மாதிரி மொழி பிரச்சினை மாநில கட்சிகளுக்கு அல்வா தான். அதுவும் தேர்தல் சமீபத்தில் வருகிறது என்றால் ,,,
எம்என்எஸ் என்னும் சுருக்கி அழைக்கப்படும் மஹாரஷ்ட்ரா நவ்நிர்மாண் சேனா தான் இந்த வெடியை கொளுத்தி போட்டிருக்கிறது. மும்பை நகராட்சி தேர்தல் வருகிறதல்லவா? என்று கலாய்க்கிறார் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர்.
தேர்தல்களை நோக்கிய ஒரு அரசியல் தந்திரம் இது என்று கூறிய காங்கிரஸ் தலைவர் நசீம் கான், “2009 ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்னதாக எம்என்எஸ் இதேபோன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியதை நாம் கண்டோம். இப்போது பிஎம்சி(ப்ருஹன் மும்பை முனிசிபாலிடி கார்பொரேஷன்) தேர்தல்கள் வருகின்றன, இதேபோன்ற பேச்சு மீண்டும் மீண்டும் வருகிறது” என்ற அவர், மொழி பயன்பாடு குறித்த இத்தகைய வன்முறை கண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்த மராத்தி பேசத் தெரியாதவர்களை அறைய வேண்டும் என்ற எம்என்எஸ்ஸின் அழைப்புக்குப் பதிலடியாக, சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று முதல்வர் ஃபட்னாவிஸ் கூறுகிறார்.
சென்ற செவ்வாய்க்கிழமை, பவாய் என்ற இடத்தில் காவலாளியை,” மராத்தியில் பேசாததற்காக”அறைந்ததாகக் கூறப்படும் மூன்று எம்என்எஸ் உடன்பிறப்புக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஒரு மாதமாக, இந்த மாதிரி மராட்டியில் பேசலியா என்று வம்பிழுக்கும் செயலில் இந்த எம் என் எஸ்ஸினரின் கை சற்று ஓங்க ஆரம்பித்துள்ளது.
மும்பையில் உள்ள ஒரு வங்கியில் இதேபோன்ற சம்பவம் நடந்தது, அங்கு ஒரு அதிகாரி மராத்தியில் பேசாததற்காக அச்சுறுத்தப்பட்டார்.
ஒரு வாரம் முன்பு ஒரு மொபைல் நிறுவனத்தில் கஸ்டமர் சர்வீஸ் ஷோ ரூமில் இருப்பவருக்கும் நாள் சரியில்லாமல் போனது.
இதற்கு மூல கர்தாவே சிவ சேனாவின் நிறுவனர் பாலாசாஹெப் தாக்கரே தான். 60 களில் அதை லுங்கி ஹடாவோ (லுங்கியை வெளியேற்று) என்று தென்னிந்தியர்களை குறி வைத்தார்கள். இது பற்றி 1991ல் அவரை பேட்டி எடுக்கும் போது நான் கேட்டேன். மழுப்பி சமாளித்தார். டக்கென்று இலங்கை தமிழர்களின் மீது அனுதாபம் தெரிவித்து பேச்சை திசை திருப்பினார். அவரின் பாசறையில் வந்தவர்கள் தானே இந்த எம் என் எஸ். இதன் தலைவர் பாலாசாஹெபின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேயின் மகன் தான் ராஜ் தாக்கரே.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபட்னாவிஸ், "மகாராஷ்டிராவில் மராத்தி எதிர்பார்ப்பது தவறல்ல என்பதை நான் உங்களுக்கு தெளிவாகச் சொல்கிறேன், அரசாங்கமும் முடிந்தவரை மராத்தியைப் பயன்படுத்த விரும்புகிறது, ஆனால் யாராவது சட்டத்தை கையில் எடுத்தால், சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.
ஞாயிற்றுக்கிழமை மத்திய மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற்ற கட்சியின் வருடாந்திர குடி பத்வா பேரணியில் உரையாற்றிய தாக்கரே, “எங்கள் மும்பையில், மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள்... அவர்கள் முகத்தில் அறைவார்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில், மராத்தி மதிக்கப்பட வேண்டும்.”
கன்னத்தைத் தடவி பார்த்துக்கொண்டேன்.
Leave a comment
Upload