நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்
பாலியல் குற்றம் புரிந்த 23 பள்ளி ஆசிரியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதுடன் அவர்கள் கல்வி சான்றிதழையும் ரத்து செய்து இருக்கிறது. இதன் மூலம் அவர்கள் ஆசிரியர் பணி என்பதையே மறந்து விட வேண்டும். இந்த தண்டனை கடுமையாகத் தெரிந்தாலும் இதுதான் சரியான நடவடிக்கை என்பது உண்மை.
பள்ளியில் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களின் பாலியல் நடவடிக்கை ஆசிரியர் என்பதற்கே ஒரு அவமானம் என்பதுதான் நிதர்சனம். 238 பள்ளி மாணவியர் ஆசிரியர்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்ற விவரத்தையும் அரசு வெளியிட்டிருக்கிறது. முதலில் ஆசிரியர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் வகுப்புகளை அரசு நடத்தி ஆசிரியர் என்பவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதை எடுத்துச் சொல்லி அவர்களை ஒழுங்குபடுத்த வேண்டும். அப்போதுதான் இந்த குற்றம் முற்றிலும் தடுக்கப்படும்.
Leave a comment
Upload