தொடர்கள்
பொது
"நீலகிரி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து உயர் நீதி மன்றம் நோட்டீஸ் " -ஸ்வேதா அப்புதாஸ்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை பொய்யாக்கியுள்ளனர் நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை

20250113145610590.jpg

பொங்கல் முடிந்த கையோடு தேசிய சாலை விரிவாக்கம் என்ற பேரில் ஊட்டி நகரின் வரவேற்பாக உள்ள பாரம்பரிய பூங்காவை சின்னாபின்னமாக்கி சாலை அமைக்கும் பணி தொடர , 150 வருட முக்கோண பழமைவாய்ந்த ஆடம் பவுண்டைன் மற்றும் மகாத்மா காந்தி சிலையை அப்புற படுத்தும் ஐடியாவை தொடர்ந்து அழகிய கான்க்ரீட் வளைவை இடித்து தள்ள கொதித்து எழுந்தனர் உள்ளூர் பாரம்பரிய இயற்கை ஆர்வலர்கள்.

20250113145643692.jpg

" எங்கள் வீட்டினுள் வந்து எப்படி பாரம்பரிய சின்னங்களை அப்புறப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை " என்று எதிர்ப்பு தெரிவிக்க எம் .எல் .ஏ கணேஷ் தலைமையில் கண்டன மறியல் நடத்த ஒரு சில ஊட்டியின் நாடித்துடிப்பு பத்திரிகையாளர்கள் எதிர்த்து கட்டுரை எழுத எதையும் காதில் வாங்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பாரம்பரிய சின்னங்களை அழிக்கும் பணியை தொடர....இந்த அழிவு பணியை தடுக்க அதிரடியாக சட்ட நடவடிக்கையை எடுத்தார் யானை ஜி .ராஜேந்திரன் !.

20250113145707151.jpg

நீலகிரி கலெக்டர் ,காவல் கண்காணிப்பாளர் , தேசிய நெடுஞ்சாலை டிவிஷனல் என்ஜினீயர் மற்றும் தமிழக தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு ஊட்டி பாரம்பரிய சின்னங்களை அப்புறப்படுத்தவோ , இடிக்கவோ கூடாது என்று உயர் நீதி மன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது .

20250113145739709.jpg

பிரிட்டிஷாரால் வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய சின்னமான 150 வயதை கடந்த ஆதாம் நீரூற்றை அப்புறப்படுத்தவும் அதை சுற்றியுள்ள அழகிய முக்கோண பூங்காவை குறைக்கும் திட்டம் .

20250113145807894.jpg

அதை சுற்றி தேவையற்ற விளம்பர பதாகைகள் , காவல்துறை அறிவிப்பு , சி சி டி வி கேமரா மற்றும் 'ஐ லவ் ஊட்டி' என்ற பிளாஸ்டிக் பாட்டில்களில் ஆன அவலமான மாடல் இவைகளை அப்புறப்படுத்தவேண்டும் .

20250113145900955.jpg

சர்ச் ஹில் சாலையில் உள்ள பழமைவாய்ந்த பூங்காவை பியர்த்தெடுத்து சாலை அமைத்து கொண்டிருப்பதையும் , பிரிக்ஸ் பள்ளி மாணவர்கள் தினமும் நடந்து செல்லும் நடைபாதையை இடித்து எடுத்துள்ளனர் .

20250113145924105.jpg

50 வருடமாக இருக்கும் மகாத்மா காந்தியின் உருவ சிலையை அப்புறப்படுத்தும் பணியை தடுத்து நிறுத்தவேண்டும் .

20250113145958170.jpg

இந்த தேவையற்ற வேலையை செய்ய கட்டுப்பாட்டுக்குள் உள்ள ஜே சி பி யை உபயோகிக்க கோர்ட் உத்தரவை மீறி சர்வசாதாரணமாக இந்த பகுதியில் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ராஜேந்திரன் .

ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் 2023 ஆம் வருடம் மே மாதம் ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை விதித்துள்ளது .

தற்போது ஊட்டி நுழைவாயிலில் உள்ள காந்தி சிலை ஆதாம் நீரூற்று மற்றும் அழகிய பூங்காவை அழிக்க மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலைக்கு உரிமை இல்லை என்று கூறியுள்ளார் .

20250113150108246.jpg

இது வரை இடித்த பூங்கா நடைபாதை , கான்க்ரீட் தடுப்பு சுவர் கட்டி கொடுக்கவும் மேலும் ஆதாம் நீரூற்று அதை சுற்றியுள்ள முக்கோண பூங்காவை அப்புறப்படுத்த மாட்டோம் என்ற உறுதியை எழுத்துப்பூர்வமாக கொடுக்காவிட்டால் உயர் நீதி மன்றத்தில் அவசர வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரித்துள்ளார் .

ஊட்டியில் மாவட்ட நிர்வாகம் , தேசிய நெடுஞ்சாலை துறையால் இடிக்கப்பட்ட பாரம்பரிய சின்னங்கள் சட்டப்படி வரலாற்று பொது மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்டுமானங்கள் தொல்பொருள் கலை பொக்கிஷங்கள் இந்திய சட்டம் 1972 யின் சட்டப்படி பாதுகாக்கப்படவேண்டியது என்று குறிப்பிட்டுள்ளார் .

20250113150354351.jpg

ராஜேந்திரன் ஏற்கனவே யானை பாதைகளை தடுத்து கட்டப்பட்ட முறையற்ற கட்டிடங்களை அப்புற படுத்த உயர் நீதி மற்றும் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதிர்வை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது .

இவரின் சட்டரீதியான நோட்டீசுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை என்ன செய்யப்போகிறது என்று உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர் பாரம்பரிய இயற்கை ஆர்வலர்கள் .