2013 ஐபிஎல்லில் வெஸ்ட் இண்டீஸின் க்ரிஸ் கெயில் அடித்த 175 நாட் அவுட் தான் ஐபிஎல்ல்லில் இன்னும் தனி மனிதன் அடித்த அதிக ஸ்கோர். பெங்களூரு, பஞ்சாப், கொல்கட்டா அணிகளுக்கு தனது காலத்தில் ஆடியுள்ளார்.
ஏப்ரல் 3 ல் கொல்கட்டாவில் ஆடப்பட்ட மேட்ச் கொல்கட்டாவுக்கும் ஹைதராபாதுக்கும், கிட்டத்தட்ட 2024 ஐபிஎல் ஃபைனல் மேட்ச்சின் ரீமேட்ச் மாதிரி தான் இருந்திருக்க வேண்டும். பாதிக்கு மேல ஸ்டேடியம் காலி. பார்வையாளர் டிக்கட் விலை எக்கச்சக்கமாக ஏற எவன் வருவான் என்று ஒரு வாதம் சுழலுகிறது.
ஆம்பிடெக்ட்ரஸ் பௌலர், அதாவது அவர் தனது இரு கரங்களிலும் பௌலிங்க் செய்யும் திறமை படைத்தவர்.
ஹைதராபாத் அணிக்கு ஆடும் ஸ்ரீலங்காவின் கமிந்து மெண்டிஸ் தான் அத்தகைய சிறப்புடைய பௌலர். கொல்கட்டாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு விக்கட்டையும் எடுத்துள்ளார். ஹனிமூனையும் கான்ஸல் செய்துவிட்டு தனது அணிக்காக ஆட் வந்துவிட்டார்.
2021 ஐபிஎல்லில் இருந்து கொல்கட்டாவுக்காக ஆடி வரும் வெங்கடேஷ் ஐயர் இந்த முறை ஏலத்தில் அந்த அணி ரூ.23.75 கோடிக்கு எடுத்துள்ளது. ஆனால் போன முறை 2024 ஐபிஎல் ட்ராஃபீயை கொல்கட்டாவுக்காக ஜெயித்துக் கொடுத்த ஷ்ரேயஸ் அய்யரை அம்போ என ஏலத்தில் விட்டு விட அவரை பஞ்சாப் ரூ 26.75 கோடிக்கு எடுத்துக் கொண்டது. அப்படி அம்போ என நடுத்தெருவில் தம்மை விட்டு விட்டதை வருத்தத்துடன், “கப் வாங்கிக் கொடுத்தவனுக்கே இந்த கதியா? என்கிறார். எனினும் அதுவே ஒரு திருப்புமுனையாக இருந்து அவருக்கு நல்ல விலையும் பெற்றுக் கொடுத்துள்ளது. பஞ்சாபுக்கு ட்ராஃபீ வாங்கிக் கொடுப்பதில் தீவிரமாக இருக்கிறார். அதிரடி ஆட்டம், நல்ல தலைமை.
வெங்கடேஷ் அய்யருக்கு வருவோம். முதல் மூன்று மேட்ச்சுகளில் சொல்லும்படியான ஆட்டம் இல்லைதான். ஆனால், அவருக்குக் கொடுத்த விலையை ஒப்பிட்டு பலர் ஏளனம் செய்ய வெங்கடேஷோ, தொடர் ஆரம்பித்து விட்டால் ஏலப் பணத்திற்கு ஏற்றார் போல் ஆடவேண்டும் என்பது அவசியமில்லை என்று ஹைதராபாத் அணியுடனான மோதலில் 29 பந்தில் 60 ரன்கள் என்ற மேன் ஆஃப் த மேட்ச் அதிரடி ஆட்டத்தைக் கொடுத்தார். நிறைய பணத்துக்கு வாங்கிவிட்டோம், அதனால் ஒவ்வொரு மேட்ச்சிலும் நான் அடித்து தான் ஆகணும் என்பதில்லையே என்கிறார்.
வியாழன் வரை ஆடிய மூன்று மேட்சுகளில் ரிஷப் பந்த், 0(6 பந்துகளில்), 15(15 பந்துகளில்) & 2(5 பந்துகளில்) ஆக 17 ரன்களே எடுத்துள்ளதும், ரோஹித் ஷர்மா, 0(4 பந்துகளில்), 8(4 பந்துகளில்) & 13(12 பந்துகளில்) ஆக 21 ரன்களே எடுத்துள்ளதும் அவர்களை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது.
ஏப்ரல் 4 ஆம் தேதி மாலை அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் மோதும் மேட்ச்.
போன வாரமே டீம் முதலாளிகளுக்கும் ஏலத்தில் வாங்கப்பட்ட கிரிக்கெட்டர்களுக்குமிடையேயான பதட்ட நிலையைப் பற்றி கூறியிருந்தேன். அந்த தலைப்பில், 2022 இல் ராஸ் டைலர் என்ற நியூசீலாந்து கிரிக்கெட் வீரர் தனது சுய சரிதையில் 2011ல் தான் ராஜஸ்தான் ராயலுக்காக ஆடி ரன் எடுக்காது 0 வில் அவுட் ஆனபோது அந்த டீமின் முதலாளி தனது கன்னத்தில் மூன்று நான்கு முறை அறை வாங்கியுள்ளதை பதிவு செய்திருக்கிறார்.
அதிகப்படியான ரன்கள் என 189 ரன்களை எடுத்த லக்னோவின் வெஸ்ட் இண்டீஸின் நிகொலஸ் பூரான் ஆரஞ்ச் கேப் பெற்றுள்ளார். அதே போல், 9 விக்கெட்டுகளை எடுத்த சென்னை அணியிலுள்ள ஆஃப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த நூர் அகமத் பர்ப்ள் கேப்பை பெற்றுள்ளார்.
2008ல் இந்த ஐபிஎல்லின் ப்ராண்ட் மதிப்பீடு 10மில்லியன் டாலரில் இருந்தது 2009லியே 2 பில்லியன் டாலருக்கு உயர்ந்தது. படிப் படியாக உயர்ந்து இன்று 2024 முடிவில் 12 பில்லியன் டாலருக்கு உயர்ந்துள்ளது.
அடுத்த வாரம் இன்னும் விவரங்களோடு....
Leave a comment
Upload