தற்சமயம் அங்கீகாரம் இல்லாத கல்வி நிறுவனங்களில் போலி வாக்குறுதிகளை நம்பி மாணவர்கள் சேர்வதும் பட்டங்கள் வாங்கிய பிறகு அங்கீகாரம் இல்லாத நிறுவனம், எனவே இந்தப் படிப்பு செல்லாது என்ற அறிவிப்பு தொடர்கதை ஆகிறது.
சமீபத்தில் கூட பல்கலைக்கழக மானிய குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் போலியானவை அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் என்று அறிவிப்பு மட்டுமே செய்தது. கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இணையதளத்தில் சோதித்து எந்தெந்த நிறுவனங்கள் போலியானவை என்று கண்டுபிடிப்பது சிரமம்.
போலி நிறுவனங்கள் என்று தெரிந்த பிறகு அவற்றின் மீது பல்கலைக்கழக மானிய குழு சட்டப்படி நடவடிக்கை எடுத்து இந்த ஏமாற்று பேர்வழிகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும். இதுதான் இவர்கள் பணியும் கூட. அதை விட்டு ஏமாறாதீர்கள் என்ற எச்சரிக்கை அறிவிப்பு எந்த தீர்வையும் தராது. சிகரெட் பாக்கெட்டில் புகை பிடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று குறிப்பிட்டிருப்பது போல் மது பாட்டிலில் குடி குடியை கெடுக்கும் என்று எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு ஒதுங்கிக் கொள்வது போல் தான் பல்கலைக்கழகம் மானியக் குழு எச்சரிக்கையும் இருக்கிறது. வெறும் அறிவிப்போடு நிறுத்திக் கொள்ளாமல் இந்த போலி நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும் இதுவும் அவர்கள் கடமைதான்.
Leave a comment
Upload