசுகளின் நிதர்சனமான உள்ளக்கிடப்பை, நகைச்சுவையோடு சொன்னது "வாழ்க்கைச்-சூழல்”

சுனில்


வலையங்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் அருந்ததிராய் எழுதிய கட்டுரை, நக்சல்கள் பற்றிய பாடங்கள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் எதிர்ப்பு காரணமாக நீக்கியது பெரும் தவறு என்பதை வலையங்கம் நாசூக்காக குட்டியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த கட்சியும் குரல் கொடுக்காததுதான் வேதனை.

சவுந்தரராஜன், முதுகுளத்தூர்


வாரியாரும்... வாரி வழங்கிய நகைச்சுவைகளும்!! - ஆரூர் சுந்தரசேகர்.

uyarthiru Variar swamighalin Nagaisuvaigal athanaiyumsokka Thangham.Endrum alukkavey alukkathu!Thanghathai abharamagha sootti Wariyar Swamighalai.nanghu Alangharithu.Ananthithullar Aroor.Sundarasekar. Super!.

சுப்ரமணியன்