ஜான்வி கபூர்
ஏற்கனவே ஜூனியர் என் டி ஆர்க்கு ஜோடியாக தேவாரப் படத்தில் நடித்த ஜான்வி கபூர், தற்போது ராம்சரண்க்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
நயன்தாரா
16 வருடங்களுக்கு பிறகு மம்முட்டி மோகன்லால் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தில் நயன்தாராவும் இணைந்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாராவும் மம்முட்டியும் பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் வெளியிட்டு இருக்கிறார்.
ரெட்ரோ
சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் ரெட்ரோ இந்தப் படம் மே முதல் தேதி வெளியாக உள்ளது. இதில் என் கதாபாத்திரம் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பெருமையாக பேசுகிறார் பூஜா.
லவ் மேரேஜ்
விக்ரம் பிரபு அறிமுக இயக்குனர் சண்முகப்பிரியன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்கு லவ் மேரேஜ் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். 120 வருட பழமையான வீடு ஒன்றில் இந்தப் படத்துக்காக சில காட்சிகளை படம் எடுத்திருக்கிறார்கள்.
ஹன்சிகா
பெரிய அளவு கதாநாயகி வாய்ப்பு வரவில்லை என்பதால் நடிகை ஹன்சிகா ஏதாவது முக்கிய கதாபாத்திரம் இருந்தால் ஓகே என்று இயக்குனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி இருக்கிறார்.
சுட சுட
அட்லி
ஹிந்தியில் அடுத்து இயக்குனர் அட்லி இயக்க இருக்கும் படம் மறுபிறவி பற்றிய கதையாம். இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகர்கள். ஒருவர் சல்மான் கான், இன்னொரு ஹீரோவாக ரஜினிகாந்தை நடிக்க வைக்க பேசிக் கொண்டிருக்கிறார் அட்லீ.
மாதவன்
ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இருக்கிறார் மாதவன்.
சாய் பல்லவி
சிம்புவின் 49-வது படத்தில் சிம்புவுக்கு கல்லூரி ப்ரொபசர் வேடம். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அகத்தியா
பாடலாசிரியர் பா.விஜய் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் அகத்தியா. இந்தப் படத்தில் ஜீவா, அர்ஜுன், ராஷிகன்னா, யோகி பாபு இது தவிர ஐரோப்பிய நடிகை மெடில் டா நடித்திருக்கிறார். இந்த மாதம் 28-ஆம் தேதி வெளியாகிறது.
Leave a comment
Upload