தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20241028194208573.jpeg

அவதூறாக பேசினால் வழக்கை சந்திக்கணும் மாஜி அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு.

வழக்கை சந்திக்க தயார் என்ற வாய்சாவடல்கள் எல்லாம் கூடாதாம் !!

மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் குறித்து பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் தான் முடிவு செய்வார் பாஜக அறிவிப்பு.

யார் ஆட்சிக்கு வரலாம்னு முடிவு செய்வதோடு ஜனங்கள் வேலை முடிஞ்சு போச்சு !!

அரசியல் அமைப்பில் உள்ளதை பின்பற்றாத அரசு இந்த தினத்தை கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது அகிலேஷ் யாதவ்.

ஊழலை ஒழிப்போம்னு சொல்லலையா ? ஒழிச்சோமா அதே மாதிரி தான் இது !!

மீனாட்சி அம்மன் கோயிலில் 29 பேர்கள் போலி கல்விச் சான்றில் பணி நியமனம்.

மீனாட்சி தாயே உன்னையே நீ தான் காப்பாத்தணும் போல தெரியுது !!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை கார்த்திக் சிதம்பரம்.

தேர்தலுக்கும் உங்களுக்கும் கூட சம்பந்தமில்லை அது திமுக பொறுப்பு !!

உலகமே இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கிறது, பிரதமர் மோடி.

இதை மணிப்பூரில் போய் சொல்லலாம் இல்ல?

தொடங்கிய முதல் நாளே முடங்கியது மக்களவை.

இதுக்கு பேரு தான் மக்களவையா ? முடங்கு அவை என்று பெயர் மாற்றலாம் !!

திமுகவை விமர்சித்து விஜய் பேசுவது தவறானது அல்ல இயக்குனர் நடிகர் பார்த்திபன் கருத்து.

கட்சியில் துண்டு போட்டு வைத்திருக்கிறாரோ !!

திமுகவோ அதிமுகவோ தனித்து நின்று வெற்றி பெறுவதோ ஆட்சி அமைப்பதோ சாத்தியமில்லை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கே.பாலகிருஷ்ணன் கருத்து.

இப்படி எல்லாம் பேசினா அறிவாலயத்தில் தேர்தல் செலவுக்கு பணம் தர மாட்டாங்க பரவாயில்லையா காம்ரேட் ?

பொய்யும் வஞ்சகமும் படுதோல்வி அடைந்தது பிரதமர் மோடி கருத்து.

அப்ப ஜார்க்கண்டில் படு வெற்றி எப்படி?

திராவிட இயக்க கருத்துக்களை மக்களுக்கு சொல்லுங்கள் முதல்வர் ஸ்டாலின்.

சொன்னா நம்ப மாட்டேங்கறாங்க தலைவரே ஓட்டுக்கு பணம் எப்போன்னு மட்டும் கேக்குறாங்க !!

ஜார்க்கண்டில் மதசார்பின்மைக்கு கிடைத்த வெற்றி முதல்வர் ஸ்டாலின் கருத்து.

தலைவரே மகாராஷ்டிராவில் மதசார்பின்மைக்கு டெபாசிட் போயிடுச்சு !!

மீண்டும் முதல்வர் ஆகிறார் ஹேமந்த் சோரன்.

அப்ப மீண்டும் சிறைக்குப் போவார் !!

மோடி பற்றி பேசினால் வராத கோபம் அதானி பற்றி பேசினால் பாஜகவுக்கு வருகிறது செல்வப் பெருந்தகை.

உங்களுக்கு கூட காமராஜர் பற்றி பேசினால் கோபம் வரமாட்டேன் என்கிறது ஸ்டாலின் பற்றி பேசினால் கோபம் வருகிறது இல்லையா அது மாதிரி தான் இது !!

சங்கி என்றால் நண்பன் என்று அர்த்தம்.

அண்ணன் ரஜினிய பார்த்ததிலிருந்து குழம்பி தான் போயிருக்காரு.

தாய் மொழியை விட்டு விலகும் இளம் தலைமுறை தமிழக அமைச்சர் மு.பெ. சுவாமிநாதன் வருத்தம்.

இஸ் இட் !!

கோவை விமான நிலையத்தில் மோதல் காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு.

கோஷ்டி சண்டைக்கு எந்த செக்ஷனில் வழக்கு பதிவு செய்வாங்க ?

மகாராஷ்டிரா பேரவை தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை ராகுல் காந்தி கருத்து.

நாலு ஐந்து இடத்தில் ஜெயிச்சாங்கல்ல அதை சொல்றாரு !!

பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி பீகாரில்

எல்லோருக்கும் கரெக்டா கணிச்சு சொன்னாரு அவருக்கு மட்டும் தப்பா கணிச்சுட்டாரு! !!!

டெல்லி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் ஒரு பெண் என்பதில் இன்று நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் டெல்லி துணைநிலை ஆளுநர்

ஆளுநரே அப்புறம் மாத்தி பேச மாட்டீங்களே !!