நன்றி: தி எகானிமிக் டைம்ஸ்
(விகடகவிக்காக - அரஸ்)
தற்போது போட்டியிடுபவர்களில் பெரும்பாலோர் குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். தற்போதைய சட்டப்படி நீதிமன்றத்தால் சட்டப்படி தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க தடை, அதுவும் ஆறு ஆண்டுகள் மட்டுமே. ஆனால் குற்றப் பின்னணி வழக்கில் தொடர்புடையவர்களின் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
தண்டனை பெற்றவர்கள் கூட மேல்முறையீடு என்ற காரணம் காட்டி, அவர்கள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதால் மீண்டும் தேர்தலில் போட்டி போடுகிறார்கள். ஆனால், இது போன்ற வழக்குகள் ஆண்டு கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால் அவர்கள் கிட்டத்தட்ட தண்டனையிலிருந்து தப்பிக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். உச்சநீதிமன்றம் அரசியலில் கிரிமினல்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல முறை சொல்லி இருக்கிறது.
எம்பிக்கள் / எம்.எல்.ஏக்கள் தொடர்பான சுமார் 5000 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 42% மக்களவை உறுப்பினர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. தடை செய்யபட வேண்டியவர்களே சட்டம் இயற்றும் நாடளுமன்றத்தில் ஓருஅங்கமாக இருப்பது வெட்ககேடானது. எனவே இவர்கள் சம்மந்தமான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்பட்டு இவர்கள் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
Leave a comment
Upload