தொடர்கள்
கதை
நின்று போன நிச்சயார்த்தம் ஆனந்த் ஶ்ரீநிவாஸ்.

20250114235714557.jpg

அன்று ஞாயிறு மாலை பார்க்கில் ,நடைப் பயிற்சி மேற்கொண்டுருந்த என்னிடம் வேக வேகமா வந்த நண்பன் வேணுகோபால் ஒரு சந்தோச செய்தியாய் அவனுடைய மூத்த மகள் கவிதாவுக்கு திருமண பேச்சு ஒன்று கைக் கூடி வந்துள்ளது. அதான் லேட்டாகி விட்டது என்றான்.

தொடர்ந்து ,பேசும் போது ,”வரும் ஞாயிறு அன்று நிச்ச்யார்த்தம் நடக்கப் போகிறது.அவசியம் நீ வரணும் வெங்கிட்டு. என்று வேண்டுகோள் விடுத்தான்.

நானும் வேணுவும் பக்கத்து ஊர் பஞ்சு மில்லில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள். சொற்ப சம்பளம் தான். ஆனால் அது அவனுக்கு போதுமானதாக இருந்தது. குடும்பம் நடத்துவதற்கு.

எனக்கு மனைவி வீட்டில் வசதி. குழந்தைகளும் கிடையாது.

அவனுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் கவிதா .இளையவள் சித்ரா. கவிதா 30 வயது என்றாலும் , தோற்றம் காண்பிக்காது. அவளும் ஒரு தனியார் கம்பனியில் அக்கவுண்டன்ட். பீ. காம் முடித்தவுடன் சார்டட் அக்கௌன்ட் ஆகணும்

ஆசை. ஆனால் அது முடியவில்லை. இளையவள் நல்ல மார்க் என்பதால் என்ஜினீயரிங் படித்து கொண்டிருக்கிறாள்.

வேணுவும் ஓய்வுக்கு பிறகு ஜவுளி கடையில் பார்ட் டைம் வேலை. அம்மாவும் சித்ராவும் தையல் மூலம் சம்பாரித்து கொடுப்பதை .. கொண்டு குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது.

வந்த வரன்கள் ஏதோ ஒரு காரணித்தினால் தட்டு பட்டது

போதாத குறைக்கு ஜோசியர், “இப்ப ஒங்க பொண்ணு

கவிதாவுக்கு ராகு திசை 12 வயதில் ஆரம்பித்து உள்ளது.இன்னும் 18வருடம் பாடாபடுத்தி விடும் .

ராகு தசை நடக்ககும் போது நல்ல வரன் வருதுன்னு மீறி கல்யாணம் பண்ணி வெச்சிங்க ஒங்க பொண்ணு ஒங்க வீட்டுக்கே திரும்பி வந்துடும்” என்று பய முறுத்துவே, அந்த விஷயத்தை மூட்டை கட்டிவைத்தார். வேணுகோபால்..

ஆனாலும் மனதில் கவலை நிறையவே இருந்தது வேணு குடும்பத்துக்கு..

ஒரு வழியா ராகு தசை முடியவும் இந்த வரன் வரவும் சரியாக உள்ளது. ஜோசியர் சொன்ன படி நடக்குது என்று வேணு சந்தோஷப்பட்டார்.

முப்பது வயது முதிர் கன்னிக்கு

பெங்களூரிலிருந்து ஒரு வரன் வந்து பார்த்துவிட்டு போனதாகவும் வந்த வரனு க்கும் 35 வயது என்றாலும் இளமை தோற்றத்துடன் காணப்பட்டது மட்டுமன்றி சீர் வரதட்சனை ஏதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

“என் மச்சினன் மும்பை யில்ருப்பவனிடம் பேசும் போது விபரத்தை சொன்னேன் நிச்சயம் அன்று காலை வருகிறேன் மனைவியோடு .

அவன்தான் கல்யாண செலவுகள் செய்கிறான்.”

“நான் கூட வேண்டாம் என்றேன். ஒரு தாய் மாமாவாக என் பங்கு இதிலே இருக்கு. நீங்க பேசாம இருங்க என்று எனக்கு வாய் பூட்டு போட்டு விட்டான்.”

“மாப்பிள்ளை குடும்பத்தார் அக்கா ,கவிதா சித்ரா மற்றும் ஒங்களுக்கு நான் டிரஸ் வாங்கி வருகிறேன்.”

“நிச்சயம் முடிஞ்ச மறு வாரம் கல்யாணத்தை நடத் திடுவோம். என்று சொல்லி இருக்கிறான்.”

“ரொம்ப சந்தோசம் வேணு. கேக்கவே சந்தோசமாக இருக்கு.”என் பங்குக்கு நான்

“என்மச்சினன் கல்யாண மண்டபம் இருக்கல அதை என் மனைவி மூலம் பேசி முடிக்கிறேன். நீ பணம் கொடுக்க வேண்டாம் . சித்ரா எனக்கும் பெண் மாதிரி தான். என் கடமை கூட.” என்றேன்

“ரொம்ப தாங்ஸ்டா

அவசியம் வர ஞாயிறு காலையில நீயும் ஒன் மனைவியும் வந்துடங்க.”!

சரி என்று தலையாட்டிவிட்டு பார்ர்க்கை விட்டு வீட்டுக்கு வந்த நான் .என் மனைவியிடம் தகவல் சொன்ன பிறகு அவளே அவள் தம்பியிடம் மண்டபத்தை நண்பன் சொன்ன தேதிக்கு பிளாக் செய்ய சொல்லி இருந்தாள்.

பெங்களூரிலிருந்து ஒரு வரன் வந்துள்ளது. பெண்ணை பிடித்து போய், நீங்கள் வரதட்சனை எதுவும் செய்ய வேண்டாம்; என்று சொன்னதால் நிச்சயார்த்த விழா மிக எளிய முறையில் நடக்க நெருங்கிய நண்பர்கள் ,சொந்தங்கள் மட்டுமே அழைக்க பட இருக்கிறார்கள் .என்கிற விஷயத்தை சொல்லவும்

ஏழை பெண் என்பதாலும் ராகு தசை நடந்த தாலும் வரன் குதிராமால். இப்பாவது வந்த்தே என்று சந்தோச பட்டாள் என் மனைவி.

அடுத்த ஞாயிறு மதியமே வேணு வீட்டுக்கு ஆஜராகி விட்டோம் நானும் என்மனைவியும்.

நான்,பெண்ணின் தாய் மாமா வேணு மற்றும் நெருங்கிய சொந்தங்கள் கூடி பேசும்போது

பையனுக்கு 34 வயது என்றாலும் இளமை தோற்றத் துடன் தெரிகிறார்...பெங்களூரில் ஐ டி கம்பனி வேலை ;. ஒரே சகோதரி கல்யாணம் செய்து கொடுத்தாகி விட்டது;. பிடுங்கல் கிடையாது மேலும் பெங்களூரில் கவிதா படிப்புக்கு நல்ல வேலை வாங்கி தருகிறேன் என்று உத்திரவாதம் வேறு அளிக்கிறார். பரவாயில்லை முடிச்சுடலாம் என்று தீர்மானிக்க பட்டது.

நான்,பெண்ணின் தாய் மாமா வேணு மற்றும் நெருங்கிய சொந்தங்கள் பையன் குடும்பதுடன் மற்ற விஷயங்கள் பரிமாறிக்கொண்டோம்.

பெண்ணின் தாய் மாமா . தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வேலைப் பார்த்து ஓய்வு பெற்றவர்.அவர் உதவியால் தான் இந்த திருமணம் நடக்கவிருக்கிறது .

அவருக்கும் பையனை பிடித்து இருந்தாலும், நிச்சயம் செய்வதற்கு முன்பு வேலை சம்பளம் போன்றவற்றை கேட்டுவிட்டு ஒங்க சிபில் ஸ்கோர் பார்க்கணும் என்றார்.

எதற்கு சிபில் ஸ்கோர் பார்க்கணும். பையனை பிடிச்சிருக்கா ? வேலை, இருப்பிடம் ,சொந்த வீடா இதெல்லாம் தானே பார்க்கணும் விசாரிக்கணும்.

“அதையெல்லாம் தரகர் மூலம் விசாரிச்ச பிறகு தானே நீங்க சொல்லி நிச்சயம் பண்ண வந்தோம். பையனின் அம்மா கொஞ்சம் கோபமாக கேட்டார்.

“இல்லை !இல்லை! இப்ப பெண் வீட்டில் எவ்வளவு பவுனு

போ டுவீங்க என்று நீங்க கேட்கும் போது சம்பிரதாயமாக சில் விஷயங்கள் பேசி

தீர்த்துக்கறது நல்லது தானே ? . கவிதாவின் தாய் மாமா இப்படி சொல்லவும்,

முதலில் தயங்கிய மாப்பிள்ளை வீட்டார் பின்பு சரி என்று சொல்லவே அவரின் சிபில் ஸ்காரை பார்க்கும் போது

மாமா அவ்வளவு மகிழ்ச்சியடையவில்லை. சிபில் ஸ்கோர்

மிகவும் அடிமட்டத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வருங்கால மணமகனின் பெயரிலும், வெவ்வேறு வங்கிகளிலும் பல கடன்கள் கிரெடிட் கார்டில் வாங்கி செலவு செய்த பணம் திருப்பி கட்டாமல் வட்டி கு ட்டி போட்டு பெரும் தொகை இருந்ததைக் கண்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்ததார்கள்.

குறைந்த CIBIL மதிப்பெண் மோசமான கடன் வரலாற்றைக் குறிக்கிறது. இது பொதுவாக பணம் திருப்பி செலுத்த முடியாத நிலை சுமை, மற்றும் நிதி உறுதியற்ற தன்மையைக் குறிக்கிறது. என்று மாமா சொல்லவும் அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை.

.

மாமா தொடர்ந்து “ஒங்க வருமானம் மீறி நீங்கள் கடனில் தத்தளிக்கிரீர்கள் என்ன செலவு ஏன் இவ்வளவு கடன்? என்று நான் கேட்க போவதில்லை .ஒங்க கடனைஅடைக்க நீங்க பல வருஷம் ஒழைக்கணும்.

இப்ப ஒன்னும் வேணாம்ன்னு சொல்ற நீங்க , ஆறு மாசம் கழிச்சு எங்க வீட்டு பொண்ணை இங்கே அனுப்பி, ஒங்க அப்பாகிட்ட பணம் வாங்கிட்டு வா இல்லை ,நகை வாங்கிட்டு வா , அதோடு மனம் கொத்தி மாதிரி கல்யானதுக்கு தான் நகை ஒன்னும் போடலை, இப்ப வாங்கிட்டு வா, இல்லை ஒங்க மாமா வசதி தானே அவர் கிட்ட வாங்கிட்டு வான்னு வாழா வெட்டியா கவிதாவை திருப்பி அனுப்பி வைப்பீங்க..”

ஏற்கனவே எங்க வீட்டு பெண் பிறந்த வீட்டில்கஷ்டபட்டு கொண்டிருக்கும் போது, ஒங்க வீட்டுக்கு வந்து மீண்டும் கஷ்ட படவேண்டுமா?

Prevention is better than cure என்று ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு.

இந்த திருமண நிச்சயார்த்தம் இனி நடக்காது. நீங்க போகலாம்.

மாமா பேச்சு நெத்தி அடியாக இருந்ததால் ஏதும் பேசாமல்

பிள்ளை வீட்டார் தலை தொங்கியபடியே வீட்டை விட்டு வெளியேறினார்கள்.

கல்யாண நிச்சயம் போது அல்லது கல்யாணம் வேறு காரணங்களுக்காக நிறுத்தப்படும். என்பதை கேள்விப்பட்டிருக்கிறோம் .

ஆனால் முதல் முறையாக சிபில் ஸ்கோர் மிகவும் மோசமாக உள்ளது .எனவே மாப்பிள்ளை நிராகரிக்க படுவது நல்ல விழிப்புணர்வு என்று எனக்கு பட்டது.

இனி வரும் காலங்களில் இந்த சிபில் ஸ்கோர் திருமணங்களில் ஒரு காரணியாக மாறபோவது நிச்சயம்.