தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. அவரிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கும். எல்லாமே பேசும் பொருளாக தான் இருந்தது.
குறிப்பாக திமுகவை எதிர்த்து அவர் சொல்லும் கருத்து திமுகவை எரிச்சல் ஊட்டுவதாக தான் இருந்தது.
மற்ற பாஜக தலைவர்களை விட அண்ணாமலை திமுகவால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டார்.
இப்படி பரபரப்பு செய்திகளுக்கு சொந்தக்காரரான அண்ணாமலையின் சமீபத்த பேட்டிகள் தான் இப்போது பேசும் பொருளாக இருக்கிறது.
திடீரென நான் தொண்டனாக இருக்க விரும்புகிறேன் என்னால் கட்சிக்கு எந்த சங்கடமும் இருக்காது கூட்டணி பற்றி எல்லாம் தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.
தலைவர் பதவி என்பது வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்றெல்லாம் பேச ஆரம்பித்திருக்கிறார்.
இந்த வெங்காய கதை ஏற்கனவே திராவிடத்துக்கும் உதாரணமாக சொல்லி இருக்கிறார்.
திராவிடம் என்பது ஒன்றுமே இல்லை வெங்காயம் போன்றுதான் உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது என்று பேசியவர் இப்போது அந்த உதாரணத்தை தலைவர் பதவிக்கும் பேச ஆரம்பித்திருக்கிறார் இதற்கு காரணம் என்ன ?
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காது என போன மாதம் வரை பேசிக் கொண்டிருந்த எடப்பாடி எங்களுக்கு எதிரி திமுக மட்டுமே என்று திடீரென பேச ஆரம்பித்திருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து டெல்லியில் அமித்ஷா எடப்பாடி சந்திப்பு நடந்தது.
அதன் பிறகும் கூட்டணி பற்றி எல்லாம் நான் பேசவில்லை என்று எடப்பாடி பேட்டி தந்தார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிமுகவுடன் கூட்டணி பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்று அந்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.
அமித்ஷா எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.
அண்ணாமலை அமித்ஷா சந்திப்புக்கு பிறகு தான் அண்ணாமலையார் பேச்சில் மாற்றம் தெரிந்தது.
அதாவது அவர் பேச்சு விரைவில் தமிழகத்துக்கு புதிய பாஜக தலைவர் பற்றிய அறிவிப்பு வரும் என்பது போல அவரது பேட்டிகள் தற்சமயம் இருந்து வருகிறது.
அமித்ஷா அண்ணாமலை சந்திப்பில் அதிமுகவுடன் கூட்டணி பற்றி அவர் என்ன சொன்னார் என்று நாம் விசாரித்த போது அவர் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
எடப்பாடி நம்பிக்கைக்குரிய தலைவர் இல்லை என்று சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால் பெரும்பான்மை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆதரவு எடப்பாடிக்கு இருக்கிறது என்று அமித்ஷா சொல்லிவிட்டு இப்போதைக்கு திமுகாவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக ஆதரவு நமக்கு தேவை தவிர இன்னும் சில ஆண்டுகளில் வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் நாம் விரும்பும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க அதிக அளவு சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை.
இப்போது நமக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நாலாவது முறை நாம் ஆட்சி இப்படி நாங்கள் திட்டமிட்டு கொண்டிருக்கின்றோம் என்று சொல்லி அதிமுகவுடன் கூட்டணி உறுதி அதேசமயம் பாஜக தலைவர் பதவியில் அதிமுகவுக்கு சாதகமான ஒருவர் அமர்த்தப்படுவார் என்பதை அமித்ஷா தெளிவாக அண்ணாமலையிடம் சொல்லிவிட்டார்.
அதனால் தான் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற பேச்சு ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது.
அண்ணாமலையின் பணியை டெல்லி பாஜக குறைத்து மதிப்பிடவில்லை. அவரை ஒரு கௌரவமான இன்னொரு பதவியில் உட்கார வைக்க முடிவு செய்திருக்கிறது.
அது ராஜ்யசபா உறுப்பினர் மத்திய இணை அமைச்சர் என்றெல்லாம் தற்சமயம் பேசப்படுகிறது. அதற்கான வாய்ப்பு இல்லை என்று மறுக்க முடியாது.
ஏற்கனவே தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் பதவி நீக்கம் செய்யும்போது டெல்லி பாஜக அவரை மத்திய அமைச்சராக்கியது.
தமிழிசையை ஆளுநர் ஆக்கியது. எனவே அண்ணாமலை கௌரவத்துக்கு இப்போதைக்கு எந்த வில்லங்கமும் வராது என்கிறது பாஜக தரப்பு.
அண்ணாமலை பற்றி தமிழக பாஜக தலைவர்கள் குறிப்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லி பாஜக தலைவர்களிடம் சொன்ன தகவல்கள் வேறு.
தமிழ்நாட்டில் பாஜகவை அவர் வளர்க்கவில்லை. அவரை முன்னிலைப்படுத்திக் கொண்டார். தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக நாம் ஆளுங்கட்சியாக டெல்லியில் இருக்கிறோம் எல்லா மாநிலங்களிலும் பாஜகவின் வளர்ச்சி அபரீதமாக இருக்கிறது.
கேரளாவில் கூட பாஜகவின் வளர்ச்சி குறிப்பிட்டு சொல்லும் படி இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் இல்லாததற்கு காரணம் அண்ணாமலை தான்.
உறுப்பினர் சேர்க்கை என்று இந்தியா முழுவதும் நாம் திட்டமிட்டதில் பல மாநிலங்களில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 லட்சம் மட்டுமே. இதற்கு காரணம் உறுப்பினர் சேர்க்கையில் அண்ணாமலை போதிய கவனம் செலுத்தவில்லை என்பதுதான் நிர்மலா சீதாராமன் புகாராக இருந்தது.
தவிர தான் நிகழ்ச்சிக்காக சென்னை அல்லது தமிழ்நாட்டில் எந்த இடத்துக்கு போனாலும் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை, வேண்டுமென்றே என்னை புறக்கணிக்கிறார் என்ற புகாரையும் நிர்மலா சீதாராமன் டெல்லி தலைவர்களிடம் பத்த வைத்திருக்கிறார்.
அதிமுக கூட்டணிக்கு அண்ணாமலை நிச்சயம் இடைஞ்சலாக தான் இருப்பார் என்பதுதான் நிர்மலா சீதாராமன் ரிப்போர்ட்டாக இருந்தது.
ஏற்கனவே 2023-ல் அதிமுகவுடன் கூட்டணி என்றால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்று அண்ணாமலை பேசியது தற்சமயம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கிறது.
அது பற்றியும் அண்ணாமலையிடம் நிருபர்கள் கேட்டபோது நான் மாற்றி மாற்றி பேசுபவன் இல்லை நான் யார் என்பது போகப் போக தெரியும் என்று பதில் சொல்லி இருக்கிறார்.
எடப்பாடிக்கு மாற்று என்ற யோசனையையும் பாஜக பரிசீலித்தது.
அதனால்தான் டெல்லிக்கு செங்கோட்டையன் அழைக்கப்பட்டார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு அவர் தொகுதி தாண்டி செல்வாக்கு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்பதால்இப்போது செங்கோட்டையினை பயன்படுத்துவது பற்றி பெரிய அளவு டெல்லி தலைமை யோசிக்கவில்லை.
சமூக வலைத்தளங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் அண்ணாமலை பாஜகவின் தவிர்க்க முடியாத சக்தி என்ற பிம்பத்தை தற்சமயம் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி தலைமை, தான் தான், எல்லாம் என்று யோசிக்கும். எந்த பிரபலத்தையும் வளர்த்துவிட விரும்பாது, தங்களுக்கு கட்டுப்பட்ட ஒருவர் தான் மாநிலத்துக்கு தேவை என்பது தான் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடாக இருக்கும். அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல.
Leave a comment
Upload