தொடர்கள்
விளையாட்டு
ஐபிஎல் ஏலம்

20241029183843264.jpeg

அடுத்தாண்டு நடைபெற உள்ள பதினெட்டாவது ஐபிஎல் தொடரை முன்னிட்டு சவுதி அரேபியாவில் ஐபிஎல் வீரர்களை விலைக்கு வாங்கும் ஐபிஎல் ஏலம் இரண்டு நாள் நடந்தது.

இதில் 13 வயதான வைபவ் சூரிய வன்ஷீயை ராஜஸ்தான் ராயல் அணி 1.10 கோடிக்கு விலைக்கு வாங்கியது. ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் பெற்றுள்ளார். இவர் பீகாரை சேர்ந்தவர்.

இதில் அதிகபட்சமாக விலை போனவர் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்து. இவரை 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. இவருக்கு அடுத்து அதிக விலை போனவர் ஸ்ரேயாஸ் ஐயர் இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி 26.75 கோடிக்கு வாங்கியது.

சன் குழுமத்தை சேர்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிக அளவு அதிரடி பேட்ஸ்மேன்களை விலைக்கு வாங்கி இருக்கிறது. முகமது ஷமி 10 கோடி, ஹர்சல் பட்டேல் எட்டு கோடி, இஷான் கிஷன் 11.25 கோடி, ராகுல் சாஹர் 3.2 கோடி, அதர்வாதைடே 30 லட்சத்துக்கு வாங்கி இருக்கிறது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.

சென்னை அணியான சிஎஸ்கே அணி மட்டும் வீரர்கள் தேர்வு நாங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை போல் அவர்கள் வீரர்களை தேர்வு செய்தார்கள். சிஎஸ்கே அணியின் உரிமையாளர் இந்தியா சிமெண்ட் சீனிவாசன் குடும்பத்தினர். அவர்கள் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை.

சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கலந்து கொண்டு தனது அணிக்கான வேலைகளை தேர்வு செய்தார். அதாவது காய்கறி கடைகளில் நல்லதாக பொறுக்கி எடுத்து வாங்குவது போல் வீரர்களை வாங்கினார் ஸ்டீபன் பிளமிங். சிஎஸ்கே அணிக்கு 20 வீரர்களை வாங்கினார்கள். அவைகள் எல்லாமே ஒவ்வொரு வீரர்களும் விலை சில கோடிகள் தான்.

அதிக விலை கொடுத்து வாங்கியது ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமது இவரது விலை 10 கோடி. அதேபோல் 2022 ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த முறை சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். அஸ்வின் அடிப்படை விலை இரண்டு கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கடும் போட்டிக்கு இடையில் சிஎஸ்கே அணி இவரை 9.75 கோடிக்கு வாங்கியது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை அணிக்கு திரும்பிருக்கிறார் அஸ்வின்.

மொத்தம் பத்து ஐபிஎல் அணிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர் இந்த ஏலத்தில் 527 வீரர்கள் பங்கேற்றார்கள். ஐபிஎல் ஏலம் தனியார் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒவ்வொரு வீரரையும் அணிகள் வாங்கிய பிறகு sold என்று போட்டு இவரை வாங்கி விட்டார்கள் என்று அறிவிப்பு செய்தார்கள். ஏதோ ஆடு மாடு வாங்குவது போல் ஐபிஎல் ஏலம் இருந்தது. எல்லாம் பணம் பணம் பணம் பணம் பேசுகிறது.