தொடர்கள்
நெகிழ்ச்சி
பாரத 'ரத்தன் டாட்டா' - பால்கி


2024919055417629.jpg

இவர் பாரதத்தின் தலை சிறந்த தொழிலதிபர்களில் ஒருவர். பாரதத்தின் முதன்மை தொழில் நிறுவனமான அனைத்து டாட்டா நிறுவனங்களுக்கெல்லாம் தலைவர்.

2024919061959732.jpg

அமெரிக்காவில் ஆர்க்கிடெக்சர் படித்தவர்.

டாட்டா நிறுவனங்களுக்குத் தலைமை வகுக்கும் டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருமானத்தில் 60 சதவீதம் டாடா தொண்டு நிறுவனங்களுக்கே செல்கிறது. இதனாலேயே உலகில் பணக்காரப் பட்டியலில் இவர் பெயர் அடிபடுவதில்லை. அதைப்பற்றி அவர் கவலைப்பட்டதுமில்லை.

கர்ணனின் கலியுக அவதாரமோ எனத்தோன்றுமளவிற்கு இவரது வாரி வழங்கும் வள்ளல் தன்மைக்கு பலப்பல உதாரணங்கள் உண்டு.

2020ல் கொரானாவை எதிற்க பாரத அரசின் முயற்சிக்கு 1500 கோடி ரூபாய் உடனேயே தந்திருக்கின்றார்.

தனது டாட்டா ஹோட்டல்களை கொரானா நோயாளிகளின் சிகிச்சைக்காக திறந்து விட்டிருக்கிறார்.

2024919061918355.jpg

மத்தியதர குடும்பங்களும் கார் வாங்கும் கனவை நனவாக்கிட ஒரு லட்ச ரூபாய்க்கு கார் செய்து விற்றிருக்கிறார். அந்த முனைப்பில் அவரது கொள்கைதான் வெற்றி கொண்டதே தவிர தொழில் முறையில் நஷ்டம் தான்.

2024919061428360.jpg

வாயில்லாத ஜீவன்களுக்கு வாய்ஸ் இவர் தான்

இப்படிப்பட்ட பன்முகங்களில் இவரது, தாத்தா காலத்திலிருந்தே விதைக்கப்பட்ட நமது பாரதத்தின் கல்வி, சுகாதாரம் போன்றவற்றிர்க்காக தனது தொண்டு நிறுவனங்கள் மூலமாக பிரதானமாக பங்காற்றும் .செயல் அபாரமானது. கூடவே தெரு நாய்கள் உட்பட நாய்களின் மீதான அபரிதமான அன்பு உலகையே வியக்க வைக்கிறது. வாயில்லா ஜீவன்களுக்கு வாய்ஸ் ஆக இருந்தவர்.

2024919060346154.jpg

ஒரு சமயம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இவரது சேவையப் பாராட்டி லைஃப் டைம் அச்சிவ்மென்ட் அவார்ட் கொடுக்க அழைத்திருந்தார். அன்று அவர் வளர்க்கும் நாய்க்கு ஜுரமாம். மனுஷன் போகவில்லாயே?விஷயம் தெரிந்ததும் இளவரசர் இளகிவிட்டாராம் ரத்தினத்தின் ஜீவ காருண்யம் கண்டு.

2024919060431921.jpg

[ரத்தன் டாட்டா வளர்த்த தெரு நாய் கோவா...அவரது உடலை விடாது சுற்றி வந்தது. சமீபத்தில் எஜமானரின் பிரிவைத் தாளாது தனது மூச்சையும் நிறுத்திக்கொண்டுவிட்டது]

தனது தாஜ் மஹால் ஹோட்டலில் தெரு நாய்கள் வந்தால் அதை விரட்டாது அன்புடன் பராமரிக்க உத்தரவிட்டிருந்தார்.

பாம்பே ஹவுஸ் மற்ற கூட்டு நிறுவனங்களின் தலைமையகத்தில் இருந்து வேறுபட்டது. காலனித்துவ கால கட்டிடத்தின் நுழைவாயிலில் பார்வையாளர்கள் ஒவ்வொருவரும் உற்றுப்பார்க்கும்போது, ​​தெரு நாய் ஒன்று அலட்சியமாக உலா வருவதைக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ரத்தன் டாடாவின் தலைமையிலான டாடா டிரஸ்ட்ஸ், தெற்கு மத்திய மும்பையின் மகாலக்ஷ்மியில் ஒரு முக்கிய இடத்தில் ஒரு சிறிய செல்லப்பிராணி மருத்துவமனையையும் கட்டியிருக்கிறது.

டாடா சன்ஸ் குழுமத் தலைவருக்காக ஆடம்பரமான பங்களாவை இருந்தும் ரத்தன் அதை ஆக்கிரமிக்கவில்லை. மாறாய், அவர் பதவியில் இருந்த அனைத்து ஆண்டுகளிலும், கொலாபாவில் உள்ள பக்தவார் அடுக்குமாடி குடியிருப்பில் அவரது வீடு எளிமையான இரண்டு படுக்கையறைகள் கொண்ட ஃப்ளாட் ஆகும்.

விலையுயர்ந்த போஸ் ஒலி அமைப்பைத் தவிர, ஆடம்பரமான பொருத்துதல்கள் எதுவும் அங்கு இல்லை.

ரத்தன் எப்போதும் விமான நிலையங்களில் வரிசையில் நின்று தனது சாமான்களை எடுத்துச் செல்வார்.

சுவாரஸ்யமாக, 1980களின் நடுப்பகுதியில் அவர் ஏர் இந்தியாவின் தலைவராக இருந்தபோது, ​​அவருக்கு விமானம் வரை (turmac) கார் எடுத்துச் செல்ல அனுமதியிருந்தும் என்றுமே செய்ததில்லை.

இருப்பினும், ஏர் இந்தியா வாரியத்தில் பணியாற்றிய அவரது இயக்குனர் ஒருவர், இதை வழக்கமாகச் செய்வதைக் கண்டு அவர் ஆச்சர்யப்பட்டாராம்!

அவரது சூட் உடைகள் அவரது சகாக்களைப் போல் வெளிநாட்டிலிருந்தல்லாமல் அவரது உள்ளூர் மும்பை கொலாபா தையல்காரரால் தைக்கப்பட்டவைதான் என்றால் அவரது அயல்னாட்டு மோகம் தான் எப்படி என்று கண்டுகொள்ளலாம்.

அவருக்கு விமானப் போக்குவரத்துக்கு துறையில் தனது நிறுவனம் ஈடுபட வேண்டும் என்றே விரும்பினார். ஏர் இண்டியா நிறுவனம் முதலில் டாட்டா உருவாக்கியதே.

2024919061008137.jpg

இந்திரா அதை தேசியமயமாகினார். உலகமயமாக்கலில் மீண்டும் அந்த துறையில் நுழைய ரத்தன் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.ஆனால் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தில் வணிகப் போட்டியாளரின் செல்வாக்கின் காரணமாக அவரது குழுவின் உரிமத்திற்கான விண்ணப்பம் கூடபல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேஜையடி பணம் கொடுக்க அவர் இசையவில்லை.

நெறிமுறைகளில் அந்த நம்பிக்கை மிக முக்கியமானது மற்றும் அவர் நெருங்கிய கூட்டாளிகளைக் கூட விடவில்லை.

டாடா ஃபைனான்ஸ் நிறுவனத்திற்குத் தலைமை தாங்கிய அவரது அதிப்பிரிய நிதி ஆலோசகர் திலீப் பென்ட்சே, தனது குழுவிற்குத் தெரிவிக்காமல் அவர் தொடர்பு வைத்திருந்த நிறுவனத்தில் பெரும் முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல், பென்ட்சே மீது குற்றவியல் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன. இத்தனைக்கும் அவர் ரத்தனுக்கு அதிப்ரியயமானவர்

2008 நவ 26 அன்று அவரது தாஜ் ஹோட்டல் பெருமளவு சேதமடைந்தது. அதன் புனர் நிர்மாணத்திற்காக உலகஅளவிலான டெண்டர்கள் வந்தபோது அவருக்கு அந்த புனர் நிர்மாண காண்ட்ராக்ட்டை பாகிஸ்தானுக்கு தரவேண்டும் என்ற மத்திய அரசு மந்திரி அளவிலான அழுத்தம் வந்திருந்தும் தனது நாட்டுப்பற்றுக் கொள்கையில் திடமாக இருந்தது இந்தியர்களுக்கு பெருமை மட்டுமல்ல பாடமும் கூட.

2024919061133812.jpg

[பாக்கிஸ்தான் தீவிரவாதி தாக்குதலில் சிதைந்து போன தனது தாஜ் ஹோட்டல் முன்பு அவர் அதை ஆய்வு செய்கிறார்]

இந்த தீவிரவாதிக தாக்குதலால் ஹோட்டலே மூடியிருந்த நிலையிளும் ஹோட்டல் வேலையாட்களின் சம்பளம் தவறாது கொடுத்தவர்.

ரத்தன் டாட்டாவின் நண்பர் கூறியது.

ஒவ்வொரு முறையும் நான் அவருடன் ஒரு உணவகத்தில் உணவருந்தும்போது, ​​நாங்கள் அமர்ந்த சிறிது நேரம் கழித்து, உணவகத்தின் மேலாளர் ரத்தன் டாட்டாவிடம் அவரின் காரின் சாவியைக் கொடுப்பாராம்.

இது என்ன என்று நான் கேட்டபோது, ​​ரத்தன் என்னிடம், தனது ஓட்டுநர்களின் வேலை நேரத்தை நீட்டிக்க விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் குடும்பங்கள் உள்ளன, மேலும் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் சரியான நேரத்தில் இருக்க வேண்டும் அல்லவா என்று கூறுவாராம்.

எனவே இரவு உணவிற்குப் பிறகு அவரே காரை வீட்டிற்குச் ஓட்டிச் செல்வாராம்.

இத்தகைய அன்பான குணங்கள் உடையவர் ரத்தினம் தானே.

இவரை இதுவரை பத்ம விபூஷணம் அழகு பார்த்தது.

202491906221168.jpg

அவருக்கு பாரத ரத்னா அவார்ட் கொடுக்க வேண்டும் என மஹாராஷ்ட்ர அரசு மந்திரிசபை சிபாரிசு செய்து மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

ரத்தன் டாட்டாவை விட பாரத ரத்னாவுக்கு தகுதியான சிபாரிசு வேறு யார் ????