பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசும் போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உலகின் மிகப் பெரிய கட்சியாக தன்னை கூறிக் கொள்ளும் பாஜகவால் தங்களின் தேசியத் தலைவரை தேர்வு செய்ய முடியவில்லை என்றார். இதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ரசித்து பாராட்டி மேஜை தட்டினார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, அகிலேஷ் யாதவுக்கு பதில் சொல்ல எழுந்து "என் முன்னால் உள்ள எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை அவர்கள் குடும்ப உறுப்பினர்களை நியமித்து தேர்வு செய்து விடுவார்கள். பாஜக 12 ,13 கோடி உறுப்பினர்களில் ஒருவரை தேசியத் தலைவராக தேர்வு செய்ய வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை. ஏனெனில் நாங்கள் வாரிசு அரசியல் நடத்தவில்லை. உங்களுக்கு இந்த பிரச்சனை இல்லை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நீங்கள் தான் கட்சித் தலைவராக இருப்பீர்கள் "என்று அகிலேஷ் யாதவுக்கு உள்துறை அமைச்சர் பதில் சொல்ல எதிர்க்கட்சி உறுப்பினரும் பாஜக உறுப்பினர்களும் அகிலேஷ் யாதவும் வாய்விட்டு சிரித்தார்கள். அதில் அகிலேஷ் யாதவ் மன்னித்து விடுங்கள் என்ற அளவில் கையெடுத்து கும்பிட்டு சமாளித்தார்.
ஆ.ராசா VS எச்.ராஜா
முன்னாள் மத்திய அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா ஊட்டியில் திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசும்போது "சாமி கும்பிடுங்க உங்க அப்பா அம்மா விபூதி வச்சா வெச்சுக்கோங்க. திமுக கரைவேட்டி கட்டினால் விபூதி ,பொட்டு இவற்றையெல்லாம் அழித்துவிட்டு வாருங்கள். கொள்கை இல்லாமல் போனால் அந்த அரசியல் கட்சி அழிந்துவிடும் என்று பேசி இருக்கிறார்.
இதற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சொன்ன பதில் "திமுக கரைவேட்டி கட்டுபவர்கள் பொட்டு வைக்க வேண்டாம் விபூதி வைக்க வேண்டாம் கையில் கயிறு கட்ட வேண்டாம் என்று திமுகவில் உள்ள இந்துக்களிடம் சொல்லும். ஆ. ராஜா நெற்றியில் பொட்டு வைத்து கையில் கயிறு கட்டும் பழக்கம் உள்ள இந்துக்கள் யாரும் திமுகவுக்கு ஓட்டளிக்க வேண்டாம் என்று ஒட்டுமொத்த இந்துக்களிடம் சொல்லும் தைரியமும் திரணியும் இருக்கிறதா? திமுகவில் இருக்கும் முஸ்லிம்களிடம் மசூதிக்கு செல்லுங்கள் ஆனால் தொப்பி அணியாதீர்கள் தாடி வைக்காதீர்கள் என்று சொல்வாரா? திமுகவில் இருக்கும் கிறிஸ்தவர்களிடம் சர்ச்சுக்கு செல்லுங்கள் ஆனால் கழுத்தில் சிலுவை அணியாதீர்கள் என்று சொல்வாரா ?இந்துக்களின் ஓட்டுக்கள் மற்றும் திமுகவுக்கு வேண்டும். இந்துக்களில் சமய அடையாளங்கள் மற்றும் சம்பிரதாய சடங்குகள் மட்டும் வேண்டாமா ? என்று கேட்டிருக்கிறார்.
ஆ.ராசா பேச்சு குறித்து எப்போதும் குங்கும பொட்டுடன் வலம் வரும் அறநிலைத்துறை அமைச்சரான சேகர்பாபுவிடம் நிருபர்கள் இது பற்றி கேட்டபோது அது ஆ.ராசாவின் சொந்த கருத்து. எங்கள் தலைவர் இது போன்று எதுவும் சொல்லவில்லை என்று பதில் சொன்னார்.
Leave a comment
Upload