தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20250114172301505.jpeg

அமைச்சர் பெரிய கருப்பன் துறையிலேயே இன்னும் பல கேள்விகள் இருக்கின்றன அண்ணாமலை.

அண்ணன் வந்து கேள்வியின் நாயகன் !!

தமிழகத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை ஏற்படுத்த வேண்டும் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்.

இப்ப நடமாடுவதே பெரிய பிரச்சனை ஆயிடுச்சு !!

தூத்துக்குடி பகுதியில் கொள்ளை அடித்த 38 பவுன் நகை பணத்துடன் போலீஸ்காரர் சிக்கினார்.

இதுதான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்களா ?

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு தோல்வியிலும் வெற்றி.

ஏதாவது தொகுதில டெபாசிட் கிடைச்சிருக்கும் அதைத்தான் சொல்றாங்க !!

தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது உச்சநீதிமன்றம்.

அப்படி இருக்கணும்னு டெல்லியில் இருந்து சொல்லி விடுகிறார்களே !!

பயிர் கடன் தள்ளுபடி குறித்து தவறான தகவல்களை பரப்புவதா அண்ணாமலைக்கு அமைச்சர் பெரிய கருப்பன் கண்டனம்.

அதானே எதுக்கு அவர் உண்மையை எல்லாம் சொல்றாரு ?

ஆளுநரும் ஆட்சியாளரும் கணவன் மனைவி போல் இருக்க வேண்டும் பிரேமலதா விஜயகாந்த்.

தமிழ்நாட்டில் ஜோடி பொருத்தம் சரி இல்லை !!

சீனா பத்தாண்டுகள் முன்னால் போய்க்கொண்டிருக்கிறது ராகுல்காந்தி.

உங்க கட்சிக்கு டெபாசிட்டே போய்க்கொண்டிருக்கிறது முதலில் அதை கவனிங்க !!

அவசர காலத்தில் பேச்சுரிமையை நசுக்கியது காங்கிரஸ் பிரதமர் மோடி.

இதேதான் திரும்பத் திரும்ப சொல்றீங்க உங்களுக்கே போர் அடிக்கலையா !!

'சீமானுக்கு பதில் சொல்றதே இல்லிங்க ' உதயநிதி ஸ்டாலின்.

ஆமாம் பெரியாரை விட்டுட்டு அப்புறம் உங்ககிட்ட வந்துருவாரு உஷார் ஆயிட்டீங்க !!

சத்திய ஞான சபை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது உடனடியாக நிறுத்த வேண்டும் அன்புமணி ராமதாஸ்.

மரங்களை வெட்டக்கூடாது நீங்க சொன்ன கரெக்ட்டா இருக்கும் ?

மத்திய அரசின் உதவியால் தான் கேரளா பிழைத்துக் கொண்டிருக்கிறது ஜார்ஜ் குரியன் மத்திய இணை அமைச்சர்.

இந்த விஷயம் உங்க ஊர் முதலமைச்சருக்கு தெரியுமா !!

கள்ள ஓட்டு போடுவது எளிதல்ல அமைச்சர் முத்துசாமி.

அனுபவஸ்தர் சொன்னா கேட்டுக்கணும் !!

வரும் தேர்தலில் பாஜகவை புறக்கணிக்க வேண்டும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

அப்ப நீங்க கூடுதலா கவனிக்கணும் பரவாயில்லையா !!

அனைத்து மாநிலங்களிலும் பாலியல் தொல்லை அதிகரிப்பு திருமாவளவன்.

தமிழ்நாடு மட்டும்ன்னு பேசாதீர்கள் என்று தலைவர் சொல்றாரு !!

2026 தேர்தலில் அரசு ஊழியர்கள் மாற்று முடிவை எடுப்பார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் உறுதி.

அப்போ நீங்களும் கூட்டணி பற்றி மாற்று முடிவு எடுக்கணும் போல தெரியுது !!

ஆண்டுக்கு ஒரு முறை 3000 சுங்க கட்டணம் மத்திய அரசு முடிவு.

அனேகமா மக்கள் நடராஜா சர்வீஸ் போயிடுவாங்க போல தெரியுது !!