தொடர்கள்
கதை
ரௌத்திரம் பழகு. - ஆனந்த் ஶ்ரீநிவாஸ்

20250025002213192.jpeg

அந்த இரவு நேர துரித அஞ்சல் தலைமை அலுவலகம் வேலை செய்யும் ஸ்டாஃப்கள் எல்லோரும் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டார்கள்.
.சென்னையில் உள்ள எல்லாத் தபால் அலுவலகங்களுக்கு வரும் துரித தபால்களை வந்தவுடன்,அவைகளைப் பைகளில் கட்டி இந்த அலுவலகத்துக்கு அனுப்புவார்கள் .
அதே மாதிரி தமிழ் நாட்டில் உள்ள அனைத்து துரித தபால்களும் இங்கு வந்து அது பிரிக்கப்பட்டுத் தமிழ் நாடு மட்டுமல்ல பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்குப் பை கட்டி அனுப்பும் அலுவலகம்.
இது ஒரு ஹப் சென்டர் எனச் சொல்லலாம்.
என் சேம்பர் வெளியே 30 ஸ்டாஃப்கள் சுறு சுறுப்பாக வேலை செய்வதைக் கண்காணித்து ரிப்போர்ட் கொடுப்பது ஹெட் கிளர்க் வேலை.
டூ ட்டியில் சேர்க்கின்ற நாள் அன்று யாரு இந்த ஹெட் கிளார்க் நந்தகுமார்? .எப்படி இருப்பார்? நமக்கு ஒத்து போகும் நபராக இருப்பாரோ? இல்லை யூனியனில் முக்கியப் புள்ளியாக இருப்பாரோ?
ஆனால் அதே சமயம் யாராக இருந்தால் நமக்கென்ன? நான் சொல்லும் உத்தரவுகளைக் கேட்டு நடந்தால் சரி தான் என்று எண்ணி என் சேம் ம்பரில் வெயிட் பண்ணி கொண்டிருந்த சமயம் “வணக்கம் சார் “!என்று சொல்லிக்கொண்டே நுழைந்தார் அவர்.
பார்த்தவுடன் என் முகத்தில் 1000 வாட் பிரகாசம்.
இருக்காதா பின்னே ? . நானும் அவனும் மன்னார்குடி நேஷனல் ஹைஸ்கூலில் எஸ் எஸ் எல் சி வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
“நந்து நீயாடா இங்கே ஹெட் கிளார்க்?. எப்போ பங்களுருலிருந்து
வந்தே?.”
அவன் ஆர்மி போஸ் டாஃபசில் வட இந்தியா முழுவதும் வேலைப் பார்த்து விட்டு நாலு வருடம் முன்பு இங்கு வந்த தாகச் சொல்லவும் சந்தோஷப்பட்டேன்.
.
அவனும் என்னைப் பற்றிக் கேட்க நான் எப்படி உயர் அதிகாரியா ஆனேன் .என்று சொல்லிவிட்டு இரண்டு காபி ஆர்டர் பண்ணிவிட்டு வெளியே வந்து மற்ற ஸ்டாப் முன்னாடி நந்துவை ஹக் செய்த்ததும் எல்லோரிடமும் எங்கள் நட்பு பற்றிச் சொல்லி விட்டு எல்லா ஸ்டாஃப்களளையும் அறிமுகப்படுத்தினான்.
என் சேம்பர் திரும்பினேன்.
நந்து ஒரு சின்சியர் ஒர்க்கர்.
என்று எனக்குத் தெரியும் .
எனக்கு இனி கவலையில்லை. நல்ல வேலை செய்பவன் நந்து அவன் என் யூனிட்டில் இருப்பதால் அது எனக்குத் தெம்பு தான்.
கெமிஸ்ட்ரி ஒத்து போகும் ஸ்டாப் அமைவது ஒரு கொடுப்பினை. அந்த விதத்தில் நான்
அதிரிஷ் டகாரன் தான்.
நான் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் செட் விசிட் செய்து அவர்களிடம் ஒரு 5 நிமிடம் பேசிவிட்டு வருவேன் .அப்படி அவர்களிடம் நெருங்கி அவர்களைப் பற்றி விசாரி ப்பது மனோ தத்துவ ரீதியாக ஒரு நல்ல தீர்வுஎன்பதை அவர்கள் உணர்ந்தார்கள்..
வேலை நேரத்தில் அவர்கள் என்ன வசதி எதிர்பார்க்கிறார்கள்? என்ன மாற்றங்கள் வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் டின்னர் டைம் இரவு 0900 1000 மணி முடிந்தவுடன் 15 நிமிஷம் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அவர்கள் கோரிக்கை பரிசீலிக்க ஆவணச் செய்தேன்.
இன்னொரு செட் டை விட என் செட் target விட 20000 ஆர்டிக்கள் கூடவே காண் பதற்குக் காரணம் ஒவ்வொரு ஸ்டாப் இடம் ஒன் டூ ஒன் மீட்டிங், டீ கிளப் .
ரீ க்ரியேஷன் கிளப்பில் டின்னர் முடிந்து ஒரு மணி நேரம் இன் டோர் விளையாட்டு . வேலை நேரத்தில் அலுப்புத் தெரியாமல் இருக்க எஃப். எம் ரேடியோ பாட்டு இரவு 2 மணி வரை என ஏற்பாடு செய்து இருந்தேன். .
எந்த வித பிரச்சனையும் இல்லாமல் 12 மணிநேரம் ஸ்டாஃப்களை ஊக்க்கபடுதியது
டார்கெட் விட அதிக ஆர்டிகள் காண்பித்தது எப்போதும் மேலிடத்தில் என்னைப் பொறுத்து நல்ல பெயர். அதனாலேயேநான் கேட்ட வசதிகள் செய்து கொடுத்து இருந்தார்கள்
.
அருமையான ஹெட் கிளார்க் வேலை வாங்கும் திறன். இதெல்லாம் எனக்குச் சாதகமா இருந்தன.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த வேளையில், என் உடனடி பாஸ்க்கும் எனக்கும் ஒரு சின்னத் தகராறு விஸ்வரூபம் எடுத்தது .
எனக்கு ஒரு வருட சீனியர் என்பதால் அவரை அந்த அலுவலுகத்துக்குத் தலைமை பொறுப்பில் அமர்த்தி இருந்தது.
இன்னொரு செட்டில் வேலை பார்க்கும் சக நண்பரை இவர் கேள்வி கேட்பதில்லை.
இத்தனைக்கும் அவர் செட்டில டார்க ட் விடக் குறைவாகத் தான் இருக்கும்.
இருந்தாலும் மேலிடத்தில் எனக்கு நல்ல பேர் இருப்பது அவருக்கு மனதில் என் மேல் வன்மத்தை கொண்டிருந்தது..
அன்று நந்து இரவு 9 மணிக்கு என் சேம்பர் நுழைந்த போது கூடவே லக்ஷ்மி யும் நுழைந்தார்.
நந்து தான் சொன்னான்,” சார் இவங்களுக்கு ஓடம்பு சரியில்ல டின்னர் ப்ரேக் கூட ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டு வேலை செய்வதாகக் கூறுகிறார். ஒங்க பெர்மிஷன் வேண்டி உள்ளே அழைத்து வந்தேன்”
.நந்து சாதரணமாக யாருக்கும் சிபாரிசு செய்யமாட்டான். கடந்த மூன்று வருடமாக லக்ஷ்மி யின் ரெகார்ட்ஸ் target மேல் அதிகம். குட் ஒர்க்கர் என்பது எனக்கும் தெரியும்.
ஓகே பெர்மிஷன் granted. டேக் ரெஸ்ட்.என்று லட்சுமியை நந்துவையயும் அனுப்பி வைத்தேன்.
என் செட்டில யூனியன் செக்ரேடரி பாலு அவன் எப்போதும் இலாகாவுக்கு எதிரானவன். இவனுக்கு உள்ள டார் கெட் மட்டும் செய்வான். கூடுதலாகச் செய்யமாட்டான். இலாகா என்ன நல்லது செய்துள்ளது? என்று எதிர் வினா கேட்பான்.
ஆனாலும் என் நடவடிக்கைகள் அவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை.
ஆனாலும் ஈகோ ஒருவரை எந்த அளவுக்குக் கொண்டுவிடும் என்று அன்று தெரிய வந்தது.
அன்று லட்சுமிக்கு கூடுதல் ஒரு மணி நேர பெர்மிஷன் கொடுத்த விபரம் எப்படியோ கண்காணிப்பாளர் காதில் போய் அவர் என்னை மறு நாள் காலை 6மணிக்கு கூப்பிட்டு நடந்த விசயத்தைச் சொல்ல சொன்னார்.
“நீங்க ஏன் மெமோ கொடுக்கவில்லை. ? இதைப் பற்றிய அறிக்கை என் மெயிலுக்கு அனுப்பி விடுங்கள்” என்றார்.
நான் நந்துவிடம் கேட்டேன் எப்படி இங்கு நடந்த விஷயம் அவர் கவனத்துக்குப் போனது. எனக்கும் நந்துவுக்கும் பாலு மேல் தான் சந்தேகம்.
முன்பொரு முறை லக்ஷ்மியி டம் பாலு அத்து மீறி நடந்து அது பெரிய பிரச்சனையாகப் போய்க் கண்காணிப்பாளர் காப்பாற்றி யுள்ளார் என்று நந்து ஒரு முறை சொல்லியிருந்தான்.
ஆனாலும் லக்ஷ்மி அவமானப் படுத்த வேண்டும் என்று கங்கணம் கொண்டு இருந்தான் பாலு.அதற்கான சமயமோ இது?
இதைக் கேள்வி்பட்ட நான் ,”சரி நந்து இதைப் பற்றி ஒரு ரிப்போர்ட் எனக்குக் கொடுத்துவிடு”
நான் அந்த ரிப்போர்ட் வைத்து என்னுடைய விளக்கம் சேர்த்து அனுப்பி விடுகிறேன்.
மறு நாள் உங்க விளக்கம் சரியில்லை. உடனடியாக அந்த ஸ்டாப் இடமிருந்து விளக்கம் வாங்கவும். மேலும்
அன்று மாலை அவரை அஞ்சு மணிக்கு அதாவது யூனிட் ஆரம்பம் ஆவதற்கு முன் ஒரு மணி முன்பாகவே என்னையும் நந்தகுமாரையும் சந்திக்கும்படி மெயில் வந்துருந்தது.
நானும் நந்தகுமாரும் அன்று அஞ்சு மணிக்கே சே ம்பேர் நுழைந்தோம். எப்போதும் லேட் ஆக வரும் பாலு அன்று அவனும் செ ட்டில் இருந்தான். அவன் பார்வை எங்கள் மீதே இருந்தது.
“ஒங்க விளக்கம் ஒரு தலை பட்சமா இருக்கு;. மற்றவர்களுக்கு இது தப்பான முன்னுதாரணமாக இருக்கும்.”
எனவே அவருக்கு மெமோ கொடுத்து ஒரு இன்க்ரிமென்ட் கட் பண்ணுங்கள்.என்றார்.
“சாரி சார் அது என் யூனிட் நீங்கள் தலயிட நான் விரும்ப வில்லை.?
கொஞ்சம் வேகமாக என் பதில் இருந்தது.
இது மனிதாபிமானச் செயல் ,இதில் ஒன்றும் தப்பில்லை. மேலும் அவர் நல்ல வேலை செய்பவர். அவர் தினமும் அதிக ஆர்ட்டிக்ள் டார்கேட் விட ஸ்கேன் பண்ணுபவர்”
“நீங்க அப்படிச் செய்யாவிட்டால் நான் மேலடத் துக்கு ரிப்போர்ட் செய்யும் படி இருக்கும்” என்று என்னை அச்சுறத்தவே எனக்குக் கோபம் வந்தது. வாதங்கள் கடுமையான வார்த்தைகளாக வெடித்தன.
இந்த நேரத்தில் மற்ற ஸ்டாஃப்கள வர தொடங்கி இருந்தார்கள். அவர்கள் வேடிக்கை பார்க்க கூடினார்கள்.
“நான் ஒங்கள திருப்பி ஒரு கேள்வி கேட்கிறேன்.? இந்த மூணு வருடத்தில் என்னிக்காவது என் யூனிட்டில் எப்படி வேலை செய்கிறார்கள் என்றோ? அல்லது இன்னொரு யூனிட்டில் எப்படி வேலை செய்கிறார்கள் என்றோ நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் செய்தது உண்டா? “
இவ்வளவுக்கும் நடு இரவில் ஆபிஸ் வர ஜீப் கொடுக்கப்பட்டுள்ளது. அதை நீங்கள் இது வரை செய்யவில்லை இது உங்கள் தவறு இல்லையா?. இதை நான் மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்யட்டுமா? செய்தால் என்ன ஆகும் தெரியுமா? என் யூனிட் தான் அதிக ஆர்டிக்ள் டார்கெட் விட அதிகம் என்பது மேலி டத் துக்கும் தெரியும்.
நான் இப்படிக் கேள்வி கேட்பேன் என்று அவர் எதிர்பார்க்க வில்லை. வெளியில் கூடி இருந்த ஸ்டாஃப்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்
“ஏதோ நீங்கள் நேரில் வந்து பார்த்தது போல் பேச வந்துட்டீங்க .? ஒரு யூனியன் செக்ட்டரி பேச்சை கேட்டு நீங்கள் எடுத்த முடிவு சரியில்லை என் ஸ்டாப் உடல் நலம் மற்றும் அவர்களிடம் ஒரு வித நேசத் தோடு அணுகி, ஒன் டூ ஒன் மீட்டிங் போட்டு என் யூனிட் ஸ்டாஃப்களைச் சந்தோசமாக வைத்து உள்ளேன். அதில் கல் எறிய வேண்டாம்”.
வேகமாக நானும் நந்துவும் அவர் சேம்பரை விட்டு வெளியே வந்தோம்.
யூனியன் செக்ட்டரியை கையில் போட்டுக்கொண்டு என்னை அவமானப் படுத்தி வன்மத்தை காண்பிக்கலாம் என்று நினைத்த அவர் செய்கை நீரு பூத்த நெருப்பா போனது.
அன்று இரவே நடந்ததை மேலிடத்துக்கு நான் மெயில் கொடுக்க மறுநாள் அவருக்கு ஏன் மூன்று வருடங்கள் ஒரு இரவு கூடச் சர்ப்ரைஸ் விசிட் செய்யவில்லை? செய்யதாதன் காரணத்தைக் காட்டி அவருக்கு விளக்கம் கேட்டு மெயில் வந்து இருந்தது.