கடன் பாக்கி -சிறுகதை - பா.அய்யாசாமி
சார், நான்தான் கார்த்தி, என்று அறிமுகம் செய்துக் கொண்டவனை எதிரே அமரச் சொன்னார் வங்கி அதிகாரி சம்பத்.
இரண்டு லட்ச ரூபாய் கல்விக் கடன் கேட்டிருந்தேன், இரண்டு மாதமாக நிலுவையில் இருக்கு, எல்லா சான்றுகளும் சரியாக இருக்கு, இருந்தும் ஏனோ தெரியலை கிடைக்கலை. நீங்க புதிதாக வந்து இருக்கீங்க அதான். பார்த்து சொல்லிவிட்டுப் போகலாம் என வந்தேன், இதை அப்ரூவல் செய்தால்தான் நான் இரண்டாமாண்டு பீஸ் கட்டமுடியும் என்றதும்,
பொறுமையாக பைலைப் புரட்டிப் பார்த்தவர், இவனைப் பார்த்து சிரித்தபடி, நீயா ? நல்லா வளர்ந்து இருக்கே, உன் அப்பாவை வரச்சொல் என்று அனுப்பி வைத்தார் சம்பத்.
சம்பத்தின் நினைவுகள் பத்து வருடம் பின்னோக்கி சென்றது,
சார், நான் என்ன செய்வேன் ? என் பணி இது, என அவரிடம் சமாதானமாக பேசிக்கொண்டு இருந்தான் சம்பத், உன் வேலை என்றால், என்ன ? தவணைப் பணம் கட்டலை என்றால் வண்டியை கேட்பீங்களா ? அத்தனை தைரியமா, நான் யாரென்னு தெரியாமல் என்கிட்ட வந்துட்ட நீ, போயிடு, ஏதாவது ஏடாகூடமா செய்திடுவேன் என மிரட்டினார், ஆறு மாதமாக தனது இரு சக்கர வாகனத்திற்கு தவணைகளைக் கட்டாத, வளர்ந்து வளரும் அரசியல்வாதியான செம்பை காந்திநாதன். சார், நீங்க யாராக வேண்டுமானலும் இருங்கள் அதற்கான தவணையில் வாங்கிய வண்டிக்கு தவணைக் கட்டுவது உங்கள் கடமை, அது மக்களின் பணம் என்றவனிடம், எத்தனைப் பேர் பணமே கட்டாமல் இருக்கான், அவன் கிட்டே போய் கேளு, நான் இத்தனை வருடமாக உங்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளேன், உடனே கணக்கை மூடிவிடுவேன் என வாய் சவடால் அடிக்கவும், ரெக்கவரி பார்க்க வந்த சம்பத், நான் ஒரு வசூல் செய்யும் கடை நிலை ஊழியன் இதெற்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது நீங்கள் வங்கிக்கு வாருங்கள் மேலாளரைப் பார்த்துப் பேசுங்கள் இதையெல்லாம் அவரிடம் கேளுங்கள் என்றபோது, அப்போ என்ன ம.....ற்கு நீ வந்த ? போய் அவனை வரச் சொல், எனக் கூறி ஆயிரம் ரூபாய் எடுத்துக்கொடுத்தான், இதை வாங்கிகிட்டு சத்தம் போடாமல் போ என்று சொல்லவும் , அதை வாங்க மறுத்த சம்பத்தை, தன் பத்து வயது மகன் அருகில் இருக்க அவனின் முன்னே அடிக்க வரவும்,அவரது மகன் பயந்து வேண்டாம்பா என அவரின் காலைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தான் வீட்டிலிருந்து வந்த பெண்கள் பேச ஆரம்பிக்க, பிரச்சினை பெரிதாகிடும் போலத் தெரிய சம்பத் திரும்ப வந்து விட்டான்.
நடந்ததை ரெக்கவரி மோளாலரிடம் சொல்ல, அவர் பங்கிற்கு தன்னை நாலு கேள்விகள் கேட்க, அன்று முழுவதும் ஏதோ யோசனையில் இருந்தவன் மறுநாள் தன் பதவியை ராஜினாமா செய்தான் சம்பத்.
தனியார் நடத்தும் தேர்வுப் பயிற்சியில் சேர்ந்து, வங்கி அதிகாரிக்கான தேர்வுகள் எழுதி, தேர்ச்சிப்பெற்று வங்கியில் பத்து வருடங்களாக பல இடங்களில் பணி புரிந்து, உயர் பதவிப் பெற்று இங்கே வந்து சேர்ந்தது வரை நினைவு கூர்ந்தார் சம்பத்.
நான்தான் செம்பையார் ஆளும் மாநிலக் கட்சியின் நகரச் செயலர் பதவியில் இருக்கேன் என கும்பிட்டவரை பதிலுக்கு கும்பிட்டு, என்ன விஷயம் என்றார் சம்பத் எதுவும் தெரியாத மாதிரி.
அதான் தம்பி வந்தானே அந்த கல்விக்கடன் என்று எதிரே அமர்ந்தார், அது கூட மந்திரி சிபாரிசில்தான் கிடைக்க வழி செய்தார்கள் நான் ஏதாவது ஜாமின் கீமின் ஏதாவது போடனுமானால் போட்டுவிடுவோம் என்று சொன்னதும், அதெல்லாம் வேண்டாம், கடன் கிடைத்துவிடும், நீங்கள் ரூபாய் பதினாறாயிறம் கட்டிவிடுங்கள் என்றார் சம்பத். எதற்கு நான் கட்டனும் ? என்றதும் பழைய இரு சக்ர வாகன கணக்கை எடுத்துக் காட்டினார் சம்பத் பார்த்ததும் அதெல்லாம் தள்ளுபடியில் போய்விட்டது. அதையெல்லாம் கேட்க நீ யாரு ? என்றார், நான்தான் கேட்கனும் இந்த வங்கி அதிகாரி, பத்து வருடம் முன்னே ,தவணைப் பாக்கியை கேட்டதற்கு என்னை அடிக்க வந்தீர்களோ அதே முன்னாள் ஊழியன் சம்பத் என்றதும், மல்லையா கொல்லை வழியாக போயிட்டான், நீரவ் மோடி நழுவி ஓடியே போயிட்டான், அவனைத் தேடி பிடியுங்கள், என வாய்சவடால் விட, நீங்க திருந்தவே மாட்டிங்களா ? இந்தக் கதையெல்லாம் இங்கே வேண்டாம், நீங்கள் முதலில் யோக்கியமாக இருங்கள் பின் அடுத்தவர் பற்றிப் பேசலாம் என சாடியதும், ஓ அதானாலேதான் மறுக்கிறீங்களா ? நான் அமைச்சர்கிட்டே பேசுகிறேன் என்றதும், சம்பத்தே அமைச்சருக்கு போன் போட்டுக் கொடுத்தார் பேசியதும், முகம் வெளிரிப் போனது செம்பையாருக்கு, நாளையே தொகையை கட்டி விடுகிறேன் என்று புறப்பட்டார்.
உங்களுக்கு ரொம்ப நன்றிங்க என்றார் சம்பத், புரியாமல் விழித்தபடி நின்ற செம்பையாரிடம் அன்று ராஜினாமா செய்ய நீங்கள்தான் காரணம் அதன் விளைவுதான் இன்று நான் இந்த பதவியில் உள்ளேன், அந்த வெறியை ஊட்டிய உங்களுக்கு நன்றி.
Leave a comment
Upload