தொடர்கள்
அரசியல்
கருத்துக்கதிர்வேலன்

20240827170032298.jpeg

திமுக - விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை திருமாவளவன் உறுதி.

பாவம் வாரத்துல எட்டு முறை இதையே சொல்றார்.

என்னைப் பொருத்தவரை துணை முதல்வர் ஆவதற்கு எல்லா தகுதிகளும் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பொன்முடி.

ஆமா ஆமா அப்படித்தான் சொல்ல சொல்லி இருக்காங்க !!

அத்வானி போல் அரசியலில் இருந்து மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா ? ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகாவத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்.

இப்போ ஆர்எஸ்எஸ்க்கு அந்த அளவுக்கு அதிகாரம் இருக்கிறதா தெரியலையே ?

சந்திரபாபு நாயுடு செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு திருப்பதியில் ஜெகன் வழிபாடு !!

மொத்தத்தில் லட்டு தான் பாவம் !!

நடிகர் விஜய் அரசியல் வரவு திமுகவை பாதிக்காது செல்வப் பெருந்தகை.

அவங்களுக்கு பாதிச்சா உங்களுக்கு பாதிச்சா மாறி !!

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் அமைச்சர் உதயநிதி.

மக்கள் அதுக்கும் காசு கேக்குறாங்க தலைவரே !!

ஒரே நாளில் மதுக்கடைகளை மூடி விடலாம் தொல். திருமாவளவன்.

ஒரே நாளில் கூட்டணி கதவு மூடிவிடலாம் பரவாயில்லையா !!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வங்க தேசத்தினர் ஊடுருவி வருகின்றனர் மத்திய வேளாண் துறை அமைச்சர்.

ஊடுருவி வந்த பிரதமரையே நம்ம பாதுகாப்பா வச்சிருக்கோம் இதெல்லாம் என்ன சொல்றீங்க !!

கெஜ்ரிவால் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், ஊழல் வாதியாக இருக்க முடியாது கெஜ்ரிவால்.

ஆனால் இதை நீதிமன்றம் சொல்ல மாட்டேங்குது !!

லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன் பிரகாஷ்ராஜுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் எச்சரிக்கை.

தெலுங்கு படம் எல்லாம் நடிக்கனும் இல்ல சீக்கிரம் மன்னிப்பு கேட்பார் கவலைப்படாதீங்க !!

செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்.

அப்போ கண்டிப்பா அமைச்சரவையில் மாற்றம் உண்டு !!

செந்தில் பாலாஜி என்ன தியாகம் செய்தார் சீமான் கேள்வி.

யாரையும் காட்டிக் கொடுக்காமல் இருந்தார் இதைவிட பெரிய தியாகம் என்ன வேண்டும் !!

திடீர் புளியோதரை , தயிர் சாதம் மாதிரி உதயநிதி என்ன திடீர் துணை முதலமைச்சரா எதிர்க்கட்சி துணைத் தலைவர் கேள்வி.

புளியோதரை தயிர் சாதம் உதயநிதி நல்ல ரைமிங்கா இருக்கு !!

புரட்சித் தமிழர் எடப்பாடி மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேச்சு.

அப்படியா ?