தொடர்கள்
அரசியல்
" வயநாடு மக்களின் அன்பால் கிடைத்த வெற்றி - பிரியங்கா .. - ஸ்வேதா அப்புதாஸ் .

நடந்து முடிந்த இடை தேர்தல்களில் வயநாடு தேர்தல் முடிவு என்பது நவம்பர் 13 ஆம் தேதியே நிர்ணயிக்க பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள் தொகுதி மக்கள் .

20241028232240740.jpg

பிரியங்கா காந்தி வத்ரா வின் வெற்றியின் முடிவு வாக்காளர்களின் மனதில் பதிந்து விட்ட ஒன்றாம் அது ஓட்டாக மாறி வரலாற்று சிறப்புமிக்க முடிவாக பிரதிபலித்தது என்கின்றனர் .

பிரியங்கா காந்தி தன் சகோதரரின் தொகுதியான வயநாட்டில் போட்டியிட்டு 6,22,338 வாக்குகள் பெற்று இமாலய வெற்றியை பெற்று நாட்டின் மிக முக்கிய அரசியல் தலைவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது .

காம்பிரிட் சத்யன் மோக்ரி பிரியங்காவிடம் 4,10,931 வாக்குகளை பறிகொடுத்துள்ளார் .

20241028232520401.jpg

பி ஜே பி வேட்பாளர் ஐ டி பொறியாளர் கோழிக்கோடு மாநகராட்சியின் மூன்று முறை கவுன்சிலர் நவியா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார் .

20241028232743271.jpg

வயநாட்டின் செல்ல பிள்ளை ராகுல் காந்தி

மிக பெரிய நிலச்சரிவு ஏற்பட்டபோது தன் சகோதரி பிரியங்காவுடன் ஓடோடி வந்து ஆறுதல் மற்றும் உதவி செய்ததை மறக்காமல் நன்றி கடனை வாக்காக செலுத்திவிட்டனர் .

கடந்த 23 ஆம் தேதி தன் மாபெரும் வெற்றி சான்றிதழை பெற்ற கையோடு தன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வலம் வந்தார் பிரியங்காவும் ராகுலும் .

2024102823301715.jpg

" என் வெறிக்காக தன் தொகுதியை விட்டுக்கொடுத்து என்னோடு பவனி வந்த ராகுல் மற்றும் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்கள் உணவு நேரம் எதையும் பொருட்படுத்தாமல் என் வெற்றிக்காக பாடுபட்டார்கள் அவர்களை மறக்க முடியாது .

என் அம்மா என் கணவர் ராபர்ட் மற்றும் என் இரண்டு நட்சத்திரங்கள் ரைஹான் , மிரயா அன்பையும் தைரியத்தையும் அவ்வப்பொழுது வைட்டமின் போல கொடுத்து கொடுத்துக்கொண்டிருந்தனர் .

என் பிரதர் ராகுலின் நம்பிக்கையான தைரியம் என் வெற்றியை நிர்ணயித்தது என்று கூறி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார் .