தொடர்கள்
பொது
"இ பாஸ் வேண்டாம் நீலகிரி வணிகர்கள் கொதிப்பு " - ஸ்வேதா அப்புதாஸ்

நீலகிரி கோடை சீசன் வந்துவிட்டாலே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நெரிசல் மாவட்டத்தை திக்கு முக்காட வைக்கிறது .

20250303222456393.jpg

காவல் துறை முற்றிலுமாக திணறிக்கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும் .

20250303222648340.jpg

வருடம்தோறும் ஏப்ரல் , மே , ஜூன் மாதங்களில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளூர் வாசிகள் எங்குமே செல்லாத நிலைமை ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட இடம் கிடைக்காமல் தவித்து உயிர் பறிபோன சம்பவங்களும் நடந்துள்ளன .

முக்கிய பிரமுகர்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்தவர்களும் உண்டு .

20250303222728139.jpg

இதை மனதில் வைத்து ஊட்டியை சேர்ந்த உயர்நீதி மன்ற நீதியரசர் சதீஷ் குமார் நீலகிரி இயற்கையை பாதுகாக்க உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து கடந்த வருடம் சீசனுக்கு இ பாஸ் அறிமுகம் செய்யவைத்து செப்டம்பர் வரை நீடித்து பின் தளர்த்த பட்டது .

அதே சமயம் வாகன நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாக கார்பன் வெளியேற்றத்தால் நீலகிரி ரொம்பவே மாசுபடுகிறது என்று கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி உயர் நீதி மன்றத்தின் சிறப்பு அமர்வு நீதியரசர்கள் நா .சதீஷ் குமார் மற்றும் டி .பரத சக்கரவர்த்தி நீலகிரி , கொடைக்கானலுக்கு இ பாஸ் கட்டாயம் அமுல் படுத்தி தினமும் 6000 வாகனங்கள் தான் வரவேண்டும் .வார நாட்களில் அது 8000 ஆக உயர்திக்கொள்ளலாம் என்ற உத்தரவை பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் இதை செயல் படுத்த உத்தரவிட்டனர் .

2025030322280870.jpg

மாவட்ட நிர்வாகம் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இந்த இ பாஸ் முறையும் வாகன கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என்று அறிவித்து ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வர ஒட்டுமொத்த நீலகிரி வணிகர்கள் கொதித்து போனார்கள் .

இ பாஸ் மார்ச் 31 ஆம் தேதி நள்ளிரவே 6000 வாகனங்களுக்கு அனுமதி வழங்கிவிட்டு நின்று விட்டது .

மாவட்டத்தில் உள்ள ஒன்பது செக் போஸ்டில் காத்திருந்த வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன .

இந்த இ பாஸ் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்று நீலகிரி வணிகர்கள் சங்க பேரவை உச்ச நீதி மன்றத்தை நாடியது .

உச்ச நீதி மன்ற சிறப்பு அமர்வு நீதியரசர்கள் சூர்யகாந்த் மற்றும் நா .கோடிஸ்வர்சிங் சென்னை உயர் நீதி மன்ற உத்தரவு சரியானது அதில் தலையிட முடியாது நீலகிரி கொடைக்கானலுக்கு இ பாஸ் மற்றும் வாகன தணிக்கை அவசியம் " என்ற உத்தரவை பிறப்பித்தது .

இதை தொடர்ந்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி பேரமைப்பு ஒரு நாள் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தது .

20250303222928734.jpg

நீலகிரி ஒட்டுமொத்த வணிகர்கள் எந்த பாரபட்சமில்லாமல் அனைத்து கடைகளும் டூரிஸ்ட் டாக்சி , ஆட்டோக்கள் ஓடாமல் மாவட்டமே ஸ்தம்பித்து நின்றது .

20250303223000277.jpg

நாமும் ஊட்டி நகரில் ஒரு வலம் வந்தோம் கடைகள் அனைத்தும் அடைத்திருந்தன .

20250303223039553.jpg

மார்க்கெட் முழுவதுமாக க்ளோஸ் .

மாவட்டம் முழுவதும் கடையடைப்பு என்ற செய்தி நாடு முழுவதும் பிரதிபலித்தும் கேரளா , கர்நாடக சுற்றுலாக்கள் குடும்பத்துடன் வந்து தவித்து விட்டனர் .

20250303223116266.jpg

காமர்ஷியல் சாலை கேசினோ ஜங்க்ஷனில் படுபிஸியாக கையேந்தி பவனில் பிரியாணி வாங்கி உண்டுகொண்டிருந்தனர். சுற்றுலாபயணிகள் .

20250303223140302.jpg

அம்மா உணவகம் மற்றும் காவல்துறை நடத்தின உணவகத்தில் கூட்டம் அலைமோதியது .

இந்த இ பாசுக்கு எதிரான கடையடைப்பு போராட்டத்தை நாடே திரும்பி பார்த்தது .

நீலகிரி மாவட்ட வணிகர் சங்க பேரவை செயலர் சேகர் கூறும்போது ,

2025030322321605.jpg

" இ பாசுக்கு எதிரான முழு கடையடைப்பு நீலகிரி வரலாற்றில்

101 சதவிகிதம் வெற்றிபெற்றுள்ளது

மாவட்டத்தின் ஒன்பது நுழைவு வாயிலும் ஸ்தம்பித்து போனது .

இருபதாயிரம் வணிகர்கள் தங்களின் முழு எதிர்ப்பை காட்டியுள்ளனர்.

மதிப்பிற்குரிய நீதியரசர்கள் இ பாஸ் கெடுபிடியில் தளர்வு கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்

இந்த நடைமுறை முற்றிலும் நீக்கவேண்டும் .

அரசு வழக்குரைஞர் மாவட்ட நிர்வாகத்திடம் எதைப்பற்றியும் கேட்காமல் இது குறித்து வாதாடுவதாக தெரிவதில்லை .

இந்த இ பாஸ் தொல்லையால் சுற்றுலா பயணிகள் நீலகிரியை மறந்து வருகிறார்கள் .

முக்கியமாக வடநாட்டு சுற்றுலாக்கள் பெங்களூர் மைசூர் வந்து ஊட்டி வராமல் கேரளா, மதுரை, ராமேஸ்வரம் , கன்னியாகுமாரி சென்று திருவனந்தபுரம் சென்று போய்விடுகின்றனர் .

கடந்த ஒரு வருடமாக தொடர்கிறது .

மேற்கு வங்கத்தில் தயாரிக்கும் பெரிய பொட்டு ஊட்டியில் கிடைக்கும் .

அந்த மாநில பெண்கள் இங்கு வந்த அவர்களின் மாநில பொட்டை வாங்கி நெற்றியில் ஸ்டிக் செய்வது ஊட்டியில் தான் .தற்போது அனைத்து பிசினெஸ் போய்விட்டது வணிகர்களின் வாழ்வாதாரமா? இ பாஸா?.. என்ற கேள்வி எழுந்துள்ளது .இ பாஸ் ரத்து செய்தால் தான் நாங்கள் உயிர் வாழமுடியும் ".

20250303223318280.jpg

வணிகர் சங்க நீலகிரி மாவட்ட தலைவர் முகமது பாரூக்கை தொடர்பு கொண்டு பேசினோம் ,

20250304083334614.jpg

" இ பாஸ்சுக்கு எதிரான வணிகர்களின் கடையடைப்பு போராட்டம் வரலாறு காணாத ஒன்று .

12 அம்சக்கோரிக் கைகளை மேற்கொண்டு தான் இந்த போராட்டம் .

பிளாஸ்டிக் ரெய்டு என்ற பெயரில் மாவட்ட அதிகாரிகளின் அத்துமீறல் மிகவும் மோசம் வியாபாரிகள் நிம்மதியாக வியாபாரம் செய்யமுடிவதில்லை .

இ பாஸ் குறித்து ஐ ஐ டி ஆய்வுகள் இன்னும் முடியவில்லை அதற்குள் ஏன் அவசரம்

இ பாஸ் ரத்து செய்யவில்லை என்றால் எங்களின் போராட்டம் தொடரும் .

நீதியரசர்கள் தளர்வுகள் செய்து எங்க வாழ்வாதாரத்தை காப்பாற்றி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு".என்கிறார் .

தமிழக வணிகர் சங்க பேரவையின் மாநில துணை தலைவர் ராஜா முகமது கூறும்போது ,

20250303223358716.jpg

" அரசியல் கட்சி நடத்தும் கடையடைப்பு போராட்டம் கூட இப்படி நுறு சதவிகிதம் இருந்திருக்காது .

அனைத்து வியாபாரிகளும் தங்களின் ஒரு நாள் வருமானத்தை தியாகம்செய்துள்ளனர்.

இ பாஸ் 6000 வாகனங்களுக்கு கொடுக்கிறார்கள் அதுவே 6001 என்று வந்தால் இறப்பு மற்றும் அவசரத்திற்கு ஒரு வாகனம் வந்தால் என்ன செய்வது .

சரி கோர்ட் உத்தரவு என்று அரசு இ பாஸ் முறையை அமுல்படுத்தியுள்ளது .

எத்தனை கோர்ட் உத்தரவை அரசு தட்டிக்கழிக்கிறது .

அரசு தரப்பு வக்கீல் உண்மை நிலமையை ஆராய்ந்து வாதாடுவதில்லை .

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது .

ஊட்டி குன்னூர் மார்க்கெட் கட்டுமான பிரச்சனை .

பிளாஸ்டிக் பிரச்சனை ,

கட்டிட அனுமதி பிரச்சனை இதில் அடக்கம் .

பிளாஸ்டிக் அரசு அறிவித்த மைக்ரான் அளவு தான் யூஸ் செய்கிறார்கள் .

கார்ப்பரேட் கம்பெனிகள் உபயோகிக்கும் பிளாஸ்டிக் அளவை பற்றி யாருக்கும் கவலை இல்லை .

கூருக்குறே மிகவும் மோசமான பதார்த்தம் அதில் பிளாஸ்டிக் இருக்க அதை தடை செய்ய எந்த சட்டமும் இல்லை .நீதியரசர்களை மதிக்கிறோம் அவர்கள் எங்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற உதவிடவேண்டும் .

நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால் போராட்டம் தொடரும் ".

இ பாஸ் முறையை ஆதரிக்கும் படுக தேசிய கட்சி தலைவர் மஞ்சை மோகன் கூறுகிறார் ,

20250303223436521.jpg

"நீலகிரியை காப்பாற்ற வேண்டுமென்றால் இந்த இ பாஸ் அவசியம் .

அதை தான் உயர் நீதிமன்றமும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் செய்துள்ளனர் .

லட்ச கணக்கில் சுற்றுலாப்பயணிகள் வந்து குவிந்தால் நீலகிரி தாங்குமா ? சொல்லுங்க என்று கேட்கிறார் .

கால சூழ்நிலை மாறிக்கொண்டிருக்கிறது மழை எப்பொழுது பெய்கிறது என்று தெரிவதில்லை அப்படியிருக்க ' மலைகளின் அரசியை காப்பாத்தணுமென்றால் கார்பன் அளவை குறைக்க வேண்டும் வாகனங்கள் வருகை குறைத்தே ஆக வேண்டும் .மலைப்பிரதேசங்கள் காப்பாற்ற படவேண்டும் .

டெல்லியில் மாசு கெட்டுவிட்டது என்று உச்சநீதி மன்றம் வாகனங்கள் நெருக்கடியை கட்டுப்படுத்தியது சரிதானே .அதே தான் இங்கும் பொருந்தும்" என்கிறார் .

ஏப்ரல், மே ,ஜூன் சீசன் மாதத்தில் ஊட்டி குன்னூர் சாலையில் ஏகப்பட்ட போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மூச்சு திணறும் அளவுக்கு இருக்கும் அதை குறைக்க தான் இந்த இ பாஸ் நடைமுறை .

அதே சமயம் மாற்று பாதை வாகன நெரிசலை குறைக்கும் என்ற ஐடியாவும் உண்டு .

தற்போது கோவை தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி சந்திப்பில் இருந்து சேலாஸ் காந்திபேட் லவ்டேல் சாலை வழியாக கொல்லிமலை கிராமம் வழியாக குன்னூர் செல்லாமல் ஊட்டிக்கு வந்துவிடலாம். இந்த சாலை உபயோகத்திற்கு வந்தால் வாகன நெரிசல் குறைக்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாலை எப்பொழுது திறக்க போகிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை .

நீலகிரி கொடைக்கானலில் உயர் நீதி மன்றம் விதித்த இ பாஸ் வாகன கட்டுப்பாடு உத்தரவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு மேல் முறையிட்டு மனு தாக்கல் செய்தது .

அதை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதிகள் சதீஷ் குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு வெள்ளிக்கிழமை விசாரணை செய்ய இருக்கிறது .

முதல்வர் சனிக்கிழமை ஊட்டி வருவதற்குள் இ பாஸ் வாகன கட்டுப்பாட்டில் எதாவது தளர்வு அல்லது ரத்து என்ற அறிவிப்பு வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

20250303225135553.jpg

வணிகர்களின் போராட்டம் வெற்றி ஒரு பக்கம் அவர்களின் வாழ்வாதாரம் முக்கியம் அதே வேளையில் மலைகளின் அரசியும் , மலைகளின் இளவரசியும் பாதுகாக்கப்படவேண்டிய பொக்கிஷங்கள் தானே .