குயில் இனத்தை சேர்ந்த பறவைதான் இந்த செம்போத்து (Crow pheasant or Coucal). ஆனால் குயிலைப்போல காக்கையின் கூட்டில் முட்டை இடாது. கருப்பு நிற உடலில் இறக்கைகளின் மேல் பிரவுன் நிறம் பளீரென்று தெரியும். இந்த பறவை இனத்தில் நான்கு வகைகள் உள்ளதாக கூறுகின்றனர்ஆராய்ச்சியாளர்கள்.
முள்காடுகள், அடர்ந்த புதர்கள், புல்வெளிகள், மனித நடமாட்டம் உள்ளதோட்டங்களிலும் அதிகம் காணப்படும் ஒரு பறவையாகும். தரையில் இருந்துகொண்டே தன் இரையை தேடும் பழக்கம் கொண்டது. மரக்கிளைகளில்அமர்ந்துகொண்டு கிளைக்கு கிளை லாவகமாக தாவி சென்று தன் இரையைபிடிக்கும் திறமைசாலி இந்த பறவை.
சிறு பூச்சிகள், ஓணான், பல்லி, வெட்டுக்கிளிகள், நத்தைகள், சிறிய எலிகள், மற்றும் பிற பறவைகளின் முட்டைகள் என ப்ரோட்டீன் நிறைந்த சத்தானஉணவை உட்கொள்ளும் ஒரு பறவை இது. பிப்ரவரி முதல் செப்டம்பர்வரையான காலத்தில் முட்டை இடும்.
ஒரு பெரிய உருண்டை வடிவிலான கூட்டை, சுள்ளிகள் மற்றும் சிறுகுச்சிகளைக்கொண்டு கட்டும். கூட்டின் நடுவே இலை, தழைகளை போட்டுமெத்தை போன்ற அமைப்பை ஏற்படுத்தும். இந்த கூடுகள் வளைந்து நெளிந்தஒரு புதரின் அருகில் உள்ள கிளைகளில் கட்டும் இந்த பறவை.
ஒரு சமயத்தில் மூன்று முதல் நான்கு முட்டைகளை இடும். ஆண் மற்றும் பெண்பறவைகள் கூட்டாக சேர்ந்து குஞ்சுகளை பராமரிக்கும் வேலைகளை பகிர்ந்துசெய்யும்.
Leave a comment
Upload