சப்தமி கவுடா
காந்தாரா படத்தில் மூலம் பிரபலமான சப்தமி கவுடா ' தி ரைஸ் ஆப் அசோகா ' என்ற படம் மூலம் மேலும் பிரபலமானார். இதனால் பட வாய்ப்புகள் நிறைய வந்தன. ஆனாலும் பார்த்துப் பார்த்துதான் படங்களுக்கு ஒப்புக்கொள்கிறார்.
பிரியங்கா சோப்ரா
ஆறாண்டுகளாக எந்த படத்தில் நடிக்காத பிரியங்கா சோப்ரா இப்போது ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு சம்பளம் 30 கோடி.
துஷாரா விஜயன்
வீர தீர சூரன் படத்தின் நாயகி துஷாரா விஜயன் மகிழ்ச்சியில் இருக்கிறார். அவரை எஸ் ஜே சூர்யா பழம்பெரும் நடிகை சாவித்திரி போல் புகழ் பெறுவார் என்று புகழ்ந்தது தான் காரணம்.
ஜான்வி கபூர்
நடிகர் ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தில் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தீபிகா படுகோன்
சமீபத்தில் பாரிஸ் சென்ற தீபிகா படுகோன் ஒரு ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஜாலியாக பாரிஸ் நகர வீதிகளில் சுற்றி வந்திருக்கிறார். இப்போது இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன.
நயன்தாரா
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் சேர்ந்து புதிதாக ஸ்டூடியோ தொடங்கி இருக்கின்றனர். வர வருமானத்தை தொழிலில் முதலீடு செய்து காசு பார்க்கும் பிசினஸ் புலி இந்த ஜோடி.
தமன்னா அட்வைஸ்
தற்சமயம் இந்தி பட உலகில் முழு கவனம் செலுத்தி வரும் தமன்னா ஒடீலா 2 என்ற படத்தில் பெண் சாது கேரக்டரில் நடிக்கிறார். இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசும்போது பெண்கள் தங்களையே கொண்டாட வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் கொண்டாடுவார்கள் என்று அறிவுரை வழங்கி இருக்கிறார் நடிகை தமன்னா.
சமந்தாவின் ஆசை
டோலிவுட், கோலிவுட் என்று மாறி மாறி நடித்து வரும் சமந்தா சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சிட்னியில் ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிப்புக்கு பின் சிட்னி பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அது நிறைவேறவில்லை என்று சிட்னியில் ஆதங்கப்பட்டு கொண்டார் சமந்தா.
Leave a comment
Upload