விகடகவியார் உள்ளே நுழைந்ததும் "பாவம் எடப்பாடிக்கு கட்டம் சரியில்லை போல் தெரிகிறது" என்று ஆரம்பித்தார். "செங்கோட்டையன் என்ன செய்வார்" என்று நீங்கள் நினைக்கிறீர்கள் ? என்று நாம் கேட்டோம்.
அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் எடப்பாடிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த அழைப்பிதழில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை. இந்த விழாவுக்கு நேரில் அழைத்தவரிடம் செங்கோட்டையன் இதை சுட்டிக்காட்டி இருக்கிறார். இது அதிமுக விழா அல்ல, விவசாயிகள் சங்க விழா கட்சி சார்பற்றது என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
அந்த அழைப்பிதழில் எடப்பாடி படம் மட்டும் போட்டு இருக்கிறார்கள். இது போதாது என்று வேலுமணி பெயருக்கு கீழே அழைப்பிதழில் செங்கோட்டையன் பெயர் இருந்தது. செங்கோட்டையன் எம்ஜிஆர் காலத்திலேயே எம்எல்ஏவாக இருந்தவர். தனது சீனியாரிட்டியை மதிக்காமல் எடப்பாடி தன்னை புறக்கணிக்கிறார் என்ற கோபம் இருந்தது. அந்த விழாவை புறக்கணித்தார். அதன் பிறகு நடந்த எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் எனக்கு யாருடைய சான்றிதழும் தேவையில்லை ஜெயலலிதா தந்த சான்றிதழே போதும் என்று சொல்லி ஒரு கூட்டத்தில் ஜெயலலிதா செங்கோட்டையனை புகழ்ந்து பேசிய ஆடியோவை அந்தப் பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பி நான் என்றைக்குமே தொண்டன் தான் தலைவன் இல்லை என்று பேசியிருக்கிறார். அந்த கூட்டத்தில் எடப்பாடி பெயரை செங்கோட்டையன் சொல்லவில்லை" என்றார் விகடகவியார்.
" செங்கோட்டையன் அடுத்து என்ன செய்வார் திமுகவில் இருந்து முத்துசாமி, சேகர் பாபு ஆகியோர் பேசியதாக சொல்கிறார்கள் ? என்று நாம் கேட்டோம். வேண்டாம் என்று மறுத்து விட்டதாக சொல்கிறார்கள். திடீரென செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. எடப்பாடி சார்பாக சிலர் செங்கோட்டையினை தொடர்பு கொண்டு போலீஸ் பாதுகாப்பு நீங்கள் கேட்டீர்களா அல்லது அவர்களே போட்டார்களா என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். இப்போதைக்கு செங்கோட்டையன் எந்த முடிவும் எடுக்க மாட்டார் "என்றார் விகடகவியார்.
"இந்தப் பிரச்சனை போதாது என்று அதிமுக பொதுச்செயலாளர் ரெட்டை இலை சின்னம் ஒதுக்கீடு குறித்து ஓபிஎஸ் மகன் உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் விசாரிக்க அதிமுக உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வாங்கிய தடையை தற்சமயம் உயர்நீதிமன்றம் நீக்கி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்று சொல்லி இருக்கிறது" என்றார் விகடகவியார். "அதற்கு தேர்தல் ஆணையம் என்ன செய்யும் ? என்று நாம் கேட்க பாஜக என்ன சொல்லும் அதை செய்யும் என்று சொல்லி சிரித்தவர் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலை தான் பார்க்க வேண்டும். பொதுக்குழு, செயற்குழு, பொதுச்செயலாளர் ஆக எடப்பாடியை அங்கீகரித்து இருக்கிறது. வழக்குப் போட்டவர்கள் அதிமுக உறுப்பினர்களே இல்லை என்பது அவர்கள் வாதமாக இருக்கிறது. தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என்று பார்ப்போம் என்றார் விகடகவியார்.
"அடுத்த திமுக செய்திக்கு வாரும் "என்றோம்.
செந்தில் பாலாஜி விஷயத்தில் உச்சநீதிமன்றம் சொன்னதை முதல்வர் சீரியஸாக யோசிக்கிறார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுத்த நீதிபதியே அவசர அவசரமாக அவரை அமைச்சர் பதவியில் உட்கார வைக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார். ஒருவேளை ஜாமீன் ரத்து என்றால் தேவையில்லாத பிரச்சினை தான் வரும். எனவே செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து தற்சமயம் விலக்கி வைப்பது தான் நல்லது என்று முதலமைச்சருக்கு இந்த வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞர்களே யோசனை சொல்லி இருக்கிறார்கள். முதல்வரும் யோசிக்கிறார் என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
Leave a comment
Upload