சமீப காலமாக தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை. முதலமைச்சர் தனது ஆட்சி சாதனைகள் எவ்வளவு பெருமை பேசிக் கொண்டிருந்தாலும் சட்டம் ஒழுங்கில் அவர் செயல்பாடு இதுவரை சறுக்கலில் தான் போய் கொண்டு இருக்கிறது .
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் திருவான்மியூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு நாட்களில் நான்கு கொலைகள் நடைபெற்றுள்ளன. கொலை செய்யப்பட்டவர்கள் கொலை செய்தவர்கள் இருதரப்பும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்று காவல்துறை சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல. இதேபோல் சில வாரங்களுக்கு முன்பு தாம்பரம் பகுதியில் ஆறு கொலைகள் அரங்கேறியது. அப்போதும் இரு தரப்பும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்ற சமாதானம் காவல்துறையால் சொல்லப்பட்டது.
இப்படி பட்டப் பகலில் நடக்கும் படுகொலைகள் மக்கள் சுதந்திரமாக நடமாட அச்சப்படும் ஒரு சூழ்நிலையை உருவாக்கும் என்பதை காவல்துறை தனது சௌகரியத்துக்காக மறந்து விடுகிறது.
போதை பொருளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதும் இது போன்ற படுகொலைகளுக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை காவல்துறை ஒப்புக்கொள்கிறது.
எனவே சட்டம் ஒழுங்கு என்பது மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஒரு சூழல் என்பதை காவல்துறையும் இந்த அரசும் புரிந்துகொண்டு கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்.
Leave a comment
Upload