தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

2024917182045284.jpeg

தொடர் ரயில் விபத்து ஏற்பட்டும், மத்திய அரசு பாடம் கற்கவில்லை ராகுல் காந்தி.

அவங்களும் உங்கள மாதிரி தான் தொடர் தோல்விக்கு பிறகும் நீங்கள் திருந்தினீர்களா !!

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் போக்கை மத்திய அரசு கைவிட வேண்டும் இரா.முத்தரசன்.

அனா காம்ரேட் நீங்க தமிழக அரசை எதிர்த்து தானே அதிகப் போராட்டம் நடத்துறீங்க !!

உலக நாடுகள் நம்மை உற்று நோக்குகின்றன பிரதமர் மோடி.

அடிக்கடி வெளிநாடு போறீங்களே எதுக்குன்னு கேட்டீங்களா !!

மக்களுக்குத் தேவையில்லாத 1500 சட்டங்களை நீக்கியுள்ளோம் அமைச்சர் எல்.முருகன்.

அதுக்கு பதிலா உங்களுக்கு தேவையான சட்டத்தை சேர்த்துட்டீங்களே !!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்.

அத விடுங்க இந்த நிவாரணத் தொகை எப்ப தருவீங்க அதை சொல்லுங்க !!

மகாராஷ்டிரா ஆளும் கூட்டணி அரசு மக்களிடம் கூறி வாக்கு கேட்கும் அளவுக்கு எதையும் சாதிக்கவில்லை என்பதே உண்மை சரத்பவார்.

நீங்க என்னன்னு சொல்லி வாக்கு கேப்பீங்க அத சொல்லுங்க !!

குஜராத்தில் போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை ஆளும் பாஜக அரசு அனுமதிக்கிறது காங்கிரஸ் குற்றச்சாட்டு.

இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும் தானே !!

காங்கிரஸின் முதல்வர், துணை முதல்வர், கட்சியின் தேசிய தலைவர் என அனைவரும் நில அபகரிப்பில் ஈடுபடுகின்றனர் பாஜக குற்றச்சாட்டு.

நில அபகரிப்பு அவர்கள் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டு இருக்கிறார்களோ என்னவோ !!

அமலாக்கத்துறை ஜார்க்கண்ட் அமைச்சரின் செயலர் வீட்டில் ரெய்டு.

சும்மா போய் வந்திருப்பாங்க எதிர்க்கட்சிக்கு அமலாக்கத்துறை பயம் போயே போச்சு !!

வெள்ள தடுப்பு பணிகள் வெள்ளை அறிக்கை தேவை எடப்பாடி.

தலைவரே எதுக்கு பார்த்தாலும் வெள்ளை அறிக்கை கேக்குறீங்க வெள்ளை அறிக்கையில் ஒண்ணுமே இருக்காது !!

தேர்தல் வாக்குறுதிகளில் இலவச அறிவிப்புகள் மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்.

நோட்டீஸ் மட்டும் தான் விடலாம் ஒன்னும் நடக்காது !!

உட்கட்சி பூசல் கூடாது தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை.

வெறும் எச்சரிக்கை மட்டும் தான் விட முடியும்.

ராகுல் காந்தி தன் ஆட்டத்தை 2029-இல் தொடங்குவார் தொல்.திருமாவளவன்.

ஒன்னும் அவசரம் இல்லை பொறுமையா தொடங்கட்டும் !!

உதயநிதியை முன்னிலைப்படுத்தி அமைச்சர்களை ஓரங்கட்டுவதா ? எடப்பாடி கண்டனம்.

தலைவரே அமைச்சர்களே அதுதான் விரும்புறாங்க !! அது தெரியாம நீங்க பேசிகிட்டு இருக்கீங்க !!

கால்வாய் முக துவாரங்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் முடிவடையும் துணை முதல்வர் உதயநிதி.

ஒன்னும் அவசரம் இல்லை பொறுமையாக செய்யுங்கள் !!.