தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் துளிகள்-ஜாசன்

20250304194720469.jpg

1. மோசமான சாதனை

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிகப் போட்டியில் தோல்வி அடைந்த வீரர் என்ற மிக மோசமான சாதனை விராட் கோலி வசமாகியுள்ளது. இது வரை 255 ஐபிஎல் போட்டிகள் விளையாடியவர் 127 தோல்வி அடைந்திருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் தினேஷ் கார்த்திக் 125, ரோஹித் 123.

2. தோனியை பின்னுக்கு தள்ளினார்

பக்கா ஃபார்மில் இருக்கும் ஸ்ரேயஸ் ஐயர் சிஎஸ்கே கேப்டனாக இருந்த தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார். ஐபிஎல் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் (7) என்ற பட்டியலில் இருந்த தோனியை பின்னுக்குத் தள்ளி தொடர்ச்சியாக எட்டு போட்டிகளில் வென்றவர் என்ற சாதனையை ஸ்ரேயஸ் செய்திருக்கிறார். கடந்த சீசனில் கொல்கத்தாவுக்கு ஆறு போட்டிகள் இப்போது பஞ்சாப்புக்காக இரண்டு போட்டிகள் அவர் வென்று தோனியின் சாதனையை முறியடித்து இருக்கிறார்.

3. ஹர்திக் பாண்டியாவின் காதலி ?

ஹர்திக் பாண்டியாவுக்கு கடந்தாண்டு விவாகரத்து ஆன நிலையில் பிரிட்டிஷ் ஜாஸ்மினுடன் டேட்டிங் செய்யும் படங்கள் வெளியாகின . இந்நிலையில் இந்த வாரம் ஹர்திக் பாண்டியா விளையாட்டை கவனிப்பதற்காக அவர் உற்சாகப்படுத்துவதற்காக ஜாஸ்மின் மைதானத்திற்கு வந்திருந்தார். இதனால் இவர்கள் காதல் உறுதி என்று ரசிகர்கள் தற்சமயம் பதிவிடுகிறார்கள்.

4. யார் இந்த அஸ்வினி குமார்?

இந்த வாரம் கே கே ஆர் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை வீரர் அஸ்வினி குமார் நாலு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 23 வயதாகும் இவரை மும்பை அணி வெறும் 30 லட்சத்துக்கு ஏலம் எடுத்து இருக்கிறது. இடதுகை பந்துவீச்சாளரான அஸ்வினி குமார் 18 ரன் கொடுத்து நாலு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

5. ஆர் ஆர் கேப்டனுக்கு அபராதம்

ஏற்கனவே ஆர் ஆர் அணி இரண்டு போட்டிகளில் தோற்றாலும் இந்த வாரம் சென்னை அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஆனாலும் குறித்த நேரத்தில் பந்து வீசவில்லை ஆர் ஆர் அணி கேப்டன் பராக்குக்கு 12 லட்சம் கிரிக்கெட் வாரியம் அபராதம் விதித்திருக்கிறது. ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவுக்கும் இதேபோல் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

6. பழைய போட்டோ

இந்த வாரம் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ரியான் பராக் அணி மெகா வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் சிறு வயது பராக் தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

7. வரலாறு படைத்த கே கே ஆர்

மூன்று வெவ்வேறு அணிகளுக்கு எதிராக 20 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற சாதனையை கொல்கத்தா அணி சாதித்துள்ளது. ஹைதராபாத் அணியுடன் நேற்றைய போட்டியில் 80 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் சன்ரைசர்ஸ் எதிராக 20 வெற்றிகளை கொல்கத்தா அணி பதிவு செய்துள்ளது. இதேபோல் பஞ்சாப் அணிக்கு எதிராக 21 வெற்றிகளையும் பெங்களூர் அணிக்கு எதிராக 20 வெற்றிகளையும் அந்த அணி பதிவு செய்துள்ளது.