தொடர்கள்
வலையங்கம்
வலையங்கம் ஒழுக்கத்தை சொல்லிக் கொடுங்கள்

2024919023412187.jpeg

சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநிலக் கல்லூரி மாணவர்களுடைய மோதல் என்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. பாடப் புத்தகங்கள் வைத்திருக்க வேண்டிய கையில் பட்டாகத்திகள் வைத்துக் கொண்டு, இரு கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பான சாலைகளில் மோதல் என்பது தொடர் கதையாக இருக்கிறது. விஷயம் இதுதான் இந்த இரண்டு கல்லூரிகளுக்கு இடையே யார் "ரூட் தல "என்ற போட்டி. இப்போது வன்முறையாக மாறிவிட்டது.

சென்ற வாரம் மாநிலக் கல்லூரியை சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

காவல்துறை, கல்லூரி பேராசிரியர்கள் தொடர்ந்து மாணவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் இந்த வன்முறை தொடர்கதையாக இருக்கிறது.

​மாணவர்களுக்கு பெற்றோர்கள் கல்லூரியில் சேர்வதற்கு முன்பு அவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். படிப்பை விட ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை மாணவர்கள் தெரிந்து கொண்டால் படிப்பு தானாக அவர்களுக்கு வந்து விடும். இது கல்லூரிகளுக்கும் பொருந்தும்.