(படம் நன்றி ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ்)
ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடுவதாக அறிவிப்பு வரும் போதெல்லாம் இந்த முறை எந்த பொருளை குறி வைக்கிறார்கள் என்ற ஜிஎஸ்டி பயம் பொதுமக்களைத் தொற்றிக் கொள்கிறது. சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாப்கானுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் பழைய வாகனங்களை விற்க 18% ஜிஎஸ்டி என்பது உட் பட பல அறிவிப்புகள் வெளியாகின. அதே சமயம் இது மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று சொல்ல முடியாது. ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் என்பது எல்லா மாநில நிதியமைச்சர்கள் உறுப்பினர்களாக கொண்ட ஒரு அமைப்பு. அங்கு முடிவு செய்யும் எல்லா முடிவுகளும் மாநிலப் பிரதிநிதிகளின் ஒப்புதலுடன் தான் முடிவு செய்யப்படுகிறது. எனவே மத்திய அரசு மீது சொல்லப்படும் விமர்சனம் ஏற்றுக் கொள்ள முடியாதது.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்திய பிறகு வரி வருவாயில் 50 சதவீதம் மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மீதி 50 சதவீதம் மத்திய அரசு நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் நலத்திட்டங்கள் மாநிலங்களுக்கு தான் போய் சேருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.
அதே சமயம் 2023- 24 ஆம் தேதி ஆண்டில் 2.01 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை அரசாங்கம் கண்டிப்பாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்குப் பொறுப்பான அதிகாரிகள் அல்லது உடந்தையாக இருக்கும் அரசியல் தலைவர்கள் அடையாளம் கண்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வரி ஏய்ப்பையும் கட்டுப்படுத்த வேண்டும். இதுவும் அரசாங்கத்தின் கடமை தான். ஜிஎஸ்டி பற்றிய விமர்சனங்களை அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த சிக்கல்களை தீர்ப்பதற்கும் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும்.
Leave a comment
Upload